கிருஷ்ணர், ராதையை ஏன் திருமணம் செய்யவில்லை தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க.

Radha krishna in tamil-ராதா கிருஷ்ணர் (கோப்பு படம்)
Radha Krishna Story in Tamil -கிருஷ்ணர் என்ற பெயரைச் சொன்னாலே எல்லோருக்கும் அடுத்து நினைவிற்கு வருவது ராதை தான். காதலின் அடையாளமாக கிருஷ்ணர்- ராதையை கூறுவது வழக்கம். இவர்கள் இருவருக்கும் அப்படி என்ன தான் உறவு இருந்தது என்று பார்த்தல் நமக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கும். ஆமாம், காதலுக்கு உதாரணமாக இருவரும் சொல்லப்பட்டாலும் கிருஷ்ணர் ராதையைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது உண்மையாம்.
அதேசமயத்தில் கிருஷ்ணர் மற்ற பெண்களைத் திருமணம் செய்து கொண்ட பின்னரும்கூட, இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு தொடர்ந்தது. என்னடா இது? திருமணமும் செய்துகொள்ளவில்லை. ஆனால், ஏதோ கணவன்-மனைவி போல உறவு மட்டும் தொடருது? இதற்கு என்ன தான் அர்த்தம் என்ற குழப்பம் ஏற்படாமல் இருக்க முடியாது. அதை இங்கு பார்ப்போம் வாங்க.
ராதையின் கேள்வி
ஒரு நாள் ராதாவே கிருஷ்ணரிடம் இதைக் கேட்டாராம், " கிருஷ்ணா, நீங்கள் ஏன் ராதையைக் காதலிக்கிறீர்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது மட்டும் என்னை கை விட்டு மற்ற பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறீர்கள். அது ஏன்?" என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ணர் ராதையிடம் மிகவும் சுவாரஸ்யமான பதிலைக்கூறினாராம். கிருஷ்ணரின் பதில் இதுதான்.
கிருஷ்ணரின் பதில்
'திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையே நடக்கக்கூடிய ஒன்று. அது ஒரு ஒப்பந்தம். ஆனால் அது எப்போதுமே இரண்டு உயிராகத்தான் இருக்க முடியும். ஆனால், காதல் என்பது அப்படியல்ல. அது ஒரே உயிராக மட்டும் தான் இருக்க முடியும். நாம் இருவரும் எப்போதும் ஒரே உயிர் தான்.இரண்டு நபர் அல்ல என்று அதற்கு விளக்கமளித்து பதில் சொன்னாராம்.
கிருஷ்ணராகிய எனக்கும் ராதையாகிய உனக்கும் இடையே தேவலோக பந்தம் இருக்கிறது. ஆனால், பூலோக திருமணம் நம் இருவருக்கும் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறியிருக்கிறார் கிருஷ்ணர். அதனால், ராதை காதலியாகவே தொடர்ந்துள்ளார்; தொடர்கிறார்.
கிருஷ்ணரின் சத்தியம்
நம் இருவராலும் கணவன் மனைவி ஆக முடியாது என்று கிருஷ்ணர் சொன்னாலும், ராதைக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். இந்த உலகத்தில் யார் ஒருவர் என்னைப் பற்றி நினைத்தாலும் என்னுடைய பெயருக்கு முன்னால் உன்னுடைய பெயர் தான் அவர்களுக்கு நினைவுக்கு வரும். என் பெயருக்கு முன்னால் ராதைகிருஷ்ணர் என்று உன்னுடைய பெயரைத் தான் சொல்வார்கள். என்னுடைய மற்ற எந்த மனைவியுடைய பெயரும் யாருக்கும் ஞாபகம் வராது. ஏனென்றால் உன்னுடைய அளவிட முடியாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத காதலுக்கு முன் மற்ற எதுவும் இவ்வுலகில் பெரியது இல்லை. அதனால்தான் இன்றளவும் காதல் என்றால் கிருஷ்ணர் -ராதை அல்லது ராதாகிருஷ்ணர் என்கிறோம்.
பால்ய நட்பு
ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையே இருந்த காதலுக்கு பாராக்கியா என்று பெயரும் உண்டு. கணவன் மனைவி போல் வாழ்ந்தாலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ராதை மற்றொருவருக்கு மனைவியாகி விட்ட பின்னரும் கூட கிருஷ்ணரை மறக்க முடியவில்லை. ஏனெனில் இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தனர். அதனால் ராதையால் கிருஷ்ணரை மறக்கவே முடியவில்லை.
எப்போதுமே ராதை, கிருஷ்ணரிடம் ஓடி வந்து நிற்பாள். கிருஷ்ணரும் அவளுடன் விளையாடுவார். எந்த கட்டுப்பாடுகளும் இன்றி, எந்த சங்கடமும் இல்லாமல் ஆண், பெண் (கிஷோரா- கிஷோரி) விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதாவது சிறுவயதில் குழந்தைகள் விளையாடும் அம்மா-அப்பா விளையாட்டு.
இன்னொரு கதையும் உண்டு
இப்படி கிருஷ்ணர் ராதை குறித்த கதை ஒன்று இருக்க இன்னொரு கதையும் கூறப்படுகிறது. கிருஷ்ணர் சிறு வயதாக இருக்கும் பொழுது, ராதை தான் கிருஷ்ணனுக்கு துணையாக வீட்டில் இருப்பாளாம். அப்படியே இருவரும் பிருந்தாவனம் முழுக்க நடந்து சுற்றித் திரிவார்களாம். அப்படி சுற்றித் திரிகின்ற வேளையில், ஒருநாள் ஆல மரத்தடி ஒன்றில் இருவரும் இளைப்பாறிக் கொண்டிருந்தார்களாம். இருவரும் ஒருவருக்கொருவர் காதல்வயப்பட்டு இருந்த நிலையில் பிரம்மன், ஒரு முனிவர் மற்றும் விருந்தினர்களுடன் தேவலோகத்தில் இருந்து வந்து இறங்கினாராம். அவர்களுக்கு இடையே திருமணம் நடந்ததாம். அதில் பிரம்மனும் தன்னுடைய பங்குக்கு தன்னுடைய கலைத்திறமையைக் காண்பித்தாராம். இப்படியும் ஒரு கதை சொல்லப்படுவது உண்டு.
திருமணத்துக்குப் பின்
அப்படி அந்த ஆலமரத்தடியில் இருவருக்கும் திருமணம் வேத மரபின் படி முடிந்தது. அக்னி வலம் வரும்பொழுது, ராதையின் சேலை நுனி கிருஷ்ணருடைய வேஷ்டியுடன் முடிச்சுப் போடப்பட்டு இருந்தது. திருமண வைபோகம் முடிந்ததும் அங்கிருந்த அனைவரும் இடது புறமாக நகர்ந்து நின்று கொண்டனர். அப்போது எல்லோரும் எதிர்பார்த்தது போல் இல்லாமல், மீண்டும் கிருஷ்ணர் சிறு பிள்ளையாகிவிட, ராதை அவரை அவரின் தாய் யசோதையிடம் ஒப்படைத்துவிட்டு, தன்னுடைய வீட்டுக்கு நடக்க ஆரம்பித்து விட்டார். இப்படி கிருஷ்ணர் ராதைக்கு திருமணம் முடிந்தும் கூட இணைந்து வாழும் நிலை வரவில்லை. அதனால் ராதை காதலியாகவே....
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu