Rasi and Natchathiram in Tamil-ராசிகளும் நட்சத்திரங்களும் இயல்பும்..! தெரிஞ்சிக்குவோமா?
rasi and natchathiram in tamil-ராசி மற்றும் நட்சத்திரங்கள்.(கோப்பு படம்)
Rasi and Natchathiram in Tamil
மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு நட்சத்திற்கும் - 4 பாதங்கள் உள்ளன. ஆக மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் 9 பாதங்கள் என்பதன் அடிப்படையில், 108 பாதங்களும் 12 வீட்டில் அமர்ந்திருக்கும். அதன்படி, எந்த ராசி என்ன நட்சத்திரம் வரும் என்பதை பார்க்கலாம்.
Rasi and Natchathiram in Tamil
12 ராசி 27 நட்சத்திரங்கள்:
மேஷம் - அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம் - மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு - முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய
மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
Rasi and Natchathiram in Tamil
12 ராசிகள்:
மேஷம், சிம்மம், தனுசு - நெருப்பு ராசிகள்
ரிஷபம், கன்னி, மகரம் - நிலம் ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம் - காற்று ராசிகள்
கடகம் , விருச்சிகம், மீனம் - நீர் ராசிகள்
மேஷம், கடகம், துலாம், மகரம் - சர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் - ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் - உபய ராசிகள்
Rasi and Natchathiram in Tamil
ராசிகளின் தன்மைகள் :
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை எந்த அளவிற்கும் சென்று ஆதரிக்கும் திறன் கொண்டவர்கள். அவர்கள் லட்சியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துக்கொண்டு, மேலும் அவற்றை அடைய தங்கள் குழந்தைகளை வழிநடத்துகிறார்கள். முடிவுகளை எடுப்பதில் மட்டும் அவர்கள் கொஞ்சம் மனக்கிளர்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்பதை அவர்கள் நிச்சயமாக அறிவார்கள்.
ரிஷபம்
ஒரு ரிஷப ராசியில் பிறந்த பெற்றோருக்கு, ஒழுக்கங்களும் நெறிமுறைகளும் மிக முக்கியமானவை. உங்கள் பிள்ளை எவ்வளவு புத்திசாலித்தனமாகவோ அல்லது ஆக்கப்பூர்வமாகவோ இருந்தாலும், அவர்களின் நடத்தை மற்றும் பொது வழக்கை நடத்தை ஆகியவை உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே உங்கள் பலத்தை அவர்களிடம் காட்டுவதால், அவர்களின் கனவுகளை சரியான வழியில் அடைய உதவியாக இருக்கும்.
Rasi and Natchathiram in Tamil
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த பெற்றோர்கள் அன்பான மற்றும் வேடிக்கையான ஆளுமைகளை கொண்டவர்களாக இருப்பர். பிற பெற்றோர்களைப் போல இல்லாமல், அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதிலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் வீட்டில் இருப்பதை போன்று உணர வைப்பதையும் விரும்புகிறார்கள். இது தங்கள் குழந்தைகளுடன் ஒரு பொதுவான நேரத்தை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இதனால் இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு மேலும் உயருகிறது.
கடகம்
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை போல, கடக ராசியில் பிறந்த பெற்றோர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் குழந்தைகள் ராஜா, ராணி போலத்தான். அவர்களின் உணர்ச்சி மற்றும் உணர்திறன் தன்மை காரணமாக, தங்கள் குழந்தைகளை மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் பார்த்துக்கொள்வர். இது ஒரு அழகான சைகை மட்டுமல்ல, குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
Rasi and Natchathiram in Tamil
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெற்றோர்களின் வலிமை அவர்களின் ஆதிக்கம் மற்றும் அச்சமற்ற தன்மையில் உள்ளது. எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறனும், குழந்தையின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனும் அவர்களுக்கு உண்டு. அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் அச்சமின்மை மற்றும் தைரியம் பற்றிய கருத்துக்களைப் பற்றி எடுத்துரைப்பார்கள். இந்த குணாதியங்கள் குழந்தைகளின் முதிர்ச்சியடைந்த ஆண்டுகளில் வெளிப்படும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கண்டிப்பான விமர்சனம் செய்யும் நபர்களாக இருப்பர். இருப்பினும், பெற்றோரைப் பொறுத்தவரை, இது அவர்களின் குழந்தைகளை சிறந்தவர்களாக ஆக்குகிறது. வெளியில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு இந்த பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பான மற்றும் கடுமையான ஒருவராக தெரியலாம். ஆனால், அவர்கள் எதிர்கால மகத்துவத்திற்கு தங்கள் குழந்தைகளைத் தயார்படுத்துகிறார்கள் என்பது தான் உண்மை.
Rasi and Natchathiram in Tamil
துலாம்
ஒரு துலாம் ராசி பெற்றோரின் வலிமை அவர்கள் குழந்தைகளுடன் வைத்திருக்கும் உறவில் எந்த இடையூறும் இல்லாமல் சமநிலையில் உள்ளது. தங்கள் குழந்தையின் தேவைகளைப் புரிந்துகொள்வதோடு, அவர்களுக்கு எது சிறந்தது என்பதையும் துலாம் ராசி பெற்றோர்கள் அறிவார்கள். அவர்கள் சிறந்த கவனிப்பாளர்களாக இருப்பர். பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையின் மதிப்பை தங்கள் பிள்ளைகளும் உணரும் திறவுகோலை வைத்திருக்கிறார்கள்.
விருச்சிகம்
வேலை மற்றும் அவர்கள் மனதில் வைக்கும் எல்லாவற்றையும் பற்றி ஆர்வமுள்ள விருச்சிக ராசி பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் என்று வரும்போது மிகவும் கவனமாக இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு சரியான ஒழுக்கங்களைக் கற்பிப்பதில் இருந்து, அவர்கள் செய்யும் செயல்களில் சிறந்து விளங்கச் செய்வது வரை, விருச்சிக ராசிக்காரர்கள் பெற்றோருக்குரிய அணுகுமுறையில் மிகச் சிறந்தவர்களாக இருப்பர்.
Rasi and Natchathiram in Tamil
தனுசு
தனுசு பெற்றோர்களுக்கு ஒரு குழந்தையின் இதயத்தைச் சுற்றியுள்ள விஷயங்கள் தெரியும். அவர்களே மனதளவில் ஓரளவுக்கு குழந்தையாக தான் இருக்கிறார்கள். எனவே தங்கள் குழந்தைகளுடன் நன்றாக இணைந்திருப்பர். எல்லாவற்றிலும் சிறந்ததை தங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதைத் தவிர, இந்த ராசியை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் போது யார் வேடிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் அறிவார்கள்.
மகரம்
மகர ராசி பெற்றோர்கள் எதிலும் சிறந்த முடிவெடுப்பவர்கள். பகுத்தறிவு மற்றும் நடைமுறை உணர்வுக்கு பெயர் பெற்ற மகர ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளை எல்லாவற்றிலும் சிறந்ததாக மாற்றுவதற்கு கடுமையாக உழைப்பார்கள். அதுமட்டுமின்றி, அவர்களின் கடின உழைப்பு திறன்களை தங்கள் குழந்தைகளிலும் புகுத்தி, போட்டி எதிர்காலத்திற்கு அவர்களை தயார்படுத்துகிறார்கள்.
கும்பம்
ஒரு கும்ப ராசி பெற்றோரைப் பொறுத்தவரை, அவர்களின் குழந்தைகள் தான் அவர்களுக்கு மதிப்புமிக்க உடைமை. மேலும் தங்கள் குழந்தைகளின் படைப்பாற்றலை எழுப்புவதற்கான திறனைக் கொண்டுள்ளனர். அதேசமயம், குழந்தைகளின் தனித்துவத்தை கடைப்பிடிப்பதற்கான இடத்தையும் வழங்குகிறார்கள். இது அவர்களின் பிள்ளைகளை இன்னும் அதிகமாகப் பாராட்ட வைக்கிறது.
Rasi and Natchathiram in Tamil
மீனம்
மீன ராசி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு செலுத்துகிறார்கள். அவர்களின் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கின்றனர். மேலும் ஆபத்துகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் தங்கள் குழந்தையின் அப்பாவித்தனத்தையும் தூய்மையையும் பராமரிக்கிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் சிறந்ததை அனுபவிப்பதை உறுதிசெய்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu