மரணத்தின் இரகசியம் தெரியுமா உங்களுக்கு?

மரணத்தின் இரகசியம் தெரியுமா உங்களுக்கு?
X

பிறப்பும்-இறப்பும் -மாதிரி படம் 

நாம் தங்கபஸ்பம் சாப்பிட்டாலும் சரி, தவ வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி, இறுதியில் ஜீவன் உடலை விட்டு நீங்கி மரணமடைவது உறுதி.

வாழ்க்கை ஓர் ஆசான். மரணம் பேராசான். மரணத்தின் இரகசியத்தைக் கற்றுக் கொண்டால் இம்மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொள்ளலாம்.

ஆதிப்புள்ளியில் அடக்கம்: "ஒரு புள்ளியிலிருந்தே இத்தேகம் விரிந்தது. ஆதிப் புள்ளியில் நின்று ஆடத் துவங்கிய ஜீவன், தேகாதியந்தமும் பரவி, இத்தேகமெனும் நடமாடும் தேவாலயத்தை நிர்மாணம் செய்தது. அதுபோது உனக்கு எந்த விதமான வலியும் தெரியவில்லை.

அதுபோலவே தேகமெங்கும் வியாபித்து நின்றாடும் ஜீவனை வலி இல்லாமல் திரும்ப இழுத்து உனது சொந்த மாளிகையான அந்த ஆதிப் புள்ளியில் அடங்க வைப்பதுவே அடக்கம். இந்தச் செயலையே " அடக்கம் அமரருள் உய்க்கும்" என்றார்கள். இவ்வாறு அடங்கினவர்கள் அமரர் ஆகின்றார்கள். அவர்களின் சமாதி ஸ்தலம் கோயிலாக மாறுகிறது." - மெய்வழி ஆண்டவர்கள் அருளியது. ஒளிப்பிடம்: " கனமுடையேம் கட்டுடையேம், என்று நினைத்திங்கே, களித்து இறுமாந்து இருக்கின்றீர், ஒளிப்பிடமும் அறியீர்" என்கிறார் வள்ளலார்.

அந்த ஆதிப்புள்ளி தான், மரண வேளையில் அதிலிருந்து விடுபட ஒளிந்து கொள்ள வேண்டிய இடம். " செத்திடமும் பிறந்திடமும், இனிச் சாவாதிருந்திடமும்..."என அந்த ஆதிப்புள்ளியையே மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

ஆதிப்புள்ளி என்பதென்ன?: ஆதிப்புள்ளி என்பதென்ன?

" ஆதி என்ற தீபமடா ஆத்மாவாகும்" என்கிறார் அகத்தியர்.

மரணமிலாப் பெருவாழ்வின் இரகசியம் யாதெனில், "வாடாத தீபமதில் ஒடுங்க வேணும் " என்கிறது சுப்பிரமணியர் ஞானம். இந்த பிரம்ம ரகசியங்கள் எப்போது தெரிய வரும்?. "ஆதலால் நாம் நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆச்சாரியார் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம். ஏனெனில் மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப் பகல் போல் தெரியும் " என்கிறார் வள்ளலார்.

ஆதிப்புள்ளி குறித்து இன்னுமொரு விளக்கம். " ஆதி என்ற இருதயமே கமல பீ டம்" என்கிறது அகத்தியரின் சௌமிய சாகரம். "மனிதனின் ஓய்விலாப் புனலூறிய புனற்றுறைக் கோயில் எனும் இதய தாடகத்தினிடத்தே"... என்கிறார் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள். இருதய கமல பீடம் என்பது பிரம்ம பிரகாச பிரகாச பீடம். இறைவன் நம்முள்ளே வீற்றிருக்கும் பீடம். அந்த இருதய கமல பீடத்தை " மலர்மிசை " என்கிறார் திருவள்ளுவர்.

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார். நிலமிசை நீடு வாழ்வார்" என்று மரணமிலாப் பெருவாழ்வின் இரகசியத்தைக் கூறுகிறார். இதை இன்னும் விரிப்பின் பெருகும். இதுவே போதும்.

Tags

Next Story