Tomorrow Kanni Rasi Palan-நாளை கன்னி ராசிக்கு என்ன பலன்..?

tomorrow kanni rasi palan-கன்னி ராசி நாளைய பலன்கள் (கோப்பு படம்)
Tomorrow Kanni Rasi Palan
நாளைய நாள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்துகொண்டால் அதற்கு ஏற்ப நமது முக்கிய செயல்களை திட்டமிட்டுக்கொள்ளலாம். சில நல்ல காரியங்களை செய்வதற்கு நமக்கு ஜோதிட அடிப்படை பக்கபலமாக இருக்கும். நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை வேதாந்த அடிப்படையில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Tomorrow Kanni Rasi Palan
கன்னி
நாளை (24ம் தேதி வெள்ளிக்கிழமை) உங்களுக்கு கவலையான நாளாக இருக்கலாம். உங்களுடைய கவலைகளை போக்குவதற்கு நீங்கள் தான் சிறந்தவர். நாம் செய்யும் தவறுகளே அந்த கவலைகளுக் காரணமாக இருக்கலாம். அதனால் உங்களுடைய வேலைகளை நீங்கள் சரி வர செய்தால் கவலைகளில் இருந்து நீங்கள் விடுபட வாய்ப்புள்ளது. உங்களுடைய அலுவலக பணிகளில் தவறுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் சற்று கவனமாக இருந்து செயல்பட வேண்டும். அலுவலக வேலைகளை கவனமாக கையாளுங்கள்.
இன்று செலவுகள் அதிகமாக இருக்கலாம்.
கன்னி நவம்பர் மாத ராசி பலனும் இதில் தரப்பட்டுள்ளது. இதையும் படித்து பயன்பெறுங்கள்
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. குடும்பத் தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கனிந்து வரும். உறவினர்களுடன் அனுசரித் துச் செல்வது நல்லது.
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணங் களின்போது கைப்பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். நண்பர்களிடம் எதிர் பார்த்த நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு நீண்டநாள்களாகச் செலுத்த நினைத்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
Tomorrow Kanni Rasi Palan
பிள்ளைகள் பிடிவாத மாக நடந்துகொள்வது மனதை சலனப்படுத்தும். கூடுமானவரை பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படுவார்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு காட்டுவார்கள். எதிர்பார்த்த பதவிஉயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
வியாபாரத்தில் தற்போது புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பெரிய அளவிலான முதலீடு களைத் தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் மாத முற்பகுதியில் அனைத்து விஷயங்களிலும் பொறுமை யைக் கடைப்பிடிப்பது அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக் கும். மாதப் பிற்பகுதியில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும்.
Tomorrow Kanni Rasi Palan
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை தரிசித்து வழிபடுவதன் மூலமும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலமும் பிரச்னைகளின் கடுமை குறையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu