பல சிவ க்ஷேத்திரங்களில் வழிபட்ட புண்ணியம் கிடைக்க?

பல சிவ க்ஷேத்திரங்களில் வழிபட்ட புண்ணியம் கிடைக்க?
X
வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்.

'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னகத்தே கொண்ட லிங்கம் சில கோயில்களில் காணமுடிகிறது. மும்மூர்த்திகள் அரசமரத்திலும் இருக்கின்றனர். அதே போல் குத்துவிளக்கிலும் உறைகின்றனர். கோமாதாவிலும் இருக்கின்றனர்.

வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது

சைவத்தில் இருப்பது போலவே வைணவத்திலும் இந்த வில்வம் திருமகளுக்கு அர்ச்சிக்கப்படுகிறது. இலக்குமி விஷ்ணுவின் மார்பை அலங்கரிக்கிறாள். ஆகையால் திருவஹீந்திரபுர தாயாருக்கு வில்வ இலை அர்ச்சனை நடக்கிறது. கும்பகோண சக்ரபாணி கோயிலிலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ அர்ச்சனை நடக்கிறது.

வில்வ இலைக்கு ஒரு தனிச்சிறப்பும் உள்ளது. நாம் ஒருமுறைப் பூஜித்த பூக்களைத் திரும்பவும் உபயோகப்படுத்துவதில்லை. அவைகளை எடுத்துக்களைந்து விடுகிறோம். ஆனால் ஒருமுறை பூஜைக்கு உபயோகித்த வில்வ இலைகளை அலம்பி தூயமைப்படுத்தி மறுபடியும் பூஜைக்கு உபயோகப்படுத்தலாமாம். ஆனால் அதற்குரிய காலவரை ஒரு ஆறுமாதம் தானாம். ஆனால் இவைகள் சுத்தமான சூழ்நிலையில் வளர்ந்த மரங்களாக இருக்கவேண்டும். சுடுகாட்டின் அருகில் இருந்தாலும் சேர்க்கக்கூடாது. சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

அதுவும் ஞாயிறு அன்று வில்வத்தினால் அர்ச்சிக்க மிகச்சிறப்பாம். சோமவாரம் என்றுச்சொல்லப்படும் திங்கள் அன்று சிவனுக்குத் துளசியால் அர்ச்சிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வில்வமரத்தின் எல்லா பாகமுமே பூஜைக்கு உரியது ஆகிறது.

வில்வ இலை அர்ச்சனைக்கும், வில்வப்பழம் அபிஷேகத்திற்கும், மரத்தின் கட்டை ஹோமம் யாகத்திற்கும், வேர் மருந்துக்கும் உபயோகப்படுகிறது. வில்வபழத்தின் சதுப்பை நீக்கி உபயோகித்தப்பின், அதன் குடுப்பையைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீசூர்ணத்தையும், திறுநீற்றையும் ஒரு டப்பாப்போல் வைத்துக்கொள்கிறார்கள் பக்தர்கள். இதனால் மருத்துவக்குணம் அதில் கலக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

சிவன் என்பது நெருப்பு. நாம் நெருப்பாக சிவன் இருக்கும் அண்ணாமலை க்ஷேத்ரத்தைப் பார்க்கிறோம். இந்த நெருப்பாய் சுடும் இடத்தில் சூட்டைத்தணிக்க வில்வ இலை உதவுகிறது. அரச மரத்தைப்பூஜிப்பது போலவே வில்வ மரத்தையும் பூஜிப்பது வழக்கம். வில்வமரத்தை வழிப்பட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கிறதாம்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself