palli vizhum palan-மூக்கு மேல பல்லி விழுந்தா என்ன பலன்..? வாங்க தெரிஞ்சுக்குவோம்..!

palli vizhum palan-மூக்கு மேல பல்லி விழுந்தா என்ன பலன்..? வாங்க தெரிஞ்சுக்குவோம்..!
X

palli vizhum palan-பல்லி விழும் பலன்கள்.(கோப்பு படம்)

palli vizhum palan-பல்லி நம்ம வீடுகளின் சுவர்களில் அல்லது நம்ம வீட்டு டியூப் லைட் பக்கத்தில் இருந்து கத்துவதை பார்த்திருப்போம். அதை கெவுளி சொல்லுதுன்னு பெரியவங்க சொல்வாங்க.

palli vizhum palan-பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிப்பதாகும். கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடல் என்று நம்பப்படுகிறது. பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை நம் வாழ்க்கையில் நிகழச்செய்கிறது. பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதையும், அப்படி பல்லி விழுவதால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரம் என்ன என்பது பற்றி தெரிஞ்சுக்குவோம் வாங்க.


பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்

பல்லி விழும் பலன் – தலை:

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும்.

பல்லி விழும் பலன் – நெற்றி:

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி உண்டாகும். நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மிகரம் உண்டாகும்.

palli vizhum palan

வயிறு பகுதியில் பல்லி விழுந்தால்

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும்.

முதுகு மீது பல்லி விழுதல்:

முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.

கண் பகுதியில் பல்லி விழுந்தால்:

கண் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும். கண் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்

தோள்:

தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

palli vizhum palan

பிருஷ்டம்:

பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம் உண்டாகும். பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம் உண்டாகும்.

கபாலம் பகுதியில் பல்லி விழுந்தால்:

கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் கதனம் உண்டாகும்.


palli vizhum palan

கணுக்கால் பகுதியில் பல்லி விழுதல்:

கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும். கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும்.

பல்லி விழும் பலன் – மூக்கு

மூக்கு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி உண்டாகும்

மணிக்கட்டு பகுதியில் பல்லி விழுந்தால்:

மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும்.

தொடை

தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

palli vizhum palan

நகம் மீது பல்லி விழுந்தால்: நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.

காது

காதின் இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள் கூடும்.

மார்பு

மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும். மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.

பல்லி விழும் பலன் – கழுத்து

கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.

palli vizhum palan

உதடு மீது பல்லி விழுதல்

உதடு இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். உதடு வலது பக்கம் பல்லி விழுந்தால் கஷ்டம் உண்டாகும்.

முழங்கால்

முழங்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும். முழங்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.

பாத விரல் – பல்லி விழும் பலன்கள்

பாத விரல் இடது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும். பாத விரல் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும்.


palli vizhum palan

கை மீது பல்லி விழுந்தால்

இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

கை விரல் மீது பல்லி விழுதல்

இடது கை விரல் மீது பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது கை விரல் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும்.

palli vizhum palan

பாதம் – பல்லி விழும் பலன்கள்

பாதம் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பாதம் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.

Tags

Next Story