நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்லலாமா? எது சரி?

தஞ்சாவூர் பெரிய கோவில் நந்தி
நந்தியின் காதுகளில் நமது வேண்டுகோளை சொல்வதன் மூலம் நமது குறை நீங்கிவிடும் என்றும் நமது வேண்டுகோள் நிறைவேறிவிடும் என்று எண்ணுவது சரியானதா ?
பிரதோஷ நேரங்களில் நந்தியின் காதில் நம் கோரிக்கைகளை சொல்வது மிகவும் தவறானது. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுவது என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவன் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது. உங்களது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம்.
அதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டுகோளைச் சொல்கிறேன் என்று நந்தியின் காதுகளில் அவரது தியானத்தை கலைக்கும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்றாகும்.
நமது கோரிக்கைகளை நேராக இறைவனிடம் சொல்லுவதே சரியான முறையாகும். இதன் மூலம் நந்தியினை தொந்தரவு செய்யமாலும் நமது பிரார்த்தனை நிறைவேறவும் இது வழிவகுக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu