Nakshatra in tamil-ராசியைக் காட்டிலும் நட்சத்திரத்துக்கு வலிமை அதிகம்..! எப்படி..?

nakshatra in tamil-27 நட்சத்திரங்கள்.(கோப்பு படம்)
Nakshatra in tamil
ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானது நட்சத்திரம். கிரகங்களை விடவும் நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம் என கூறப்படுகிறது. ஒருவருடைய ஜாதகம் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ, அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. மொத்த நட்சத்திரம் 27 ஆகும். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என குறிப்பிடப்படுகின்றன.
பாதம் என்றால் என்ன?
ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதம் என்று சொல்லப்படுகிறது. நட்சத்திர ஒளிக்கற்றைகளை நான்கு பாதங்களாக பிரிக்கிறார்கள். அதனால் தான் 4 பாதங்கள் என்று கூறப்படுகிறது. அதே போல் நாழிகை தான் அதிகளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது தோராயமாக ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகைகள் இருப்பதாக எடுத்துக் கொண்டேமானால் அதை நான்காக பிரிக்கும்போது ஒரு நட்சத்திரத்தின் ஒரு பாதம் என்பது முதல் 15 நாழிகைகள் ஆகும்.
Nakshatra in tamil
அடுத்த 15 நாழிகைகள் அதே நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் என அழைக்கப்படுகிறது. இதே போன்று அதே நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம், நான்காம் பாதம் அடுத்தடுத்த 15 நாழிகைகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
27 நட்சத்திரங்கள்
1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீரிஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
Nakshatra in tamil
நட்சத்திர அதிபதிகள்
அஸ்வினி – கேது
பரணி – சுக்கிரன்
கார்த்திகை – சூரியன்
ரோகிணி – சந்திரன்
மிருகசீரிஷம் – செவ்வாய்
திருவாதிரை – ராகு
புனர்பூசம் – குரு (வியாழன்)
பூசம் – சனி
ஆயில்யம் – புதன்
மகம் – கேது
பூரம் – சுக்கிரன்
உத்திரம் – சூரியன்
அஸ்தம் – சந்திரன்
சித்திரை – செவ்வாய்
சுவாதி – ராகு
விசாகம் – குரு (வியாழன்)
அனுஷம் – சனி
கேட்டை – புதன்
மூலம் – கேது
பூராடம் – சுக்கிரன்
உத்திராடம் – சூரியன்
திருவோணம் – சந்திரன்
அவிட்டம் – செவ்வாய்
சதயம் – ராகு
பூரட்டாதி – குரு (வியாழன்)
உத்திரட்டாதி – சனி
ரேவதி – புதன்
Nakshatra in tamil
நட்சத்திரங்களின் வகைகள்
முழுமையான நட்சத்திரங்கள்
அஸ்வினி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி இந்த 18 நட்சத்திரங்களும் முழுமையான நட்சத்திரங்கள்.
உடைந்த நட்சத்திரங்கள்
சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம், செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என இந்த நட்சத்திரங்களே உடைந்த நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
தலையற்ற நட்சத்திரங்கள்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்று நட்சத்திரங்களும், தன் முதல் பாதத்தை ஒரு ராசியிலும், மற்ற மூன்று பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும். உதாரணமாக கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதம் மேஷ ராசியிலும், மற்ற மூன்று பாதங்களும் ரிஷப ராசியிலும் இருக்கும். இப்படி முதல்பாதம் மட்டும் இழந்ததால் இந்த மூன்று நட்சத்திரங்களும் தலையற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
உடலற்ற நட்சத்திரங்கள்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த மூன்று நட்சத்திரங்களும் தன் முதல் இரண்டு பாதங்களை ஒரு ராசியிலும், மற்ற இரண்டு பாதங்களை அடுத்த ராசியிலும் வைத்து இருப்பதால் இதை உடலற்ற நட்சத்திரங்கள் என்பார்கள். உதாரணமாக, மிருகசீரிடம் நட்சத்திரம் தன் முதல் இரண்டு பாதங்களை ரிஷப ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்களை மிதுன ராசியிலும் வைத்துள்ளது.
Nakshatra in tamil
காலற்ற நட்சத்திரங்கள்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த மூன்று நட்சத்திரங்களும் தன் முதல் மூன்று பாதங்களை ஒரு ராசியிலும் நான்காவது பாதத்தை அடுத்த ராசியிலும் வைத்திருப்பதால் இந்த நட்சத்திரங்களை காலற்ற நட்சத்திரங்கள் என்பார்கள். உதாரணமாக, புனர்பூசம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுன ராசியிலும், கடைசி பாதமான நான்காவது பாதத்தை கடக ராசியிலும் வைத்திருக்கும்.
ராசிகள்
மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அவை,
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
Nakshatra in tamil
இராசி மண்டலம்
இராசிக் கட்டத்தை “இராசி மண்டலம்” என்றே அழைக்கிறது ஜோதிடம். அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும், நாம் வாழும் இந்த பூமிக்கு தாக்கத்தை உண்டாக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி என அனைத்து கோள்களையும் உள்ளடக்கியதே இந்த இராசி மண்டலம்.
நமக்கு ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள். இந்த 48 எப்படி கணக்கிடப்பட்டது? இராசிகள் 12 , அந்த இராசிக் கட்டத்தில் வாசம் செய்யும் கோள்கள் 9. இந்த கோள்கள் பயணிக்கும் நட்சத்திரங்கள் 27. இதன் மொத்த கூட்டுத்தொகை 48. இப்போது எளிதாகப் புரிந்திருக்கும்.
ஒரு இராசி மண்டலம் என்பது 360 பாகைகளை (டிகிரி) கொண்டது. இந்த இராசி மண்டத்தில் 30 டிகிரியைக் கொண்டது ஒரு இராசி. 27 நட்சத்திரங்கள் இராசி மண்டலத்திலுள்ள ஒவ்வொரு இராசிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பகிரப்பட்ட நட்சத்திரங்கள் பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாதத்துக்கும் ஒரு குறிப்பிட்ட டிகிரிகள் வழங்கப்பட்டு 12 இராசிகளில் இடம்பெறுமாறு செய்யப்பட்டுள்ளது.
நவகிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்கள் உள்ளன. நவகிரகங்களில் சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் என உள்ளன. அதில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் சுப கிரகங்கள் ஆகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது அசுப கிரகங்கள். சந்திரனைப் பொறுத்தவரை வளர்பிறை சந்திரன் மட்டுமே முழு சுபர் ஆவார். தேய்பிறையில் இருந்தால் அவர் அவ்வளவு நல்ல பலன்களைத் தருவதில்லை.
ஆக இப்படி எண்ணற்ற பல அரிய ஆய்வுகளோடு ஜோதிட சாஸ்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான் ஒருவரின் ஜாதகத்தைக் கொண்டு ஜனனம் முதல் மரணம் வரை கணித்து சொல்ல முடிகிறது. அதே போன்று ஒருவர் பிறக்கும் போது என்ன நட்த்திரம் இருக்கின்றதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரங்களுக்கென்று தனித்தனி குணாதியங்கள் உண்டு. அதை வைத்து ஜாதகரின் குணம், செயல்பாடு, வாழ்க்கைப் பயணம் நிர்ணயிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu