வாசுகி நர்த்தனர் கோலத்தில் சிவபெருமானை தரிசிக்கலாம்..!
வாசுகி மீது நடமாடும் சிவபெருமான்.
ஆணவத்தில் படம் விரித்தாடி, விஷம் கக்கி, சகலரையும் அஞ்சச் செய்த வாசுகி தலைமீது ஈசன் தன் திருப்பாதம் வைத்து நாட்டியம் ஆடினார். ஈசனின் வேகத்தால் நிலைகுலைந்த வாசுகி, அவரிடம் அபயம் கேட்டது. வேண்டியவருக்கு அருள் செய்யும் விமலானாம் ஈசன், வாசுகியை மன்னித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டு நாகாபரணராகத் திருக்காட்சி அளித்தார்.
இங்கு பத்துத் திருக்கரங்களோடு வாசுகி மீது திருப்பாதம் தாங்கிப் புன்னகையோடு நிற்கும் நடன மூர்த்தியை நாள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இரு கரங்கள் அபய வர ஹஸ்தங்களாக மற்ற திருக்கரங்களில் மான், மழு, யோக முத்திரைகளோடு அருள கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஈசன். இவரை தரிசித்து வழிபட்டால் நாகதோஷம் விலகும், போட்டி பொறாமைகளில் இருந்து விலகி நலம் பெறலாம். வாட்டத்தை நீக்கும் இந்த வாசுகி நர்த்தனரை வணங்கி சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம் என்கிறார்கள்.
அமைவிடம்: ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதீஸ்வரர் ஆலயம், மேலக்கோட்டையூர். சென்னை தாம்பரம், வண்டலூர் தாண்டி கேளம்பாக்கம் செல்லும் சாலையில் கண்டிகை தாண்டியதும் மேலக்கோட்டையூரில் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu