pongal greetings in tamil-பொங்கலோ பொங்கல்..! கொண்டாடுவோம்..குதூகலிப்போம்..!
pongal greetings in tamil-பொங்கல் வாழ்த்துகள் (கோப்பு படம்)
pongal greetings in tamil-வயலில் ஆண்டு முழுவதும் பாடுபட்ட பலன்களை அறுவடை செய்யும் தை மாதத்தின் தொடக்க நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதனால்தான் இது அறுவடைத்திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
வயலில் பயிர்கள் விளைந்து அறுவடையாவதில், விவசாயிக்கு மட்டுமின்றி இயற்கைக் கூறுகளுக்கும் பங்குண்டு. பயிர் உற்பத்திக்கு ஆதாரமான ஒளியைத் தரும் சூரியனுக்கும், நீரைத் தருவதாகக் கருதப்படும் இந்திரனுக்கும், மனிதனுடன் இணைந்து உழைக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகப் பொங்கல் விழாவைத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். விவசாய கிராமங்களில் இவ்விழாவை நன்றி செலுத்தும் விழா என்று குறிப்பிடுகின்றனர்.
பழங்கால தமிழர்கள் பூந்தொடை விழா, இந்திர விழா, உள்ளி விழா, தை நீராடல், தைப்பொங்கல் எனப் பலப்பல விழாக்களைக் கொண்டாடியிருந்தாலும், இன்று எஞ்சியிருக்கும் ஒரே பெரும் கொண்டாட்டம் பொங்கல் மட்டுமே.
இதோ உங்களுக்காக பொங்கல் வாழ்த்துகள். இதில் தேர்ந்தெடுத்து பொங்கல் வாழ்த்துகளை பகிருங்கள்.
இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும். இனிய பொங்கல் வாழ்த்துகள்
தீமைகள் அகன்று புதிய நன்மைகள் சேர்ந்திட போகி மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்
வளமும் நலமும் பொங்கிட; அன்பும் பண்பும் பெருகிட ; உறவும் நட்பும் கூடிட இனிய பொங்கல் வாழ்த்துகள்
ஊருக்கே சோறு போடும் உழவனுக்கும், உலகுக்கே ஒளியேற்றும் கதிரவனுக்கும் நன்றி கூறி கொண்டாடுவோம், இந்த திருநாளை. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
pongal greetings in tamil
நல்லதொரு வாழ்வு பொங்கிட; அஷ்ட லட்சுமிகளும் இல்லத்தில் தங்கிட; இந்நாளை போல எந்நாளும் தித்தித்திட இனிய பொங்கல் வாழ்த்துகள்..!
அறிவு தங்க, அன்பு பொங்க, நேர்மை தங்க, வளமை பொங்க, வலிமை தங்க, இனிமை பொங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
புத்தாடையில் ஜொலித்திட; புத்தரிசியில் பொங்கலிட; உழவனை கொண்டாட; தமிழனாய் தலை நிமிர்ந்திட இனிய பொங்கல் வாழ்த்துகள்
உழைப்பது உழவனானாலும் உண்ணுவது நாமே..! களைத்தவன் உழவனானாலும் செழித்தவன் நாமே..! தாய், தந்தை மட்டும் அல்ல தாயகத்தில் உள்ள உழவர் அனைவரும் நமக்கு தெய்வமே..! இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்
pongal greetings in tamil
காசுக்கு கரும்பு வாங்கி அதை கால் பாகமாக உடைத்து, கடைவாய் பல்லில் கடித்து, தித்திப்போடு கொண்டாடுவோம், இந்த பொங்கல் திருநாளை..! இனிய பொங்கல் வாழ்த்துகள்
துணிவோடு துன்பங்களை எதிர்த்து; இனிப்போடு இன்பங்களை சேர்த்து; கனிவோடு உறவுகளை வளர்த்து கொண்டாடுவோம் தைத் திருநாளை இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
புதுப்பானையில் பொங்கட்டும்; தை பொங்கல் வீட்டினிலே நிறையட்டும்; சொந்தங்களின் சங்கடங்கள் மனதினிலேயே தீரட்டும்.. இனிய பொங்கல் வாழ்த்துகள்
தை பிறந்தாச்சு, வழியும் பிறந்தாச்சு பொங்கட்டும் புது பானையில் பொங்கல். இனிக்கட்டும் புது கரும்போடு வாழ்க்கை..! இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
pongal greetings in tamil
அன்பும், அறிவும், ஆசையும், இன்பமும் இந்த திருநாளில் பொங்கலோடு சேர்ந்து பொங்கட்டும். இனிய பொங்கல் வாழ்த்துகள்
அச்சு வெல்லம், பச்சரிசி கலந்து வச்சி; ஆதவனை துதித்துவிட்டு சொந்தங்கள், பந்தங்கள் ஊர் கூடி கொண்டாடுவோம், வாருங்கள் இத்திருநாளை..! இனிய பொங்கல் வாழ்த்துகள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu