இஸ்லாமிய உறவுகளுக்கு ரம்ஜான் வாழ்த்து சொல்லுங்க..!

Ramadan Valthukkal Tamil
X

Ramadan Valthukkal Tamil

Ramadan Valthukkal Tamil-ஒருமாத காலம் நோன்பிருந்து ஒருவேளை மட்டுமே உணவு உண்டு, கொண்டாடும் இனிய பெருவிழா, ரம்ஜான்.

Ramadan Valthukkal Tamil-இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைளில் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான். இத்திருநாளை சுமார் ஒரு மாத அளவிற்கு இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக ரம்ஜான் பண்டிகை தொடங்குவதற்கு ஒரு மாத காலம் முன்பாக நோன்பை மேற்கொள்கின்றனர். இந்த நோன்பு காலத்தில் சூரிய உதயம் தொடங்கி மறையும் வரை பகல் நேரங்களில் உணவோ அல்லது தண்ணீரோ அருந்தாமல் கடும் நோன்பைக் கடைப்பிடிக்கிறார்கள்.

நோன்பு காலம் முடிவடைந்தபிறகு, பிறை எப்பொழுது தெரிகிறதோ? அன்றைய நாளை இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். ரம்ஜான் எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாளாகும்.

ரம்ஜானில் உங்கள் அன்புக்குரியவர்கள் மகிழும் வகையிலான வாழ்த்துகளைக் கூறுங்கள்.

இந்த ரம்ஜானில் உங்கள் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வாராக ரமலான் வாழ்த்துகள்.

இந்நன்னாளில் எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பாராக . இனிய ரமலான் வாழ்த்துகள்

அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அன்பை விதையுங்கள்; பகிந்து உண்ணுங்கள். வலிகள் தேய் பிறையாய் மறையட்டும். வசந்தம் வளரட்டும். இனிய ரமலான் வாழ்த்துகள்

இந்த ரமலான் மாதம் நமக்கு எல்லையில்லா அல்லாஹ்வின் அருளை வழங்கட்டும். இனிய ரமலான் வாழ்த்துகள்

மதம் எதுவாயினும் மனிதன் என்பவன் ஒன்றே..! இறைவன் என்பவனும் ஒன்றே. அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

பிறை நிலவை வணங்கி முழு நிலவாய் வளர்ந்திடுவோம்..! அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்

பிரியாணியுடன் அன்பை குழைத்து எல்லோருக்கும் விருந்துணவு கிடைத்திடச் செய்து, சகோதரத்துவம் போற்றும் புனிதமான ரமலான் நாளில் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்.

மழையும், வெயிலும் மண்ணுக்கு வேண்டும். ஈகையும் நட்பும் மனிதனுக்கு வேண்டும். சகோதரம் மலர அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்

கருணையும் இரக்கமும் அல்லாஹ்வின் கொடையாகட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்

உங்களுடைய எல்லா தேவைகளையும் இந்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவாராக.. இனிய ரமலான் வாழ்த்துகள் .

வலிகள் தேய்பிறையாய் தேயட்டும். வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும். இனிய ரமலான் வாழ்த்துகள்

பிறைகண்டு பெருநாள் கொண்டாடும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், இனி வளர்பிறையாய் வாழ்க்கையில் ஒளி வீசட்டும். அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்.

ரம்ஜான் உங்களது வாழ்வில் அன்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் நிறைந்ததாக இருக்க வழிவகுக்கும். இனிய ரமலான் வாழ்த்துகள்

விண்ணில் பிறையோடு தொடங்கிடும் நோன்போடு விரதம் இருந்தால் விளைந்திடும் அல்லாஹ்வின் அருள். இனிய ரம்ஜான் வாழ்த்துகள்

மண்ணில் மலரும் மகிழ்வான அன்போடு, மனிதம் என்னும் மாண்பு வளர்க்கும் திருக்குர்ஆன் படித்திடு. வாழ்வில் விண்ணின் ஒளி கிடைத்திடும் பாரீர்..! இனிய ரமலான் வாழ்த்துகள்..!

இல்லாமை ஒழிந்திட இறையாண்மை வளர்ந்திட,இன்முகமாய் அனைவரும் இருந்திட இந்த நாள் அனைவருக்கும் இனிமையாய் அமைந்திட அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துகள்.

அணியும் ஆடைகளின் அழகில், குல்லாக்களின் அமைப்பில் இருக்கலாம் வேறுபாடு, கூடாது அது காட்டும் அன்பில், காணும் பண்பில், தியாகத்தில் என்பதுதான் பெருநாள் என்னும் தியாகத் திருநாள். இனிய ரமலான் தின வாழ்த்துகள்

நெடுநாள் தாண்டி கூடு திரும்பிய முதல் பண்டிகை. குறையொன்றும் இல்லை அல்லாஹ்வின் தொழுகையில். இல்லாததோருக்கு ஈகை செய்தோம். தொழுகைக்கு புத்தாடை தந்தோம். இனிய ரமலான் வாழ்த்துகள்

பலகாரம் பண்ணுமளவு சுய வருவாய் கிடைத்து, நெடுநாள் தாண்டி கூடிக் கொண்டாடுவோம். பட்டாசொலி மட்டுமே கேட்குமொரு பெருநாள்..

பிறை கண்டு தொடங்கும் நன்மை, நோன்பின் நெறிகண்டு பிறக்கும் அன்பின் மாண்பு..சகோதரத்துவம் மலர அல்லாஹ்வின் போதனைகள் வழிகாட்டும்..அன்பு ஒன்றே உலகின் குரலாக ஒலிக்கும்..இனிய ரமலான் வாழ்த்துகள்

பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் உங்கள் வாழ்வு இனி என்றும் வளர்பிறையாக ஒளிர எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இனிய ரமலான் வாழ்த்துகள்

இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை வலுப்படுத்தட்டும். அனைவரும் ஆரோக்யமாகவும், செல்வச் செழிப்புடனும் வாழ இனிய ரமலான் வாழ்த்த்துகள்

சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட அல்லாஹ் அருள்வாராக..! இனிய ரமலான் நல்வாழ்த்துகள்

இருளும் சோகமும் விலகி, வளர்பிறையாய் உங்கள் வாழ்க்கை பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். இனிய ரமலான் வாழ்த்துகள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story