திருப்பரங்குன்றம் பகுதி சிவாலயங்களில் தனுர் மாத பிரதோஷ விழா

திருப்பரங்குன்றம் பகுதி சிவாலயங்களில் தனுர் மாத பிரதோஷ விழா
X

திருப்பரங்குன்றம் மலை பின்புறம் அமைந்துள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு தனுர் மாத பிரதோஷம், 16 வகையிலான சிறப்பு பூஜை, அலங்காரங்கள் நடைபெற்றன. 

திருப்பரங்குன்றம் பகுதி சிவாலயங்களில் தனுர் மாத பிரதோஷ விழாவில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ளது. திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா நடைபெறும். அதில் ,தனுர் மாத பிரதோஷம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.

அவ்வகையில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில், நேற்று தனுர் மாத பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும், சிவபெருமானுக்கு மகா தீப, தூப, ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்