திருமணத்தில் பெண்ணுக்கு ரஜ்ஜு பொருத்தம் இருந்தால்தான் மாங்கல்யம் நிலைக்கும்..!

திருமணத்தில் பெண்ணுக்கு ரஜ்ஜு பொருத்தம் இருந்தால்தான் மாங்கல்யம் நிலைக்கும்..!
X

rajju porutham in tamil-ரஜ்ஜு பொருத்தம். (மாதிரி படம்)

rajju porutham in tamil-திருமணப்பொருத்தத்தில் ரஜ்ஜு எதற்கான பொருத்தம்? எப்படி அதை கணிக்கணும்? வாங்க பார்க்கலாம்..!

rajju porutham in tamil-ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் அவற்றை எவ்வாறு திருமண பொருத்தத்திற்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று பார்ப்போம்.

பெண்ணின் மாங்கல்ய பாக்கியம் மற்றும் ஆணின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு ரஜ்ஜு தோஷம்(Rajju Dosha) இருக்கிறதா என பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், இந்தப் பொருத்தத்தை ஆய்வு செய்த பின்னரே திருமணம் நிச்சயிக்க வேண்டும்.


ரஜ்ஜு அல்லது ரச்சு ஐந்து வகைப்படும்

1) சிரோரச்சு

2) கண்டரச்சு

3) உதாரரச்சு

4) ஊருரச்சு

5) பாதரச்சு

ரஜ்ஜு பொருத்த விளக்கம்

சிரோரச்சு

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்டரச்சு

ஆரோகணம் – ரோகிணி, அஸ்தம், திருவோணம்

அவரோகணம் – திருவாதிரை, சுவாதி, சதயம்

உதாரரச்சு

ஆரோகணம் – கார்த்திகை, உத்தரம், உத்ராடம்

அவரோகணம் – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

ஊருரச்சு

ஆரோகணம் – பரணி, பூரம், பூராடம்

அவரோகணம் – பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பாதரச்சு

ஆரோகணம் – அசுவினி, மகம், மூலம்

அவரோகணம் – ஆயில்யம், கேட்டை, ரேவதி

rajju porutham in tamil-ரச்சு திருமண பொருத்தம் விபரம்

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது. இருப்பினும் ஆரோகணம், அவரோகணம் பொருத்தம் பின்வரும் குறிப்பின்படி நிச்சயிக்கலாம்.

முக்கிய குறிப்பு:

ஒரே ரச்சுவில் ஆரோகணம், அவரோகணம் என்று இரு பிரிவுகள் உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தாலும், ஆரோகணம், அவரோகணம் வேறாக இருந்தால் பொருத்தம் செய்யலாம் பொருத்தம் உண்டு.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!