sivan quotes in tamil-லோகம் யாவிலும் சிவமயம்..! சிவனின் அருள்பெற..சிவமேற்கோள்கள்..!
sivan quotes in tamil-சிவன்.(கோப்பு படம்)
Sivan Quotes in Tamil-நாம் சிவன் என்று அழைக்கும் போது, அதில் இரண்டு அடிப்படை விஷயங்களைப் பார்க்கவேண்டும். சிவன் என்ற சொல்லிற்கு எது இல்லையோ அது என்பது பொருளாகும். சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
இவர் தனது உடலின் ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. இதோ உங்களுக்காக சிவனின் மேற்கோள்கள்.
தூக்கி வைப்பதும் அவனே உனை தூக்கி சுமப்பதும் அவனே நம்பிக்கையுடன் ஓடு
நிழலாய் அவன் வருவான் உனை காத்திடுவான். நெஞ்சில் அவனே…
என்றும் சிவனே..!
நீ செய்யும் தர்மம் நிச்சயம் உன் குலத்தை காக்கும், ஈசன் வாக்கு..!
sivan quotes in tamil
மனம் வலிக்கும் போது அதற்கு ஒரே மருந்து, ஓம் நமசிவாய..!
மனிதர்கள் மீது கொண்ட பந்தம் இந்த ஜென்மத்தோடு முடியட்டும்…
ஈசன் மீது கொண்ட பந்தம் ஈரேழு ஜென்மங்கள் தொடரட்டும்..!
நீ தேடும் கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறார்..!
பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்களை கொண்டு வரும்..!
நீ உன் வாழ்வில் பிரச்சனைகளை கண்டு ஓடாதே இறைவனோடு சேர்ந்து நில் வெற்றி உனக்கே..!
ஒளியாய் நீ இருப்பதால் இருளைப்பற்றியக் கவலை எனக்கில்லை..!
நீ பக்தி செய்வாயானால் எனதருகே நீ வருவாய்,
தொண்டு செய்வாயானால் நான் உன்னருகே வருவேன்..!
முடிவே இல்லாத பாதையில் பயணிக்கிறேன்…
முடிவில் நீ வழி காட்டுவாய் என்ற நம்பிக்கையுடன்..!
மனமுருகி வேண்டுவோரின் வேண்டுதல் என்றும் வீணாவதில்லை..!
எதையெல்லாம் நீ இழந்தாயோ அதைவிட அதிகமாக உன்னை வந்து சேரும்..!
sivan quotes in tamil
தலைகீழாக நின்றாலும் தலையில்
எழுதியது நடந்தே தீரும்..!
இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுத்தாலும்
தரமானதாக கொடுப்பார் சோர்ந்து போகாதீர்கள்..!
எனக்கு ஒளியாய் நீ இருப்பதனால் நான் இருளை கண்டு பயப்படுவதில்லை
என் அப்பனே..!
சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்..!
sivan quotes in tamil
வாழ்க்கையில் சிவத்தை தவிர உனக்கு நிரந்தரம் என்று ஒன்றும் இல்லை மற்றவை அனைத்தும் நீ யாக உருவாக்கிக் கொண்ட மாயை இன்பம் தரும் என்று ஏமாறாதே.. சிவாய நம ஓம்..!
பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள்.. படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள்..!
காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே.... காரணம் இருந்தாலும்... கலக்கம் கொள்ளாதே எதுவும் கடந்து போகும்.... இதுவும் கடந்து போகும்..!
உனக்கு நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும்..!
ஆதாரமே நீயாகும் போது, அங்கே யாரை தேடுகின்றாய். ஜீவனே சிவனாம், அவனை சிக்கென பிடித்தால் உன் சிக்கல்கள் பறந்தோடும்..!
sivan quotes in tamil
சொந்தம் என்று சொல்வதெல்லாம் சொந்தமில்லை மானிடா! நீ வந்த உலகில் அவன் தந்த உடம்பில் சொந்தம் என்பது ஏதடா? தங்கிச்செல்லும் வழிப்போக்கனே..!
என்னருகில் நீ இருந்தால் இன்ப துன்பம் சரிசமமே, உன்னருகில் நான் இருந்தால் இப்பிறவி பயன் பெறுமே சிவமே சிவமே..!
என் வாழ்க்கை பயணத்தில் இந்த உலகில் வாழும் மனிதர்களோடு போராடி போராடி நான் தோற்றுப்போவதை விட என்னை படைத்த இறைவனோடு போராடி என்றாவது ஒரு நாள் வென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பனே. சிவாய நம..!
sivan quotes in tamil
தீப ஜோதி ஒளி தரும் தெளிவு உந்தன் வழி வரும்..!
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி..!
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்பதானால் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு- காரைக்காலம்மையார்
என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும், நீதான் என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான்..!
உடலில் உயிர் இருக்கும் போதே ஈசனை ஆற தழுவிக்கொள் உன் ஆன்மாவுக்கு அவனை ஆற தழுவும் பாக்கியம் கிடைக்காது ஆன்மா உடல் இல்லாதது உணர்வு இல்லாதது அவனை உணர தான் இவ்வுடல் படைக்க பட்டிருக்கிறது. அன்புடன் ஈசன் அடி தேடி..!
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய் போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே..!
sivan quotes in tamil
அன்பே சிவம், நீ நீயாக வாழ கற்றுக்கொள் சிலர் உன்னை விரும்புவார் சிலர் உன்னை வெறுப்பார், கவலைப்படதே இது உன் வாழ்க்கை..!
அமைதி கொண்டால் மனத்துள் அடக்கம், ஆணவம் கொண்டால் மண்ணில் அடக்கம், இதுவே இறைவன் விளக்கம்..!
அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ கரும்புக்குள் சுவையும் நீ கருணைக்கு எல்லையும் நீ விண்ணும் நீ மண்ணும் நீ.. ஓம் நமச்சிவாய..!
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - திருவாசகம்
யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே.. அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை பார்த்துக் கொண்டிரு..!
நின் பாதம் பற்றியதால் என் பாவம் கரைந்ததையா உன் நாமம் சொல்லுவதால் என் வாழ்வு இனிக்குதையா அண்ணாமலையானே..!
எப்பொழுதும் உன் நினைவாய், இருக்க வேண்டும், தப்பாமல் உன் நாமத்தை உச்சரிக்க வேண்டும், முப்பொழுதும் உன்னடிகள் துதிக்க வேண்டும், ஒரு கணப்பொழுதும் உனைமறவா திருக்க வேண்டும் சிவனே..!
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே..!
sivan quotes in tamil
உடலை வருத்தி எதைச் செய்தாலும் இறைவனை அடைய இயலாது. மாறாக நெஞ்சம் உருகி அன்பு மயமாய் குழைந்தால் மட்டுமே இறை நிலையினை அடைவது சாத்தியம்.- திருமூலர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu