Tomorrow rasi palan in tamil 2023-நாளைய (26 செவ்வாய்) ராசி பலன் அறியலாம் வாங்க..!

Tomorrow rasi palan in tamil 2023-நாளைய (26 செவ்வாய்) ராசி பலன் அறியலாம் வாங்க..!
X
நாளைய ராசி பலனை அறிவதன் மூலமாக நமக்கு ஏற்படப்போகும் இழப்புகளை தவிர்த்துக்கொள்ள வழிவகை ஏற்படும்.

Tomorrow rasi palan in tamil 2023

நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி மனிதர்களுக்கு இருந்துவிட்டால் கடவுள் மனிதர்களுக்கு தேவையல்லாதவராக போயிருப்பார். ஆனால் வேதத்தின் அடிப்படையாக விளங்கும் ஜோதிடம் நமது நாளைய பலனை அறிய வகை செய்கிறது. அவ்வாறு தெரியவருவதால் ஒரு நாள் முன்கூட்டி சில திட்டமிடுதலின் மூலமாக நம்மால் பல பிரச்னைகளை தீர்க்கமுடியும்.

நமது நாளைய தினத்தின் நற்பலன்களை நாம் அறியும்போது நம்முள் மகிழ்ச்சியும் உற்சாகமும் நமது மனதை பிரகாசமடையச் செய்யும். அது நமக்கு ஆயிரம் யானையின் பலத்தை தரும். நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

நாளைய தினத்தின்(26ம் தேதி செவ்வாய்க்கிழமை) சுப மற்றும் அசுப பலனை அறிந்து அதற்கேற்ப திட்டமிட பொதுவான நாளைய ராசி பலனை படித்து அறிந்துகொள்ளுங்கள். நாளைய நாள், இனிய நாளாக அமைய இன்ஸ்டாநியூஸ்-ன் வாழ்த்துகள்.

Tomorrow rasi palan in tamil 2023


மேஷம்

பொதுப்பலன்கள்:

இன்று உங்கள் எண்ணத்திலும் செயலிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அதனால் பல நல்லவை நடப்பதற்கான சூழ்நிலை காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் மனம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் காணப்படும்.

வேலை - தொழில்:

புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பணிச் சூழல் உங்களுக்கு சாதகமாக அமையும்.

காதல் -திருமணம்:

உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் நேர்மையாக பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் உங்கள் இருவரிடையே நல்ல புரிதல் ஏற்படும். காதல் உள்ளங்களுக்கும் நல்ல மகிழ்ச்சி ஏற்படும்.

பணம் - நிதிநிலைமை:

நிதிச் சூழல் திருப்திகரமாக இருக்கும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் பலன் தரக் கூடிய சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் இணையலாம். இது எதிர்கால நலனுக்கும் பயனுள்ளதாக அமையும்.

ஆரோக்யம்:

உங்களின் மன உறுதி காரணமாக இன்று நீங்கள் ஆரோக்யமாக உணர்வீர்கள். மன மகிழ்ச்சி உடல் ஆரோக்யத்தின் அடிப்படை என்பதை உணர்ந்தால் மகிழ்ச்சி நிலையாக இருக்கும்.

Tomorrow rasi palan in tamil 2023


ரிஷபம்

பொதுப்பலன்கள்:

இன்று மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு சாதகமான நாள் இல்லை. நீங்கள் பலன்களை தாமதமாகத் தான் எதிர்பார்க்க முடியும். இன்று எதையுமே அதிகம் எதிர்பார்த்தால் கிடைக்காது. அதற்கேற்ப திட்டம் வகுத்துக்கொள்வது நல்லது.

வேலை- தொழில்:

அதிக வேலைப்பளு உங்களுக்கு கவலையை அளிக்கும். அதனால் அந்த வேலைகளை முடிப்பதற்கு உங்கள் பணிகளை திட்டமிட்டு அதன்படி பணியாற்றுங்கள்.

காதல் - திருமணம்:

நகைச்சுவையாக பேசி உங்கள் துணையை மகிழ்ச்சியடையச் செய்து அவரை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் இருவரும் மனம்விட்டு வெளிப்படையாக பேசிக்கொள்ள வேண்டியது அவசியம்.

பணம் - நிதிநிலைமை:

நிதிநிலைமை வளமாக மகிழ்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை. இன்று கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.

ஆரோக்யம்:

உங்கள் தாயின் உடல் நலத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரிடலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.இருப்பினும் சமாளிக்கும் திறன் பெறுவீர்கள்.

Tomorrow rasi palan in tamil 2023


மிதுனம்

பொதுப்பலன்கள்:

இன்று அமைதியான எல்லோருடனும் ஒரு சகஜமான அணுகுமுறையை ஏற்படுத்துவது அவசியம் ஆகும். இன்றைய பலன்களை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஆன்மீக ஈடுபாடு சிறந்தது. அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வழிபாட்டு வாருங்கள்.

வேலை - தொழில்:

இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் முன் கூட்டியே திட்டமிட்டு செயலாற்றுவதன் மூலம் சிறப்பாக செய்து முடிக்கலாம்.

காதல்- திருமணம்:

குடும்ப பிரச்னை காரணமாக கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காணப்படும். இதனால் உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். ஆனாலும் இது மாறிவிடும். யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தால்தானே இனிய குடும்பமாக இருக்கும்.

பணம் - நிதிநிலைமை:

இன்று பயணத்தின் போது பண இழப்பு ஏற்படலாம். அதனால் அவசியம் ஏற்பட்டால் மட்டும் பயணத்தை தொடரலாம்.

ஆரோக்யம்:

இன்று ஆரோக்ய குறைவு ஏற்படலாம். உங்கள் கண்கள் மற்றும் பற்களுக்கு சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

அதனால் அதற்கேற்ப உடல்நிலையை பராமரிப்ப்பது அவசியம்.

Tomorrow rasi palan in tamil 2023


கடகம்

பொதுப்பலன்கள்:

இன்று முன்னேற்றகரமான நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள். குறைந்த முயற்சியிலேயே உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள்.

வேலை - தொழில்:

பணியிடத்தில் நிகழும் சந்திப்புகளில் உங்களின் சிறந்த கருத்துகளை பகிர்ந்து கொள்வதன் மூலமாக பலரது பாராட்டைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் உங்களைப் புகழ்வார்கள்.

காதல் - திருமணம்:

உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்வீர்கள். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதலும் மகிழ்ச்சியும் காணப்படும். இருவருக்கும் காதல் மகிழ்ச்சியாக வெளிப்படும்.

பணம் - நிதிநிலைமை:

இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் சேமிக்கும் தொகையும் அதிகரித்து காணப்படும்.

ஆரோக்யம்:

உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக இன்று நீங்கள் சிறந்த ஸ்திரமான ஆரோக்யத்தை பெற்று இருப்பீர்கள்.

Tomorrow rasi palan in tamil 2023


சிம்மம்

பொதுப்பலன்கள்:

இன்று ஆக்கப்பூரவமான பலன்கள் கிடைக்காது. உங்களிடம் தைரியமும் உறுதியும் குறைந்து காணப்படும். உங்களுக்கு உற்சாகமான போக்கு தேவை. சிறிய பயணம் அல்லது மாறுதல் இன்று உங்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழலை ஏற்படுத்தும்.

வேலை - தொழில்:

பணிச்சுமை காரணமாக பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால் தவறுகள் நேராமல் இருக்க நீங்கள் சிந்தித்து பொறுமையுடன், திட்டமிட்டு பணியாற்றுவது அவசியம்.

காதல் - திருமணம்:

பாதுகாப்பில்லாத ஒரு உணர்வு ஏற்படும் காரணமாக உங்கள் துணையுடனான உறவில் மோதல் போக்கு காணப்படும். இருவரிடையே நல்ல புரிந்துணர்வை தக்க வைக்க பக்குவமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

பணம் - நிதிநிலைமை:

இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். அதனால் இன்று பண இழப்பு அல்லது ஏதாவது செலவுகள் ஏற்படலாம்.

ஆரோக்யம்:

இன்று உங்களுக்கு கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த மருத்துவ சிகிச்சை மற்றும் யோகா மேற்கொள்வது நல்ல பலன் தரும். முறையான பயிற்சிகள் மூலமாக ஆரோக்யம் பெறலாம்.

Tomorrow rasi palan in tamil 2023


கன்னி

பொதுப்பலன்கள்:

இன்று சாதகமான பலன்கள் பெறவேண்டுமானால் புரிந்துணர்வுடனும் விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். கவனமற்ற வார்த்தைகள் பேசாத வகையில் உங்கள் வார்த்தை பயன்பாடுகளில் மிகுந்த கவனம் தேவை.

வேலை - தொழில்:

குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பது சாத்தியமில்லை. நீங்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். சமயோசித புத்தியை பயன்படுத்தி பணிகளை வெற்றிகரமாக முடிப்பது அவசியம் ஆகும். அதற்கேற்ப திட்டமிடுதல் அவசியம்.

காதல் - திருமணம்:

உங்கள் துணையுடன் பேசும்போதோ அல்லது காதலியிடம் பழகும் போததோ எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படும் சூழல் ஏற்படலாம். அதனால் அவர்கள் எதிர்வினையாற்றும் சூழல் வரலாம்.அதனால் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனம் வேண்டும்.

பணம் - நிதிநிலைமை:

இன்று வரவும் செலவும் சம அளவில் இருக்கும். பண இழப்பை தடுக்கவேண்டுமானால் பணத்தை கவனமாகக் கையாள்வது அவசியம்.

ஆரோக்யம்:

பதட்டம் ஏற்படுவதன் காரணமாக தலைவலி ஏற்படலாம். அதனால் பதட்டம் ஏற்படாமல் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்யத்தை பாதுகாக்கலாம்.

Tomorrow rasi palan in tamil 2023


துலாம்

பொதுப்பலன்கள்:

இன்று சாதகமான பலன்கள் கிடைக்க நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். நேர்மையான எண்ணங்கள் மூலம் தன்னம்பிக்கையை உருவாக்கலாம்.

வேலை - தொழில்:

இன்று அதிக வேலைகள் இருக்கும். அதனால் வெகு பணியில் மும்மரமாக இருப்பீர்கள். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் பணிகளை சிறப்பாக முடிக்க நீங்கள் கவனமாக பணியாற்ற வேண்டும்.

காதல் - திருமணம்:

உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, இருவரும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அமைதியாக இருப்பதன் மூலம் இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம்.

பணம் - நிதிநிலைமை:

இன்று பண வரவு போதுமான அளவில் இருக்காது. பண இழப்பைத் தடுக்க இன்று பணத்தை சாதுரியமாகக் கையாள வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தவேண்டும்.

ஆரோக்யம்:

பதட்டம் காரணமாக முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பிரார்த்தனை மேற்கொள்வது அல்லது தியானம் மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

Tomorrow rasi palan in tamil 2023


விருச்சிகம்

பொதுப்பலன்கள்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். நீங்கள் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நேரமாக இருக்கும்.

வேலை - தொழில்:

நீங்கள் சவாலான பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். சிறப்பாக திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் இது சாத்தியமாகும்.

காதல் - திருமணம்:

உங்கள் துணையுடன் சகஜமான, சந்தோசமான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். உங்களின் இந்த அணுகுமுறை காரணமாக உங்கள் துணையிடம் நம்பிக்கை பெருகும்.காதல் வலிமை பெறும்.

பணம் - நிதிநிலைமை:

பூர்வீகச் சொத்து மூலம் இன்று பண வரவு ஏற்படும். இன்று கணிசமான தொகையை சேமிப்பீர்கள்.

ஆரோக்யம்:

உங்களிடம் காணப்படும் ஆற்றல் மகிழ்ச்சியாக வெளிப்பட்டு அதன் காரணமாக இன்று உங்கள் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.

Tomorrow rasi palan in tamil 2023


தனுசு

பொதுப்பலன்கள்:

இன்று பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுபடுத்த வேண்டும். நம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி காணலாம்.

வேலை - தொழில்:

இன்று வேலைப்பளு அதிகமாகும். அதனால் தடுமாற்றம் இல்லாமல் உங்கள் பணிகளை கவனமாக செய்யவேண்டும். அதற்காக நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது.

காதல் - திருமணம்:

உங்கள் துணையிடம் குழப்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள்.அது வேலைப்பளுவால் ஏற்பட்ட மன உளைச்சலாக கூட இருக்கலாம். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

பணம் - நிதிநிலைமை:

இன்றைய பணப்புழக்கம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்காது. பணப்பற்றாக்குறை காரணமாக உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயலாமல் தவிக்கலாம்.

ஆரோக்யம்:

இன்று அசௌகரியம் காரணமாக சில ஆரோக்யப் பிரச்சினைகள் ஏற்படலாம். தூக்கமின்மை காரணமாக தோல் சம்பந்தமான பிரச்சினை காணப்படும். உங்கள் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

Tomorrow rasi palan in tamil 2023


மகரம்

பொதுப்பலன்கள்:

இன்று சோம்பலுடனும் தேவையற்ற மனக் குழப்பங்களுடனும் காணப்படுவீர்கள். நேர்மறையான எண்ணங்கள் மூலம் நன்மை காணலாம். தன்னம்பிக்கை ஏற்படும் வாக்கியங்கள் அல்லது கதைகளை வாசியுங்கள்.

வேலை - தொழில்:

இன்று அதிக வேலைப்பளு காணப்படும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு பெற இயலாது. ஆனால் வெளியை முடிக்கவும் வேண்டும். அதனால் திட்டமிட்டு செயலாற்றுங்கள்.

காதல் - திருமணம்:

குழப்பமான மனநிலை காரணமாக உங்களின் கசப்பான உணர்வை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். உறவில் நல்லிணக்கம் காண இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது.

பணம் - நிதிநிலைமை:

இன்று பண இழப்பு அலலது செலவுகள் ஏற்படலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

ஆரோக்யம்:

உங்கள் கண்களுக்கு கவனம் செலுத்த வேண்டிய நாள் ஆகும். சிறிய கண் குறைபாடுகள் ஏற்படலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

Tomorrow rasi palan in tamil 2023


கும்பம்

பொதுப்பலன்கள்:

உங்களின் துரதிர்ஷ்டம் காரணமாக மதிப்பு மிக்க வாய்ப்புகளை பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பீர்கள். கடைசி நிமிடத்தில் நல்ல வாய்ப்பை இழப்பீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.

வேலை - தொழில்:

முறையாக திட்டமிடுவதன் மூலம் மற்றும் கவனமாக பணியாற்றுவதன் மூலம் இன்று நீங்கள் பிழையின்றி பணியாற்றலாம்.

காதல் - திருமணம்:

உங்கள் துணையிடம் நீங்கள் உணர்ச்சிப் பூர்வமாக நடந்து கொள்வீர்கள். நீங்கள் நட்பான அணுகுமுறை கொள்வதன் மூலம் உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிக்க இயலும்.

பணம் - நிதிநிலைமை:

இன்று செலவுகள் அதிகரித்து காணப்படும். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதை கடினமாக உணர்வீர்கள்.

ஆரோக்யம்:

இன்று மிதமான ஆரோக்யம் காணப்படும். சளி அல்லது இருமல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் அதற்கு ஏற்ப தண்ணீர் பயன்படுத்துங்கள். மழையில் நனையாமல் இருங்கள்.

Tomorrow rasi palan in tamil 2023


மீனம்

பொதுப்பலன்கள்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும் நாள்.

வேலை - தொழில்:

பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வேலையின் செயல் திறன் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.

காதல் - திருமணம்:

சகஜமான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் உங்கள் துணையுடன் நல்ல புரிதல் காணப்படும். அதனால் மகிழ்ச்சி பெருகும்.காதல் வலிமை பெறும்.

பணம் - நிதிநிலைமை:

இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். இன்று சிறப்பாக சேமிப்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம் ஆரோக்யம்:

உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!