/* */

இரவு நேர ஊரடங்கு: வைகுண்ட ஏகாதசி நாளில் விலக்கு உண்டா?

இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ல சூழலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின் போது, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இரவு நேர ஊரடங்கு: வைகுண்ட ஏகாதசி நாளில் விலக்கு உண்டா?
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பிற்கு, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை பார்த்தசாரதி கோயில் நிர்வாகத்தின் உதவி ஆணையர் கவேனிதா கூறியதாவது: வருடந்தோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வைகுண்ட ஏகாதசிக்கு, சொர்க்கவாசல் திறப்பிற்கு பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

எனவே, வரும் 13 ஆம் தேதி பொதுமக்கள் காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை அரசின் நிலையான வழிகாட்டுதலை பின்பற்றி தரிசனம் மேற்கொள்ளலாம். கோவிலுக்கு வரக்கூடிய பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

Updated On: 7 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...