இன்று ஆகஸ்ட் 3 ம் தேதி -ஆடி 18 ஆம் பெருக்கு - பாரம்பரிய பண்டிகை

இன்று ஆகஸ்ட் 3 ம் தேதி -ஆடி 18 ஆம் பெருக்கு -   பாரம்பரிய பண்டிகை
X
ஆடிப்பெருக்கு தொட்டது துலங்க உகந்த நேரம் 8.35 am to 9.00 am இதை பயன்படுத்தி கொள்ளலாம்.சகல வித ஐஸ்வர்யமும் கிடைக்கும்.ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு மாற்ற உகந்த நேரமும் இது தானுங்கோ

ஆடிப்பெருக்கு தொட்டது துலங்க உகந்த நேரம் 8.35 am to 9.00 am இதை பயன்படுத்தி கொள்ளலாம். சகல வித ஐஸ்வர்யமும் கிடைக்கும்.ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு மாற்ற உகந்த நேரமும் இது தானுங்கோ.


ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாகத் தமிழ் விழாகள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டும், கிழமைகளையும் கொண்டும் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

தென்மேற்கு பருவ காற்று பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவார்கள். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.


வாங்க வரலாறு பார்ப்போம்...


முன்னோர் கொண்டாடிய ஆடிப்பெருக்கு பற்றி தெரியுமா?

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18 ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். காவிரிக் கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம்.

ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு. நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று. இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடி 18-ல் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப் பதினெட்டு என்றும் சொல்வதுண்டு. பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளைஅடிப்படையாகக் கொண்டும் திதிகளை அடிப்படையாகக் கொண்டும் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18-வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுதான்.

தென்மேற்கு பருவ மழை காலத்தில் ஆற்றின் நீர்பிடிப்பு இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் வெள்ளம் பொங்கி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவார்கள். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே "ஆடிப்பட்டம் தேடிவிதை" என்ற பழ மொழியும் ஏற்பட்டதாம்.

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பார்கள். கோயில்களில் சென்று வழிபடவும் செய்வார்கள். இன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைப்பார்கள். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.


அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங் கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள். இதன் பின்னணியில் ஒரு புராணகதை உள்ளது தெரியுமா.

புண்ணிய நதியான கங்கை, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி பெருமாளிடம் வேண்டினாள். சுவாமி அவளிடம், காவிரியில் கலந்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளும்படி கூறினாராம். தனக்கு கங்கைக்கும் மேலான மகிமையை வழங்கியதால், ஆனந்தமடைந்த காவிரித்தாய், ஆரவாரத்துடன் காவிரிக்கரையில் பெருமாள் குடிகொண்டுள்ள தலங்களைத் தரிசிக்க பொங்கி வந்தாள்.

ஆதிரங்கமான ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), மத்திய ரங்கமான சிவசமுத்திரம், அந்திரங்கமான ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலுள்ள ரங்கநாதப் பெருமானைத் தரிசித்தாள். இந்த நிகழ்வே, 'ஆடிப்பெருக்கு' விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த நதியில் நீராடினால், நம் பாவங்களையெல்லாம் அவள் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.

காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ் பெற்றுள்ளது. தமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனால் மேட்டூர்- அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி-வேலூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பூம்புகார் பகுதிகளில் ஆடி பதினெட்டு அன்று விழாக் கோலமாக இருக்கும்.

ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம்.

தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை, ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

இந்த விழாவை 18-ந்தேதி கொண்டாட சில காரணங்கள் உள்ளன. 18 என்பது ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கும் எண்ணாகும். இந்நாளில் தீர்த்தமாடுவதன் மூலம், ஆன்மிக இன்பத்தில் திளைத்து, மன நிம்மதியைப் பெறலாம். இந்த எண், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும் தன்மையுடையது.

பதினெட்டு என்ற எண் 'ஜய' த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள், நதிக்கரைகளில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. எனவேதான், காவிரி அன்னைக்கு 'ஆடிப் பதினெட்டு'அன்று நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகின்றனர்.

ஆடிப்பெருக்கு தினத்தன்று நதிகளில் நீராடி மாங்கல்யக் கயிறை புதிதாகக் கட்டிக் கொள்வதன் மூலம், கணவருக்கு ஆயுள் பெருகும் என்பது ஐதீகம். எனவே ஆடிப்பெருக்கு விழாவை பெண்கள் மிக பக்திப்பூர்வமாக கொண்டாடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

அதோடு வருடம் முழுவதும் மங்களம் தங்க வேண்டும். என்று வேண்டிக்கொண்டு பூ, காதோலை, கருகமணி, மஞ்சள் கயிறு முதலியவற்றை ஆற்றில் சமர்ப்பிக்கிறார்கள். பல குடும்பங்களில்தாலி மாற்றும் சடங்கு நடைபெறுகிறது. அவ்வாறு செய்தால் கணவன் நீண்ட ஆயுளும், மனைவியின் மேல் மாறாத அன்பும் கொண்டிருப்பான் என்பது மக்களின் நம்பிக்கை.

ஆடிப்பெருக்கன்று எந்த வித செயலைத் தொடங்கினாலும் அது சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. புதிய படைப்புகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இது பொன்னாள். இந்நாள் நகை முதலான மங்கலப்பொருட்கள் வாங்க ஏற்ற நாளாக இருக்கிறது.

காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம்.

அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை...

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!