ரஜ்ஜு பொருத்தம் இல்லைன்னா திருமணம் செய்யக்கூடாது..!

Jathagam Porutham Online Tamil
Jathagam Porutham Online Tamil
இப்போதெல்லாம் ஜாதகங்கள் ஆன்லைன் வழியாக பார்க்கிறார்கள். நிறைய ஜோதிட அமைப்புகள் இலவசமாக ஜாதக குறிப்புகளை வழங்குகின்றன. இருப்பினும் நேரடியாக நாம் கேள்விகளை கேட்டு பெறும் தெளிவு இதில் எல்லோருக்கும் கிடைக்காது.
திருமண பொருத்தத்தை நாம் வேறு விதங்களில் குறிப்பிடும்போது ராசி பொருத்தம் மற்றும் நட்சத்திரப் பொருத்தம் என்று குறிப்பிடுகிறோம். இவை இல்லாமல் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்கு ஒரு வழியும் உண்டு. அதுவும் திருமண ஜாதகப்பொருத்தம் பார்க்கும் வழக்கத்தில் உள்ளது. ஜாதக பொருத்தம் என்பது மணமக்களின் பிறந்த ஜாதகத்தை மையமாக வைத்து ஜாதகப் பொருத்தத்தை பார்ப்பார்கள்.
ஜாதகப் பொருத்தம் மற்றும் ராசி நட்சத்திர பொருத்தம் ஆகியவற்றில் இந்த பத்து பொருத்தமும் அடங்கும். இந்த பத்துப் பொருத்தத்தில் குறிப்பாக ஐந்து பொருத்தம் இருந்தாலே மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அந்த முக்கிய ஐந்து திருமண பொருத்தம் பற்றி பார்ப்போம் வாங்க.
திருமணத்திற்கு தேவையான முக்கிய பொருத்தங்கள்
தினப் பொருத்தம்
கணப் பொருத்தம்
ராசி பொருத்தம்
யோனி பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம்
மேற்கண்ட ஐந்து பொருத்தம் இல்லை என்றால் ஜாதகம் பொருத்தம் இல்லை எனக் கூறி அந்த திருமணம் தவிர்க்கப்படுகிறது.
இந்த ஐந்து பொருத்தத்தில் கட்டாயமாக இரண்டு பொருத்தமாவது அவசியம் இருக்க வேண்டும். இந்த இரண்டு பொருத்தத்தை தவிர்க்கவே கூடாது.
யோனி பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம்
மேற்கண்ட இரண்டு பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யக்கூடாது.
பத்துப் பொருத்தமும் திருமணமும் என்பதை விரிவாகப்பார்ப்போம் வாருங்கள் :-
தினப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 2,4,6,8,9,11,13,15,18, 20,24,26 நட்சத்திரங்கள் வந்தால் தினப் பொருத்தம் உண்டு.
கணப் பொருத்தம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி நட்சத்திரங்களை மூன்று கணங்களாக பிரித்திருக்கிறார்கள். அவை தேவ கணம், மனித கணம் மற்றும் ராட்சச கணம்.
ஆண் பெண் நட்சத்திரங்கள் ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு.
ஒருவருடைய நட்சத்திரம் தேவ கணமாக இருந்து மற்றவருடைய நட்சத்திரம் மனித கணமாக இருந்தால் அவர்களுக்கு மத்தியமான பொருத்தம் உண்டு.
ஒருவருடைய நட்சத்திரம் ராட்சச கணமாக இருந்து மற்றவருடைய நட்சத்திரம் மனித கணமாக இருந்தால் பொருத்தம் இல்லை.
ஆண் நட்சத்திரம் ராட்சச கணமாக இருந்து பெண் நட்சத்திரம் தேவ கணமாக இருந்தால் அவர்களுக்கு மத்தியமான பொருத்தம் உண்டு.
மணமக்களின் வாழ்வில் மங்களம் பெருக இந்த கணப் பொருத்தம் மிகவும் அவசியமாகும்.
மகேந்திர பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் எண்ணி வரும்போது ஆண் நட்சத்திரம் 1,4,7,10, 13,16,19,22,25 ஆக வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு.
இந்த மகேந்திர பொருத்தத்தின் பலன் புத்திர விருத்தி.
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் தொடங்கி எண்ணி வரும்போது ஆண் நட்சத்திரம் 13க்கு மேலாக இருந்தால் பொருத்தம் உண்டு. அதே 7க்கு மேலானால் மத்தியமான பொருத்தம் உண்டு.
இந்த ஸ்திரீ தீர்க்கப் பொருத்தத்தின் பலன் மணப்பெண் ஆயுள் விருத்தி மற்றும் தம்பதிகள் வாழ்க்கையில் இன்பம் பெற இந்தப் பொருத்தம் அவசியம்.
யோனி பொருத்தம்
நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உள்ளது. இதை அடிப்படையாக வைத்து யோனி பொருத்தம் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண் பெண் நட்சத்திர மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் பொருத்தம் இல்லை என்பது பொருள். அதாவது பகை என்பது குடும்பத்திற்கு ஆகாது. இனிய இல்லறம் நடக்க தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்ய ஒற்றுமை தேவை. அதனால்தான் இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
ஆண் பெண் இருவருக்கும் ஒரே யோனியில் அமைந்தால் பொருத்தம் உண்டு. அதே வேறு யோனியில் அமைந்தால் மத்தியமான பொருத்தம் உண்டு.
அதே பகையாக ஆண் பெண் யோனி இருப்பின் பொருத்தம் இல்லை என்பது பொருள்.
இந்த யோனி பொருத்தத்தின் பலன் அன்யோன்ய அன்பை குறிக்கிறது.
ராசி பொருத்தம்
பெண் ராசி முதல் ஆண் ராசி வரை எண்ணினால் 9 ராசிக்கு மேலாக இருப்பின் பொருத்தம் உண்டு. 8 ஆம் ராசி கூடாது.
இதன் பலன் வம்சாவளி ஆண் விருத்தி மற்றும் வம்ச விருத்தி மற்றும் மன ஒற்றுமையை குறிப்பிடுகிறது.
ராசி அதிபதி பொருத்தம்
பெண் ராசி அதிபதியும் மற்றும் ஆண் ராசி அதிபதியும் நட்பாக இருந்தால் பொருத்தம் உண்டு. அதே பகையாக இருந்தால் பொருத்தம் இல்லை என்பது பொருள்.
மணமக்கள் இருவரும் மனம் ஒத்த தம்பதியராக வாழ்நாள் முழுவதும் இனிமையாக இருக்க இரு வீட்டாரின் நல்லுறவும் அவசியம். இந்த ராசி அதிபதி பொருத்தமானது சம்பந்திகளின் நட்பு மற்றும் ஒற்றுமையைக் குறிக்கிறது. அதற்குத்தான் இந்த ராசி அதிபதி பொருத்தம் பார்க்கிறோம்.
வசிய பொருத்தம்
மணமக்களுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், அது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் அவசியமாகும். அப்பொழுதுதான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்பட்டு இருப்பர்.
ரஜ்ஜு பொருத்தம்
பத்து பொருத்தத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்த ரஜ்ஜு பொருத்தம்
பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தால் கூட ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த ரஜ்ஜு பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர்.
இந்தப் பொருத்தத்தின் பலன் தீர்க்க சுமங்கலியாக மனைவி இருக்க இந்த ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது.
வேதைப் பொருத்தம்
வேதை என்றால் ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று பொருளாகும். வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது. வேதைப் பொருத்தம் என்பது மாங்கல்ய பலத்தை குறிப்பிடுவது.
ஆண் மற்றும் பெண்ணின் நட்சத்திரம் ஒன்றுக்கொன்று வேதை இல்லாமல் இருந்தால் அதை வேதைப் பொருத்தம் உண்டு என்கிறோம்.
பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் வேதை நட்சத்திரமாக இருந்தால் திருமணமான பிறகு அவர்களது வாழ்க்கையில் சண்டை சச்சரவு ஏற்படக்கூடும்.
மணமக்களுக்கு வேதை பொருத்தம் சரியாக அமைந்து விட்டால் அந்த தம்பதிகளின் வாழ்க்கையில் எந்த காலத்திற்கும் துன்பம் வராமல் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும்.
கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வராமல் இருப்பதற்காக இந்த வேதை பொருத்தம் பார்க்கப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu