Palli Vilum Palan in Tamil for Male-பல்லி விழும் பலன் அறிவோம் வாங்க..!

Palli Vilum Palan in Tamil for Male-பல்லி விழும் பலன் அறிவோம் வாங்க..!
X
பல்லி விழும் பலன் என்பது நமது முன்னோர் காலத்தில் இருந்து கௌலி சாஸ்திரம் மூலமாக அறிந்து அதற்கேற்ப பரிகாரம் செய்தும் வந்துள்ளனர்.

Palli Vilum Palan in Tamil for Male

பல்லியை இறைவனின் தூதன் என்று கூறுவதும் உண்டு. வீடுகளில் வசிக்கும், ஊர்வன வகையைச் சேர்ந்த பல்லி ஒன்று தான் ஊர்வனவற்றுள் ஒலியை எழுப்பும் திறன் உடையது. அது குரல் எழுப்பினாலும் நம் மீது விழுந்தாலும் சில சிறப்பான நல்ல மற்றும் தீய பலன்கள் என்று கூறுவது உண்டு.

Palli Vilum Palan in Tamil for Male

நவீன வசதிகள் அற்ற பழங்காலங்களில் மக்கள் சகுனம், நிமித்தம் போன்றவற்றின் அடிப்படையில் தான் தங்கள் செயல்களை மேற்கொண்டார்கள். ஜோதிடத்தில் பல சாஸ்திரங்கள் இருப்பது போல கௌலி சாஸ்திரம் என்ற ஒரு சாஸ்திரத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு பயன்படுத்தினார்கள்.

கௌலி சாஸ்திரம் என்பது பல்லி குறித்த சாஸ்திரம் ஆகும். இது சகாதேவனால் இயற்றப்பட்ட சாஸ்திரம் என்று நம்பப்படுகின்றது. நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் கூறிவிட்டு செல்லவில்லை என்பதை நாம் விஞ்ஞான ரீதியாக யாராவது உணர்த்தும் போது தான் புரிந்து கொள்கிறோம்.

Palli Vilum Palan in Tamil for Male

பல்லி நம் உடல் மீது விழும் போது அது நம் உடலில் விழும் இடத்தைப் பொறுத்து நல்ல பலன்கள் மற்றும் தீய பலன்கள் ஏற்படும் என்று கூறப்படுகின்றது. நமது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் கூட மனிதர்களுக்கு வரும் எதிர்வினைகளை முன் கூட்டியே அறிய வைக்கும் உயிரினங்களில் ஒன்றென பல்லியை கருதுகின்றது.

பல்லி விழும் பலன்

தலை:பல்லி தலையில் விழுந்தால் கலகம்

முகம் : பல்லி முகத்தில் விழுந்தால் உறவினர் வருகை மற்றும் தரிசனம்

புருவங்களின் மத்தி : பல்லி புருவங்களின் மத்தியில் விழுந்தால் அரசு வகையில் அனுகூலம்

மேலுதடு: பல்லி மேலுதட்டில் விழுந்தால் பணம் விரையம் ஏற்படும்.

கீழுதடு: பல்லி கீழுதட்டில் விழுந்தால் தன லாபம்

மூக்கு : பல்லி மூக்கின் மீது விழுந்தால் வியாதி அல்லது வேறு சம்பவம்

Palli Vilum Palan in Tamil for Male

வலது செவி : பல்லி வலது செவியின் மீது விழுந்தால் தீர்க்காயுசு

இடது செவி : பல்லி இடது செவியின் மீது விழுந்தால் வியாபாரத்தில் அல்லது தொழிலில் லாபம்

கண்கள் : பல்லி கண்களின் மீது விழுந்தால் சிறைவாசம்

முகவாய் : பல்லி முகவாய்க்கட்டையின் மீது விழுந்தால் அரசாங்க தண்டனை

வாய் : பல்லி வாயில் விழுந்தால் பயம்

கழுத்து : பல்லி கழுத்தின் மீது விழுந்தால் எதிரிகள் தோல்வி அல்லது நாசம்

Palli Vilum Palan in Tamil for Male

வலது பூஜம்: பல்லி வலது புஜத்தில் விழுந்தால் ஆரோக்கியம்

இடது பூஜம் : பல்லி இடது புஜத்தில் விழுந்தால் பெண்கள் மீது பிரியம்

வலது மணிக்கட்டு: பல்லி வலது மணிக்கட்டு மீது விழுந்தால் பீடை சம்பவிக்கும்

இடது மணிக்கட்டு: பல்லி இடது மணிக்கட்டு மீது விழுந்தால் புகழ் மற்றும் கீர்த்தி பெறலாம்

ஸ்தனம் : பல்லி ஸ்தனங்களின் மீது விழுந்தால் பாப சம்பவம்

Palli Vilum Palan in Tamil for Male

வயிறு : பல்லி வயிற்றின் மீது விழுந்தால் தானியங்களின் மூலம் லாபம்

மார்பு : பல்லி மார்பின் மீது விழுந்தால் தனலாபம்

நாபி : பல்லி நாபியின் மீது விழுந்தால் ரத்தினங்கள் வகையில் லாபம்

தொடை : பல்லி தொடை மீது விழுந்தால் தந்தை உடல் அசௌகரியம்

முழங்கால் : பல்லி முழங்கால் மீது விழுந்தால் சுகம்

கணுக்கால் : பல்லி கணுக்கால் மீது விழுந்தால் சுபம்

பாதம் : பல்லி பாதங்களின் மீது விழுந்தால் பிரயாணம்

புட்டம் : பல்லி புட்டத்தின் மீது விழுந்தால் சுபம்

நகங்கள் : பல்லி நகங்கள் மீது விழுந்தால் தன நாசம்

ஆண்குறி : பல்லி ஆண் குறி மீதி விழுந்தால் தரித்திரம்

கூந்தல் : பல்லி கூந்தல் மீது விழுந்தால் மரணம் குறித்த பயம்

Palli Vilum Palan in Tamil for Male

பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்:

நமது முன் வினைப் பயன் காரணமாகத் தான் பல்லி நம் மீது விழுகிறது.. எனவே முதலில் பல்லி நம் மீது விழுந்தால் தூய்மையான நீரினால் நீராடி விட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைப்பது நல்லது. இதன் மூலம் நம் மனதில் இருக்கும் பயம் மற்றும் குறைகள் அகலும். மேலும் ஆலயம் சென்று வழிபட்டு விட்டு வந்தால் நிம்மதி பெருகும்.

மேலும் காஞ்சிபுரத்தில் அமைந்து உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பல்லிக்கு உகந்த கோவிலாக கருதப்படுகிறது. அங்கு அமைந்துள்ள தங்கம் மற்றும் வெள்ளியில் உள்ள பல்லி சிலையை நாம் தொடுவதால் ஏதாவது தீய அசம்பாவிதங்கள் மற்றும் தோஷங்கள் நீங்குவதாக காலம் காலமாக நம்பப்படுகிறது. மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலும் பல்லியை வழிபடுகின்றனர். ஆகையால் அருகில் இருப்பவர்கள் அங்கேயும் கூட சென்று வழிபடலாம்.

Palli Vilum Palan in Tamil for Male

காஞ்சீபுரம் வரதாரஜப் பெருமாள் கோவில் பல்லி வரலாறு:

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். உரிய வயதில் கல்வி கற்க, இருவரும் கௌதம ரிஷியின் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டனர். இருவரும் முறையாகப் பாடம் பயின்று வந்தனர். குருவுக்குச் சேவை செய்வதே பெரும் பாக்கியம் என்பதை உணர்ந்து குரு வார்த்தைக்கு மறு வார்த்தையின்றித் தங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தனர். கௌதம ரிஷி செய்யும் பூசைக்குத் தேவையான பூக்கள், பழங்கள், தீர்த்தம் முதலியன கொண்டு வருவார்கள்.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் கெளதம முனிவரிடம் வித்தை பயின்றனர். இவர்கள் இருவரும் விஷ்ணு பூஜைக்குப் பழங்கள், மலர்கள், தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.

ஒருநாள் அவர்கள் கொண்டுவந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்க, அதில் ஒரு பல்லி விழுந்துவிட்டது. இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டுவந்து கெளதம முனிவரிடம் கொடுக்க, முனிவர் அதை பெற்றுக்கொண்டபோது அதிலிருந்த பல்லி வெளியில் தாவி ஓடியது.

அதைக்கண்டு கடும் கோபமுற்ற கெளதம முனிவர் அவர்கள் இருவரையும் நோக்கி பல்லியாகக்கடவது என்று சாபமளித்தார். இதனால் கவலையடைந்த ஹேமன், சுக்லன் இருவரம் முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, தங்களை மன்னித்து, பாவ விமோசனமும் கூற வேண்டும் என வேண்டினர்.

Palli Vilum Palan in Tamil for Male

உடனே முனிவர் சாந்தமடைந்து, இந்திரன் யானை வடிவம் கொண்டு (கஜேந்திரனாக) வரதராஜ பெருமாளை தரிசிக்க சந்நிதியில் நுழையும்போது சாபம் அகலும் என்று கூறினார்.

அதன்பின் ஹேமன், சுக்லன் இருவரும் இத்தலத்திற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிரகாரத்தில், மூலவரின் வடகிழக்கே பல்லியாக வந்து அமர்ந்தனர். குறிப்பிட்ட காலம் நெருங்கியதும் இந்திரன், கஜேந்திரன் யானை வடிவில் இத்தலத்தில் நுழைந்தவுடன் இவர்களின் சாபம் அகன்றது.

இந்த பல்லிகளை தங்கம் மற்றும் வெள்ளியில் இன்றளவும் நாம் வரதராஜப் பெருமாள் சன்னதிக்கு அருகில் தரிசிக்கமுடியும். இதைத்தொட்டு வணங்குபவர்களுக்கு பல்லி விழுவதால் ஏற்படக்கூடிய சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

Palli Vilum Palan in Tamil for Male

பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!