சக்தியை போற்றினால் சகலகலா வல்லவன் ஆகலாம்..! எப்படி..?

OM Sakthi 108 Manthiram in Tamil
X

OM Sakthi 108 Manthiram in Tamil

OM Sakthi 108 Manthiram in Tamil-சக்தி என்பது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. அந்த சக்தியே பராக்கிரம பெண் வடிவமாக பராசக்தியாக வணங்குகிறோம்.

OM Sakthi 108 Manthiram in Tamil-இந்த உலகில்a உத்வேகம் அளிக்கும் சக்தி பெண்ணிடம் உள்ளது. அதனால்தான் பெண் ஒரு சக்தியாக போற்றப்படுகிறாள். அதுவே பராசக்தியாக கருதி வழிபடும் வழக்கமாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. பராசக்தியான அம்மனுக்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. அவைகளை உச்சரித்தாலே சக்தி பெருகும். அம்மனின் ஒரு பெயராக ஓம் சக்தி இருக்கிறது. இந்த ஓம் சக்தி வடிவாக இருக்கும் அம்மனை போற்றி இயற்றப்பட்டது தான் ஓம் சக்தி போற்றித் துதி. இந்த ஓம் சக்தி போற்றி துதியை தினமும் துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1.ஓம் சக்தி போற்றி 2. ஓம் ஓம்சக்தியே போற்றி 3. ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி 4. ஓம் உலக நாயகியே போற்றி 5. ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி 6. ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி 7. ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி 8. ஓம் உண்மைப் பரம் பொருளே போற்றி 9. ஓம் உயிராய் நின்றவளே போற்றி 10. ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி 11. ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி 12. ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி 13. ஓம் ககனவெளி ஆனாய் போற்றி 14. ஓம் புற்றாகி வந்தவளே போற்றி 15.ஓம் பாலாகி வடிந்தவளே போற்றி 16.ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி 17. ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி 18. ஓம் பாமலர் உவந்தாய் போற்றி 19. ஓம் பாம்புரு ஆனாய் போற்றி 20. ஓம் சித்துரு அமைந்தாய் போற்றி 21. ஓம் செம்பொருள் நீயே போற்றி 22. ஓம் சக்தியே தாயே போற்றி ஓம் சன்மார்க்க நெறியே போற்றி 23. ஓம் சமதர்ம விருந்தே போற்றி 24. ஓம் ஓங்கார உருவே போற்றி 25. ஓம் ஒருதவத்துக் குடையாய் போற்றி 26. ஓம் நீள்பசி தவிர்ப்பாய் போற்றி 27. ஓம் நின்மதி தருவாய் போற்றி 28. ஓம் அகிலமே ஆனாய் போற்றி 29. ஓம் அண்டமே விரிந்தாய் போற்றி 30. ஓம் ஆன்மீகச் செல்வமே போற்றி

31. ஓம் அனலாக ஆனாய் போற்றி 32. ஓம் நீராக நிறைந்தாய் போற்றி 33. ஓம் நிலனாகத் திணிந்தாய் போற்றி 34. ஓம் தூறாக வளர்ந்தாய் போற்றி 35. ஓம் துணிபொருள் நீயே போற்றி 36. ஓம் காராக வருவாய் போற்றி 37. ஓம் கனியான மனமே போற்றி 38. ஓம் மூலமே முதலே போற்றி 39. ஓம் முனைச்சுழி விழியே போற்றி 40. ஓம் வீணையே இசையே போற்றி 41. ஓம் விரைமலர் அணிந்தாய் போற்றி

42. ஓம் தத்துவங் கடந்தாய் போற்றி 43. ஓம் சகலமறைப் பொருளே போற்றி 44.ஓம் உத்தமி ஆனாய் போற்றி 45. ஓம் உயிர்மொழிக் குருவே போற்றி 46. ஓம் நெங்சம் நீ மலர்ந்தாய் போற்றி 47. ஓம் நீள் நிலத் தெய்வமே போற்றி 48. ஓம் துரிய நிலையே போற்றி 49. ஓம் துரிய தீத வைப்பே போற்றி 50. ஓம் ஆயிர இதழ் உறைவாய் போற்றி 51. ஓம் அகிலமெல்லாம் ஆட்டுவிப்பாய் போற்றி 52.ஓம் கருவான மூலம் போற்றி 53. ஓம் உருவான கோலம் போற்றி 54. ஓம் சாந்தமே உருவாய் போற்றி 55. ஓம் சரித்திரம் மறைத்தாய் போற்றி 56. ஓம் சின்முத்திரை தெரிப்பாய் போற்றி 57. ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி 58. ஓம் கையிரண்டு உடையாய் போற்றி 59. ஓம் கரைபுரண்ட கருணை போற்றி 60. ஓம் மொட்டுடைக் கரத்தாய் போற்றி

om sakthi 108 potri in tamil-61. ஓம் மோனநல் தவத்தாய் போற்றி 62. ஓம் யோகநல் உருவே போற்றி 63. ஓம் ஒளியன ஆனாய் போற்றி 64. ஓம் எந்திரத் திருவே போற்றி 65. ஓம் மந்திரத் தாயே போற்றி 66. ஓம் பிணி தவிர்த்திடுவாய் போற்றி 67. ஓம் பிறவிநோய் அறுப்பாய் போற்றி 68. ஓம் மாயவன் தங்கையே போற்றி 69. ஓம் சேயவன் தாயே போற்றி 70. ஓம் திரிபுரத்தாளே போற்றி 71. ஓம் ஒருதவம் தெரிப்பாய் போற்றி 72. ஓம் வேம்பினை ஆள்வாய் போற்றி 73. ஓம் வினையெலாம் தீர்ப்பாய் போற்றி 74. ஓம் அஞ்சனம் அருள்வாய் போற்றி 75. ஓம் ஆருயிர் மருந்தே போற்றி 76. ஓம் கண்ணொளி காப்பாய் போற்றி 77. ஓம் கருத்தொளி தருவாய் போற்றி 78. ஓம் அருளொளி செய்வாய் போற்றி 79. ஓம் அன்பொளி கொடுப்பாய் போற்றி 80. ஓம் கனவிலே வருவாய் போற்றி 81. ஓம் கருத்திலே நுழைவாய் போற்றி 82. ஓம் மக்கலைக் காப்பாய் போற்றி 83. ஓம் மனநோயைத் தவிர்ப்பாய் போற்றி 84.ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி 85. ஓம் இதயமாம் வீணை போற்றி 86. ஓம் உருக்கமே ஒளியே போற்றி 87. ஓம் உள்ளுறை விருந்தே போற்றி 88. ஓம் மலப்பிணி தவிர்ப்பாய் போற்றி 89. ஓம் மனங்கனிந்து அருள்வாய் போற்றி 90. ஓம் நாதமே நலமே போற்றி

91. ஓம் நளின மலர் அமர்வாய் போற்றி 92. ஓம் ஒற்றுமை சொல்வாய் போற்றி 93. ஓம் உயர்நெறி தருவாய் போற்றி 94. ஓம் நித்தமும் காப்பாய் போற்றி 95. ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி 96. ஓம் பத்தினி பணிந்தோம் போற்றி 97. ஓம் பாரமே உனகே போற்றி 98. ஓம் வித்தையே விளக்கே போற்றி 99. ஓம் விந்தையே தாயே போற்றி 100. ஓம் ஏழையர் அன்னை போற்றி 101. ஓம் ஏங்குவோர் துணையே போற்றி 102. ஓம் காலனைப் பகைத்தாய் போற்றி 103. ஓம் கண்மணி ஆனாய் போற்றி 104. ஓம் சத்தியப் பொருளே போற்றி 105. ஓம் சங்கடந் தவிர்ப்பாய் போற்றி 106. ஓம் தத்துவச் சுரங்கமே போற்றி 107. ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி 108. ஓம் ஆறாதார நிலையே போற்றி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் ஓம் ஓம்

om sakthi 108 potri in tamil-பிரபஞ்சம் எங்கும் நீக்கமற சக்தியாக நிறைந்து இருக்கும் சக்தி, பார்வதி தேவி. இந்த துதியை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், வீட்டின் பூஜை அறையில் அம்பாளின் படத்திற்கு தீபம் ஏற்றி, பூக்கள் சமர்ப்பித்து, 108 முறை துதித்தால் ஆத்ம சக்தி பெருகும். சோம்பேறித்தனம் மறையும். தீய எண்ணங்கள் நீங்கி நற்சிந்தனை வளரும். வறுமை நிலை ஒழியும். எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்படைந்து லாபங்கள் பெருகும். ஈடுபடும் எந்த புதிய முயற்சிகளும் சிறப்பான வெற்றியைத்தரும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ai in future agriculture