Tamil Jathagam Kattam Pdf-ஜாதக கட்டம் அவசியமா? அது எப்படி இயக்கம் பெறுகிறது?

Tamil Jathagam Kattam Pdf-ஜாதக கட்டம் அவசியமா? அது எப்படி இயக்கம் பெறுகிறது?
X

Tamil Jathagam Kattam Pdf-ஜாதக கட்டம் விளக்கம். (கோப்பு படம்)

இந்த பதிவில் ஜாதக கட்டம் விளக்கத்துடன் லக்கினம், திரிகோணம், கேந்திரம் என்றால் என்ன என்பதையும் அறிந்துகொள்வோம் வாருங்கள்.

Tamil Jathagam Kattam Pdf

பொதுவாக ஜாதகம் என்பது பிறந்த நேரம் மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் எழுதப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக ராசிக்கட்டம் அமைப்பார்கள். அந்த ராசிக்கட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களும் சுழற்சி முறையில் நகரும். அந்த நகர்வுக்கு ஏற்ப ஜாதகரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் கணிக்கப்படுகின்றன.

Tamil Jathagam Kattam Pdf

ஜாதக கட்டம் விளக்கம்

ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஜோதிடர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு வீடு என்பார்கள். லக்கினம் ஜாதக கட்டத்தில் “ல” என்று குறிப்பிட்டு இருக்கும். அது எங்கு உள்ளதோ அதுவே முதலாம் வீடு மேஷ ராசி அதிலிருந்தே 2,3,…12ஆம் வீடு வரை மற்ற கிரகங்களில் அமைப்புகளை கணக்கிடவேண்டும்.

லக்கினம், திரிகோணம், கேந்திரம் என்றால் என்ன?

திரிகோணம்

திரிகோணம் என்பது லக்கினத்திலிருந்து 1, 5, 9 ஆகிய வீடுகள் ஆகும்.

Tamil Jathagam Kattam Pdf

கேந்திரம்

கேந்திரம் என்பது லக்கினத்திலிருந்து 1 , 4 , 7, 10 ஆகிய வீடுகள் ஆகும்.

மறைவு ஸ்தானம்

இதில் மறைவு ஸ்தானம் என்பது 3, 6, 8, 12 ஆகும். பொதுவாக இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் பலம் குறைந்து காணப்படும். இருப்பினும் இதில் சில கிரகங்களுக்கு விதி விலக்கு உண்டு.

எடுத்துக்காட்டாக சுக்ரன் 12ஆம் வீட்டில் இருந்தால் மறைவாகாது. மாறாக நல்ல பலன்களையே தருவார் அதுபோல சூரியன் 3, 6 ம் வீட்டில் அமைவதாகும்.

Tamil Jathagam Kattam Pdf

இதில் முதலாம் வீடு திரிகோண அமைப்பும் பெறுகிறது கேந்திர அமைப்பும் பெறுகிறது. ஆதலால் முதல் வீட்டில் எந்த கிரகம் நின்றாலும் அது மிகுந்த பலத்துடன் இருக்கும். கேந்திர திரிகோண அமைப்பாகும்.

2 மற்றும் 11 ஆம் வீடுகளில் இருந்தால் நல்ல பலனையே தரும். இதில் 11ஆம் வீட்டில் சுபர் பாவ கிரகங்கள் எவை இருந்தாலும் நன்மையை மட்டுமே செய்யும்.

3 ஆம் வீடுகளில் கிரகங்கள் அமைவது சுமாரான பலன்கள் தரும்.

6 ,8 ,12 ஆம் வீடுகளில் கிரகங்கள் அமர்வது அவ்வளவு சிறப்பித்து சொல்ல முடியாது. சுப கிரகங்கள் இந்த வீடுகளில் இருந்தாலும் அதனால் ஜாதகருக்கு நல்ல பலன்களை வழங்க முடியாது. இருப்பினும் மேற்கூறியவாறு இதில் விதி விளக்கு உண்டு சுக்ரனுக்கு மட்டும் 12ஆம் வீடு மறைவு வீடாகாது. அதுபோல சூரியன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளில் அமர்வது நல்லதே. மேலும் 6, 8, 12 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பின் பலன்கள் மாறுபடும்.

Tamil Jathagam Kattam Pdf

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால் அல்லது மறைவு வீடுகளில் இருந்தால் பகை கிரங்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தாள் அந்த கிரகம் சரியாக இல்லை என்று பொருள்.

ஒவ்வொரு லக்கினத்தையும் நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள் என்று வரையறுத்து வைத்துள்ளனர்.

நெருப்பு ராசிகள்

மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசிகள்

நிலம் ராசிகள்

ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவை நிலம் ராசிகள்

காற்று ராசிகள்

மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை காற்று ராசிகள்

Tamil Jathagam Kattam Pdf

நீர் ராசிகள்

கடகம் விருச்சிகம், மீனம் ஆகியவை நீர் ராசிகள்.


லக்கினங்களை சரம், ஸ்திரம், உபயம் என்று வகைப் படுத்தலாம்.

சர ராசிகள்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியன சர ராசிகள்.

ஸ்திர ராசிகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியன ஸ்திர ராசிகள்.

உபய ராசிகள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன உபய ராசிகள்

ஜாதக கட்டம் விளக்கம் :

கட்டம் 1 : ஒருவரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் ல/ என்று போடபட்டிருக்கும் லக்ன கட்டம் தான் முதல் வீடு ஆகும். ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் மற்றும் ஆளுமை திறன், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை சார்ந்தவற்றை குறித்து காட்டுகிறது. மற்றவர்கள் அவரை பார்க்கும் விதம் எப்படி இருக்கும்? தனிப்பட்ட பெருமைகள், விழிப்புணர்வு ஆகியவற்றை குறிக்கிறது. அவர் வாழ்க்கையில் எந்த இடத்திற்கு செல்வார்? எந்த நாட்டில் இருப்பார்? அவருடைய குணாதிசயம் எப்படிப்பட்டது? என்பதை சொல்லி விடும்.

கட்டம் 2 : ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் கட்டம் என்பது குடும்பம், வாக்கு, தனம் ஆகியவற்றை குறிக்கிறது. குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், பேசும் திறன் இவற்றை பற்றி சுலபமாக கூறி விடும். நல்ல கிரகங்கள் இந்த கட்டத்தில் இருந்தால் நல்ல பலன்கள் இருக்கும். தீய கிரகங்கள் இருந்தால் பலன்களும் அது போல் தான் இருக்கும்.

கட்டம் 3 : மூன்றாம் கட்டம் என்பது உங்களுக்கு அடுத்து பிறக்கும் சகோதரம், தைரியம், வெற்றி, அண்டை வீட்டார், பயணம், தகவல் தொடர்பு, இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை பற்றி சொல்லிவிடும். இங்கே அமர்ந்திருக்கும் கிரகத்தினுடைய ஆற்றல் எப்படி பட்டதோ அப்படி பட்டவராக நீங்கள் இருப்பீர்கள். செவ்வாய் மிகவும் தைரிய கிரகம் ஆவார். எனவே ஜாதகரும் வீரமிக்கவராக இருப்பார். சனி பகவான் மந்தன் ஆவார். எனவே சனி இருந்தால் சோம்பேறியாக இருப்பார்கள். கிரகங்களின் பார்வை பலத்தை வைத்து இந்த வழியில் பலன்கள் அமையும். தீய பார்வை பட்டால் சகோதரருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.

கட்டம் 4 : நான்காம் கட்டம் தாயாரை குறிக்கும். கல்வி, வீடு, வாகனம், சொத்துக்கள், பொது வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் நாலில் செவ்வாய் இருந்தால் எப்படியும் வீடு யோகம் உண்டு. எனினும் நல்ல கிரகங்கள் அமைந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பலம் இருந்தாலோ நல்ல பலன்கள் கிடைத்து சொத்து சுகத்தோடு இருப்பார்கள். தீய கிரகங்கள் இருந்தால் தாயாருக்கு ஆபத்து நேரலாம். தாயன்பு கிடைக்காமல் போகலாம்.

கட்டம் 5 : ஐந்தாம் கட்டமானது புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். குழந்தை பாக்கியம் பற்றியும், போன ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களை பற்றியும் குறிக்கும். காதல் திருமணமா? என்பதை கூறிவிடும். கலைத்துறை மற்றும் ஆன்மீக நாட்டம் முதலியவற்றை குறிப்பது. இங்கு எந்த கிரகம் இருந்தாலும் அதன் தசா புத்திகேற்ப அந்த கால கட்டத்தில் தோஷங்கள் உண்டாகும்.

கட்டம் 6 : ஆறாம் கட்டம் நோய், கடன், தாய் மாமன், கவலைகள், தொழில், எதிரிகள் போன்றவற்றை குறிக்கும். ஆறாம் வீட்டில் சரியான கிரகங்கள் இல்லாவிட்டால் உடல் நலனில் பிரச்சனைகள் இருக்கும். கடன் தொல்லைகள் இருக்கும். வேலையில் பிரச்சனைகள் உண்டாகும். தசா புத்திகேற்ப அந்த கால கட்டத்தில் இதில் மாறுதல்களை உண்டாகும்.

கட்டம் 7 : ஏழாம் கட்டமானது திருமணம், வியாபாரம், மரணம் போன்றவற்றை குறிப்பன. இங்கு தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது அவைகளின் பார்வை பலம் இருந்தாலோ திருமணத்தில் தடை ஏற்படும். வியாபார வளர்ச்சி இருக்காது, மரணம் சாதாரணமாக இருக்காது.

கட்டம் 8 : எட்டாம் கட்டம் ஆயுள், அவமானம், கண்டம் போன்றவற்றை குறிக்கும். எட்டில் இருக்கும் ராசியாதிபதி லக்னத்திலிருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்களும் இருக்கும். எட்டாம் வீட்டில் சனி மற்றும் குரு இருந்தால் தீர்க்காயுள் கிட்டும்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!