சிவகாசி ஸ்ரீபேச்சியம்மாள் ஆலயத்தில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு

சிவகாசி ஸ்ரீபேச்சியம்மாள் ஆலயத்தில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு
X

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேச்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு.

சிவகாசி ஸ்ரீபேச்சியம்மாள் ஆலயத்தில் மார்கழி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

சிவகாசி ஸ்ரீபேச்சியம்மன் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபேச்சியம்மன் - ஸ்ரீபெரியாண்டவர் கோவில் உள்ளது. இன்று மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு இக்கோவிலில் சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீபேச்சியம்மன் - ஸ்ரீபெரியாண்டவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது. வீதி உலா வந்த சுவாமிகளை ஏராளமானவர்கள் வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில், பௌர்ணமி சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த திருவிளக்கு பூஜையில் சிவகாசி நகரம் மட்டும் இன்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனவர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்