Sivan Dialogue Tamil-சிவன் அருள் பெற சிவ நாமம் சொல்வோம்..!

Sivan Dialogue Tamil-சிவன் அருள் பெற சிவ நாமம் சொல்வோம்..!
X

sivan dialogue tamil-சிவன் மேற்கோள்கள் (கோப்பு படம்)

சிவன் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருப்பதாக தெரிகிறது.

Sivan Dialogue Tamil

சிவ வழிபாட்டின் மகிமையை முதல் முதலாக உணர்த்திய தனி நூல் சுவேதா சுவேதர உபநிஷதமாகும். ருத்திரனின் பேராற்றல்களை வருணிக்கும் அந்நூல் ருத்திர சிவ வழிபாட்டுக்கு ஒரு திறவுகோல் எனலாம்.

சுக்லயஜுர் வேதத்தில் சிவனின் நூறு நாமங்கள் கூறப்பட்டிருக்கின்றன. யஜூர்வேதம், நம சிவாய என்று முழங்குகிறது. பதஞ்சலி முனிவரின் மகாபாஷ்யம் சிவனின் பெருமையையும் சிவனடியார் இயல்புகளையும் சுவைபடச் சித்தரிக்கிறது.

Sivan Dialogue Tamil


வியாசர் அருளிய சிவபுராணம் ஆதிசங்கரரின் சிவாநந்தலகிரி, அப்பைய தீட்சதரின் சிவார்க்கமணி, தீபிகா ஆகியவை ஒப்பற்ற சிவபக்தி நறுமலர்கள்.

சிவபெமானை லிங்கவடிவில் வழிபடும் தொடர்பாகப் பல புராண வழக்குகள் உள்ளன. திருமாலுக்கும், பிரமனுக்கும் தம் சக்தியை உணர்த்தப் பேரொளிப் பழமாக, அண்ணாமலையாகச் சிவபெருமான் நின்ற வரலாறு அனைவரும் அறிந்ததே, ஜோதி சொருபமே லிங்கம்.

அப்படிப்பட்ட சிவனின் அருளை விளக்கும் சிவன் மேற்கோள்கள். படிங்க சிவனருள் பெறுங்க.


தூக்கி வைப்பதும் அவனே. உனை தூக்கி சுமப்பதும் அவனே நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்

உனை காத்திடுவான். நெஞ்சில் அவனே என்றும் சிவனே.

எவன் போனால் என்னசிவன் இருக்கான் எனக்கு.

உனக்கு நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும்.

நீ செய்யும் தர்மம் நிச்சயம் உன் குலத்தை காக்கும், ஈசன் வாக்கு

ஈசனின் கடைக்கண் உன்மேல் இருக்க கவலைகள் உனக்கேன் மனமே. வருவது வரட்டும் துணிந்துநில் தினமே. கஷ்டங்கள் உன்னை அண்டாது இனிமே.


Sivan Dialogue Tamil

மனம் வலிக்கும் போது அதற்கு ஒரே மருந்து, ஓம் நமசிவாய

ஒருவனை யார் கைவிட்டாலும் அவன் நம்பும் ஈசன் அவனை ஒரு நாளும் கை விடமாட்டான்

மனிதர்கள் மீது கொண்ட பந்தம் இந்த ஜென்மத்தோடு முடியட்டும். ஈசன் மீது கொண்ட பந்தம் ஈரேழு ஜென்மங்கள் தொடரட்டும்.

உன்னை நினைக்காத நாளும் இல்லை. உன்னை நினைக்காமல் நானும் இல்லை. சிவ சிவ! ஓம் நமசிவாய.

என் உயிரைஉடல் மறந்தாலும் உடலை இயக்கும் உயிர் மறந்தாலும்

Sivan Dialogue Tamil

எப்பொழுதும் அஞ்சேன். கையிலே சூலம்கழுத்திலே ஆலகாலம்

என்னருகில் நீ இருந்தால் இன்ப துன்பம் சரிசமமே, உன்னருகில் நான் இருந்தால். இப்பிறவி பயன் பெறுமே சிவமே சிவமே.

சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்...

வாழ்க்கையில் சிவத்தை தவிர உனக்கு நிரந்தரம் என்று ஒன்றும் இல்லை மற்றவை அனைத்தும் நீ யாக உருவாகி கொண்ட மாயய் இன்பம் தரும் என்று ஏமாறாதே.. சிவாய நம ஓம்


Sivan Dialogue Tamil

பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள்.. படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள்!

காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே.... காரணம் இருந்தாலும்... கலக்கம் கொள்ளாதே எதுவும் கடந்து போகும்.... இதுவும் கடந்து போகும்.

ஆதாரமே நீயாகும் போது, அங்கே யாரை தேடுகின்றாய். ஜீவனே சிவனாம், அவனை சிக்கென பிடித்தால் உன் சிக்கல்கள் பறந்தோடும்.

சொந்தம் என்று சொல்வதெல்லாம் சொந்தமில்லை மானிடா! நீ வந்த உலகில் அவன் தந்த உடம்பில் சொந்தம் என்பது ஏதடா? தங்கிச்செல்லும் வழிப்போக்கனே!

Sivan Dialogue Tamil

என் வாழ்க்கை பயணத்தில் இந்த உலகில் வாழும் மனிதர்களோடு போராடி போராடி நான் தோற்றுப்போவதை விட என்னை படைத்த இறைவனோடு போராடி என்றாவது ஒரு நாள் வென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பனே. சிவாய நம

தீப ஜோதி ஒளி தரும் தெளிவு உந்தன் வழி வரும்

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்பதானால் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு- காரைக்காலம்மையார்

என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும், நீதான் என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான்


Sivan Dialogue Tamil

ஒளிர் விடும் எம் தேசனே குளிர் மலை தன் வாசனே எழில்மிகு எம் நேசனே அழித்தொழிக்கும் ஈசனே

பிரார்த்தனை செய் கடவுளிடம் செல்லலாம், தர்மம் செய் கடவுள் உன்னிடம் வருவார்

நீ துவண்டு போகும் சமயத்தில் யாரும் துணை இல்லை என்று கலங்காதே... உனக்காக ஏதோ ஒரு உருவில் உன்னுடன் துணையாக நான் வருவேன்.... ஈசன்.

இந்த பிரபஞ்சத்தில் அவனின்றி நிரந்தரமானது எதுவுமே இல்லை

உடலில் உயிர் இருக்கும் போதே ஈசனை ஆற தழுவிக்கொள் உன் ஆன்மாவுக்கு அவனை ஆற தழுவும் பாக்கியம் கிடைக்காது ஆன்மா உடல் இல்லாதது உணர்வு இல்லாதது அவனை உணர தான் இவ்வுடல் படைக்க பட்டிருக்கிறது. அன்புடன் ஈசன் அடி தேடி

Sivan Dialogue Tamil

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய் போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே..

அன்பே சிவம், நீ நீயாக வாழ கற்றுக்கொள் சிலர் உன்னை விரும்புவார் சிலர் உன்னை வெறுப்பார், கவலைப்படதே இது உன் வாழ்க்கை..

அமைதி கொண்டால் மனத்துள் அடக்கம், ஆணவம் கொண்டால் மண்ணில் அடக்கம், இதுவே இறைவன் விளக்கம்.

அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ கரும்புக்குள் சுவையும் நீ கருணைக்கு எல்லையும் நீ விண்ணும் நீ மண்ணும் நீ.. ஓம் நமச்சிவாய

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - திருவாசகம்


Sivan Dialogue Tamil

யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே.. அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை பார்த்துக் கொண்டிரு.

உன்னை சோதனை செய்வது எனக்கு வருத்தம்தான் என்ன செய்வது நீ வாழ வந்துவிட்டாய் நான் சோதிக்க பழகிவிட்டேன்...

காலம் பேசாது ஆனால் எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும்...

துன்பம் வரும்போது மட்டும், இறைவனை நாடிச்செல்லாதீர்கள். எப்போதும் இறைவனிடம் உண்மையாய் இருங்கள்.

உயர்வைத் தேடி அலைகிறவனுக்கு அது கிடைப்பதில்லை. உயர்வு என்பது தன்னை அடையும் தகுதியுடையவனைத் தேடிச் சென்று அவனை உயர்த்துகிறது.

Sivan Dialogue Tamil

உன்னை நினையாமல் ஒரு நொடியும் கழிவதில்லை! உன்னை வணங்காமல் ஒரு பொழுதும் விடிவதில்லை.

காயங்களின்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை.

நின் பாதம் பற்றியதால் என் பாவம் கரைந்ததையா உன் நாமம் சொல்லுவதால் என் வாழ்வு இனிக்குதையா அண்ணாமலையானே.

கொடுக்க மனம் இருந்தால் மனமார கொடுத்து விடு, கொடுத்ததை அச்சமயமே மறந்து விடு இல்லை அச்செயலை செய்யாதே.

எதுவாயினும் கடக்க பழகு. எல்லாம் சிறிது காலம் தான்.


Sivan Dialogue Tamil

எப்பொழுதும் உன் நினைவாய், இருக்க வேண்டும், தப்பாமல் உன் நாமத்தை உச்சரிக்க வேண்டும், முப்பொழுதும் உன்னடிகள் துதிக்க வேண்டும், ஒரு கணப்பொழுதும் உனைமறவா திருக்க வேண்டும் சிவனே.

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!