நாகர்கோவில் நாகராஜா கோவில் தைத்திருவிழாவிற்கான கால் நாட்டு விழா
நாகர்கோவில் நாகராஜா கோவில் தைத்திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாகராஜாவிற்கு பூஜைகள் நடத்தி பரிகாரம் பெற்று செல்வார்கள். இது ஒரு பரிகார ஸ்தலம் என்பதால் சுற்று வட்டார மாவட்டங்கள் மட்டும் இன்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வழிபாடு நடத்த வருவார்கள்.
தங்களது வீடுகளுக்குள் பாம்பு வரக்கூடாது என நினைப்பவர்கள் மற்றும் பாம்புளால் அடிக்கடி பயப்படுபவர்கள் கூட இங்கு பூஜை நடத்துவது உண்டு.மேலும் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா தளங்களை பார்வையிடும் சுற்றுலா பயணிகளும் இக்கோவில் நாகராஜாவை வழிபடுவார்கள்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும்.அதன்படி வருகிற ஜனவரி மாதம் 18-ந் தேதி தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.நிகழ்ச்சியில் கோவில் நம்பூதிரி கேசவன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால்நாட்டப்பட்டது. இதில் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu