இன்று சுபிட்சம் தரும் குருவார பிரதோஷம்

இன்று சுபிட்சம் தரும் குருவார பிரதோஷம்
X
இன்று சுபிட்சம் தரும் குருவார பிரதோஷம், மாத சிவராத்திரி, குபேர கிரிவலம்

கார்த்திகை மாதத்தின் குருவாரத்தில், அதாவது வியாழக்கிழமையில் பிரதோஷ பூஜையை கண்ணாரத் தரிசியுங்கள். குடும்பத்தில் எல்லா நல்ல விஷயங்களும் நடந்தேறும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் அமோகமாக நடைபெறும். இனிமையாகவும் குதூகலத்துடனும் வாழ்வீர்கள்.

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம்.

எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நலமும் வளமும் தரும் கார்த்திகை மாதத்தில், பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வியாழக்கிழமை நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத் தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், மாலைவேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்குச் செல்லுங்கள்.

குருவாரம் என்பதால் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி நந்திதேவர், சிவபெருமான், முதலானோரை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம். இந்த சமயத்தில், சிவாலயத்தில் உள்ள நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.

அதேபோல், செவ்வரளி, வில்வம், அருகம்புல் கொண்டு நந்திதேவருக்குச் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள்.

அபிஷேகப் பொருட்கள்

பிரதோஷ காலத்தில் அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும். பால் வாங்கித்தர நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கித்தர தன லாபமும் வளங்களும் உண்டாகும். தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கித்தர விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தர செல்வம் பெருகும். நெய் வாங்கிக் கொடுத்தால் முக்தி பேறு கிடைக்கும். இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கித் தர சுகமான வாழ்வும் சர்க்கரை தர எதிர்ப்புகள் மறையும். சந்தனம் வாங்கித்தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.

குருவார பிரதோஷத்தில் மறக்காமல் தரிசனம் செய்யுங்கள். அபிஷேகப் பொருட்களும் பூக்களும் வழங்குங்கள். இன்னும் முடிந்தால், தயிர்சாதம் வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையையே குளிரச் செய்துவிடுவார் தென்னாடுடைய சிவனார்!

இன்று குரு வார பிரதோஷ நன்னாளில், தென்னாடுடைய சிவனை மனதார வேண்டுங்கள். உங்கள் குறைகளையும் உலக மக்களின் குறைகளையும் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

அற்புதமான பிரதோஷம் நாளில், சிவனாரை வணங்குவோம்.பசுக்களுக்கு உணவளிப்போ ம். பிரதோஷ பூஜை வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றுங்கள். அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு, அபிஷேகத்துக்கு பொருட்கள் வழங்குங்கள். வில்வம் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தக் கொடுங்கள்.

உலகுக்கே படியளக்கும் சிவனார், நம் வாழ்க்கையின் சிக்கல்களையும் பிரச்சினை களையும் தீர்த்தருள்வார். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருள்வார் தென்னாடுடைய சிவனார்.

தென்னாடுடைய சிவனே போற்றி.

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!