தெற்கு பார்த்து வீடு கட்டலாமா..? வாஸ்து என்ன சொல்கிறது..? பார்க்கலாம் வாங்க..!

தெற்கு பார்த்து வீடு கட்டலாமா..? வாஸ்து என்ன சொல்கிறது..? பார்க்கலாம் வாங்க..!
X

south facing house vastu in tamil-தெற்குப்பார்த்த வீடு.(கோப்பு படம்)

South Facing House Vastu in Tamil-இந்த காலத்தில் வீடு கட்டறதே பெரிசு.தெற்குப் பார்த்து வீடு கட்டலாமா கூடாதா என்பதை பார்க்கலாம் வாங்க.

South Facing House Vastu in Tamil-தெற்கு நோக்கிய வீட்டு வாஸ்து விதிகள் தெற்கு திசை நோக்கி கட்டப்பட்ட வீடுகளுக்கு பொருந்தும். தெற்கு நோக்கிய அத்தகைய வீடுகள் நேர்மறை ஆற்றல்களை உருவாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்காது.

ஆகவே தெற்கு நோக்கிய வீட்டை வாங்க கூடாது என்ற கருத்து வீடு வாங்குவோர் மத்தியில் பொதுவாக காணப்படுகிறது. இருப்பினும், வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, ஒரு வீட்டுக்கு மோசமான திசையமைப்பு என்று எதுவும் இல்லை. மேலும் நீங்கள் வாஸ்து சாஸ்திர விதிகளைப் பின்பற்றி அம்மாதிரியான தெற்கு நோக்கிய வீட்டை கட்டலாம். வீட்டை கட்டும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் அனைத்து திசைகளை நோக்கிய சொத்துக்களும் அதிருஷ்டமானவைதான்.

அம்மாதிரியான தெற்கு நோக்கிய வீடுகளை வாஸ்து சாஸ்திர விதிகளோடு ஒன்றிணைப்பதான் மூலமாக முழுமையடையச்செய்யலாம் என்று தெற்கு நோக்கிய வீடுகளின் வாஸ்து சாஸ்திரம்கூறுகிறது.

தெற்கு நோக்கிய வீட்டு வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் மற்ற அனைத்து கதவுகளையும் விட பிரதான வாயில் கதவு மிகப்பெரிய கதவாக இருக்க வேண்டும். மேலும் பிரதான வாசல் நான்காவது பாதத்தின் மையத்தில் இருந்து சற்று தென்கிழக்குப் புறமாக கட்டப்பட வேண்டும்.

தெற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து: பிரதான நுழைவாயிலுக்கான குறிப்புகள்

தெற்கு நோக்கிய சொத்துக்களில் நேர்மறையான ஆற்றல் ஓட்டத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது நுழைவாயில்தான் என்று வாஸ்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, வீட்டின் உரிமையாளர் பிரதான நுழைவாயிலின் இடம் மற்றும் வடிவமைப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதற்கு, முதலில் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள பாதத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். வாஸ்து விதிகளின்படி ஒரு வீட்டைக் கட்டத்தொடங்கும் போது,சொத்தின் நீளம் மற்றும் அகலத்தை ஒன்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும்.

வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல்கள் ஒழுங்கமைக்கப்படும் வகையில் தெற்கு நோக்கிய உங்கள் சொத்தின் நுழைவாயில் நான்காவது பாதத்தில் சரியாக வைக்கப்பட வேண்டும். இதன் படி, தொடக்கப் புள்ளி தென்கிழக்கு மூலையில் இருக்கும். இப்படியாக, மையத்தில் இருந்து சற்று தென்கிழக்கு புறமாக இருக்கும் படி பிரதான நுழைவு வாயில் கட்டப்பட வேண்டும். வாயில் மிகவும் சிறிதாக இருப்பதாகத் தோன்றினால், அதை பெரிதாக்க நீங்கள் பாதம் 3, 2 அல்லது 1 ஐ நோக்கி நகர்த்திக்கொள்ளலாம். இருப்பினும், தென்மேற்கு நோக்கி நகர்த்துவதை வாஸ்து கண்டிப்பாக தடைசெய்கிறது. அதாவது ஐந்து முதல் ஒன்பதாவது பாதங்கள் வரையிலான இடங்களில் நுழைவாயில் வைக்கப்படுவதை தடை செய்கிறது.

மேலும், இந்த முழு வீட்டிலும் மிகப்பெரிய ஒன்றாக இந்த நுழைவு வாயில் அமைக்கப்பட வேண்டும், தெற்கு நோக்கிய அடுக்குமாடி வாஸ்து சாஸ்திரத்தின் படி வலது புறம் இருந்து இடது புறமாக (கடிகார திசையில்) உள்நோக்கித் திறக்க வேண்டும்.

வாஸ்து நிபுணர்கள் நுழைவாயிலில் ஒரு தொடக்க வாயில்படி கட்டவும் பரிந்துரைக்கின்றனர். இதில் மக்கள் தடுமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இந்தப் பகுதி அனைத்து நேரங்களிலும் நன்கு வெளிச்சமாக இருப்பதையும் உறுதி செய்யவேண்டும் .ஒட்டுமொத்த திட்டமிடலில், வடக்குப் பக்கத்தை விட தெற்குப் பக்கத்தில் உள்ள சுவர்களை உயரமாக வைத்திருப்பதும் நேர்மறையானதாகக் கருதப்படுகிறது. அதேபோல், தெற்குப் பக்கம் உயரமாக இருப்பதும் ஒரு நல்ல அறிகுறியாகும்

தெற்கு நோக்கிய வீட்டின் மனையிட வாஸ்து

தெற்கு நோக்கிய வீடு வாஸ்து திட்டத்தின் படி, எந்த ஒரு பக்கத்திலும் வெட்டுக்களைக் கொண்ட ஒரு வீட்டுமனை மோசமானதாகக் கருதப்படுகிறது. எனவே தெற்கு நோக்கி ஏதேனும் நீட்டிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியவும். தெற்கு நோக்கிய வீட்டு வாஸ்து திட்டத்தின் படி வீட்டுமனை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சரிவாக அமைந்திருக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ப்ளாட் தெற்கிலிருந்து வடக்கே சரிவாக அமைந்திருந்தால் அது பரவாயில்லை.

தெற்கு நோக்கிய வீட்டின் வாழ்வறை/பூஜை அறைக்கான வாஸ்து விதிகள்

தெற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து விதிகளின் படி உங்கள் வீட்டில் வாழ்வறை கட்ட மிகவும் பொருத்தமான இடம் வீட்டின் வடகிழக்கு பகுதியாகும். தெற்கு நோக்கிய வீட்டிற்கு வாஸ்து கொள்கைகளின்படி, பூஜை அறை கட்டுவதற்கும் இந்த இடமே சிறந்த தேர்வாக அமையும் . இடநெருக்கடி காரணமாக தனியாக பூஜை அறை கட்ட இயலாது போனால், உங்கள் வாழ்வறையின் ஒரு பகுதியை சிறு கோவிலுக்கான பகுதியாக ஒதுக்கலாம்.

தெற்கு நோக்கிய வீட்டிற்கான பிரதான படுக்கையறை வாஸ்து

தெற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து திட்ட விதிகளின் கீழ், பிரதான படுக்கையறைக்கு உகந்த இடம், தென்மேற்கு திசை என்று கருதப்படுகிறது. சொத்து பல தளங்களைக் கொண்டிருந்தால், பிரதானப் படுக்கையறையை மேல் தளத்தில் கட்ட வேண்டும் என்று வாஸ்து விதிகள் கூறுகின்றன.

தெற்கு நோக்கிய வீட்டிற்கான சமயலறை வாஸ்து

வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, தெற்குயே தெற்குத்திசை நோக்கிய வீட்டின் வாஸ்து விதிகளின் கீழ் சமையலறை கட்ட சிறந்த இடம், தென்கிழக்கு திசையாகும். சமைக்கும் போது நீங்கள் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். நாள் முழுவதும் சூரிய ஒளி பெறுவதையும் இது உறுதி செய்கிறது. சமையலறைக்கு மிகச்சிறந்த இரண்டாவது இடமாக அமைவது வடமேற்கு திசையிலுள்ள பகுதியாகும். உங்கள் சமையலறையை அவ்வாறு அமைக்க நேர்ந்தால், சமைக்கும் போது நீங்கள் மேற்கு நோக்கி இருக்கும் வகையில் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

தெற்கு நோக்கிய வீட்டிற்கான குழந்தைகள் அறை வாஸ்து

தெற்குதிசையில் நுழைவாயிலைக் கொண்ட குடியிருப்பில் உங்கள் குழந்தைகளுக்கான படுக்கையறை அல்லது மழலையகம் வடமேற்கு பகுதியில் கட்டப்பட வேண்டும். இது சாத்தியமில்லாத பட்சத்தில், தெற்கு அல்லது மேற்கு திசையிலுள்ள பகுதிகளுக்கு இடையே இந்த அறையை உருவாக்க தேர்வு செய்யலாம்.

தெற்கு நோக்கிய வீட்டிற்கான விருந்தினர்கள் படுக்கைஅறை வாஸ்து

குழந்தைகள் அறையைப் போலவே, விருந்தினர் படுக்கையறையும் தெற்கு நோக்கிய வீட்டின் வடமேற்குப் பகுதியில், கட்டப்பட வேண்டும்.

தெற்கு நோக்கிய வீட்டில் படிக்கட்டிற்கான வாஸ்து

நுழைவு வாயில் தெற்குபுறமாக அமைந்துள்ள ஒரு குடியிருப்பில், படிக்கட்டு தெற்கு மூலையில் கட்டப்பட வேண்டும்.

தெற்கு நோக்கிய வீட்டின் வண்ணங்களுக்கான வாஸ்து

பழுப்பு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகியவை தெற்கு நோக்கிய வீடுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட வண்ணங்கள். இந்த வண்ணங்களை அதிகளவு பயன்படுத்தாமல் ஒட்டுமொத்த வடிவமைப்பில் இவற்றை ஒன்றிணைக்க வேண்டும். இந்த வண்ணங்கள் அந்த பகுதியை இருளடையச்செய்யும் என்பதால், இந்த வண்ணங்களின் வெளிர் வன்னச்சாயல்களைத் தேர்ந்தெடுங்கள்.

தெற்கு நோக்கிய வீடுகளில் தவிர்க்க வேண்டியவைகள்

  • வாட்டர் கூலர் போன்ற நீர் உபகரணங்கள் அல்லது இயந்திரங்களை . தென்மேற்கு பகுதியில் அமைப்பது
  • தெற்குத் திசையில் வாகன நிறுதுமிடம் .
  • தென்மேற்கு பகுதியில் சமையலறைகள்.
  • வடக்கை விட தெற்கில் அதிக திறந்தவெளி இருப்பது போன்றவை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story