வடக்குப்பார்த்த வாசல் வீடு யாரை பணக்காரனாக்கும்..? பார்ப்போமா..?

north facing house vastu plan in tamil-வடக்குப்பார்த்த வீடு (கோப்பு படம்)
வடக்கு திசையின் பொதுவிளக்கம்
North Facing House Vastu in Tamil-வாழும் வீட்டில் சந்தோஷமும் நிம்மதியும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கும். அந்த நிம்மதியைத் தரும் வரிசையில் வாஸ்துவும் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது. கல்வி, செல்வம் ஒருசேர கிடைத்துவிட்டால் முழுவதுமான நிம்மதி வரும். அதற்கு வாஸ்து சாஸ்த்திர அடிப்படையில் வீட்டை வடிவமைத்துக்கொண்டாள் எல்லாம் ஒருசேர வாய்க்கும். ஒரு சிலருக்கு ஜாதகப்படி வாஸ்து எதிர்பாராமல் அமைந்துவிடலாம். சிலருக்கு வாஸ்து நிபுணரை பார்த்து அதற்கேற்ப வீட்டை அமைத்து யோகம் வரச் செய்யலாம். வாஸ்துப்படி இல்லம் அமைவது கூட ஒரு அதிர்ஷ்டம் தான். அதிலும் வடக்கு பார்த்த வாசல் ஒருவருக்கு அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம். குபேரரே அவர் வீட்டில் குடி வந்து விட்டதாக நினைத்துக் கொள்ளலாம். இந்த வடக்கு பார்த்த வாசல் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்? யாருக்கு அதிர்ஷ்டத்தை தராது என்று பார்ப்போம் வாங்க.
செல்வம்
பொதுவாகவே வடக்குத் திசை வீட்டில் வசிப்பவர்கள் செல்வ வளத்துடன் இருப்பார்கள். ஜோதிடத்தில் வடக்கு திசை புதனுக்குரியதாக சொல்லப்பட்டுள்ளது. நமக்கு செல்வங்களை அள்ளித் தருவதும் இந்த புதன் பகவான் தான். செல்வத்துக்கு எல்லாம் அதிபதியான குபேரர் வசிப்பதும் இந்த வடக்கு திசையில் தான்.
பொதுவாக சொந்தத் தொழில் செய்பவர்கள், சொந்தமாக கடை வைத்திருப்பவர்கள், வடக்குப் பார்த்த வாசலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகப்படியான பணம் புரளும் வேலையைச் செய்பவர்கள் வடக்கு திசை வாசலில் உள்ள வீட்டில் வசிப்பதும், வடக்கு திசை வாசல் வீட்டில் வசிப்பவர்கள் கட்டாயம் செல்வ வளத்தை பெற்றவர்களாகத் தான் இருப்பார்கள் என்பதும்நாம் காணும் உண்மை.
தேடிவரும் அதிர்ஷ்டம்
சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி வடக்கு வாசலில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கட்டாயம் தேடி வரும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கூட, விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் கொண்டவர்களாக மாறுவார்கள். வடக்கு திசை வாசல் இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் அதிகமாக சேமிக்கலாம். கடன் வாங்கி வீடு கட்டினால் கூட, அதை கூடியவரையில் திருப்பித் தரக் கூடிய அளவிற்கு வருமானம் வந்துவிடும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டாகும். திடீரென்று எதிர்பாராத பொருள் சேர்க்கையும் வரும்.
யாருக்கு யோகம் ?
எல்லா ராசிக் காரர்களுக்கும் வடக்கு திசை பார்த்த வீடானது யோகத்தை அள்ளித் தரும் என்பது உறுதி. எந்த சந்தேகமும் தேவையில்லை. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் புதனின் ராசிகளான மிதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிகப்படியான அதிர்ஷ்டம் கிடைக்கும்.ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் 6, 8, 12 -ம் இடங்களில் இருந்தால் வடக்கு பார்த்த வாசல்படி அவ்வளவு சிறந்ததாக அமையாது என்பது குறிப்பிடத்தக்கது.
உழைப்பும் வேணும்
இதற்காக வடக்கு பார்த்த வாசலில் இருப்பவர்கள் உழைக்காமல் பணம் கொட்டாது.அதேபோல மற்ற திசைகளில் இருப்பவர்கள் வசதி படைத்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதும் அர்த்தம் இல்லை. எது எப்படியாக இருந்தாலும், உழைப்பை முதலீடாக போட்டு முயற்சி எடுப்பவர் மட்டுமே முன்னேறமுடியும். முயற்சியும் உழைப்பும் இல்லாமல் 'கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லை' என்று புலம்புவது கண்ணைக் கட்டிக்கொண்டு 'இருட்டு.. இருட்டு' என்பதற்கு ஒப்பாகும்.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். அதாவது வாஸ்துப்படி என்னை குபேரனாக்கும் என்று சொல்லிக்கொண்டு உழைக்காமல் இருக்க முடியுமா? முயற்சி,உழைப்போடு வாஸ்துவும் இணைந்து ஒரு பெரிய பலத்தை உருவாக்கும். அதுவே வெற்றி. வெற்றி பெருகப்பெருக குபேரன்தான் நீங்க.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu