திருமணம் செய்ய எதெல்லாம் முக்கிய பொருத்தம்..? தெரிஞ்சுக்கங்க..!

mukkiya thirumana porutham in tamil-திருமணப்பொருத்தம் (மாதிரி படம் )
Mukkiya Thirumana Porutham in Tamil
முக்கிய திருமண பொருத்தம் (Mukkiya Thirumana Porutham) – பொதுவாக ஆண்,பெண் இருவரின் வாழ்க்கைத் தரம், புத்திர விருத்தி, குடும்ப ஒற்றுமை, அன்யோன்யம், வருமானம், சத்தியம், தர்மம், வம்சாவழி, குடும்ப மரபு ஆகியவற்றை ஆய்வு செய்து பின்னரே சரியாக ஜாதகப் பொருத்தம்(Accurate Thirumana Porutham in Tamil) செய்ய வேண்டும்.
முக்கிய திருமண பொருத்தம்
இரண்டு ஜாதகங்களை இணைக்கும்போது சில முக்கியமான ஜாதகப் பொருத்தங்களை ஜோதிடர்கள் பார்ப்பது அவசியம். அவை
1) திருமணம் தொடர்பான தோஷங்கள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.
2) பாவக ரீதியான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
3) இருவருக்கும் என்ன திசா நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.
4) நட்சத்திர பொருத்தம்
இந்த நான்கும் பார்த்துதான் இணைக்க வேண்டும். அவைகளை பற்றி பார்ப்போம்
திருமணம் தொடர்பான தோஷங்கள்
1) செவ்வாய் தோஷம்
2) சர்ப்ப தோஷம்
3) கால சர்ப்ப தோஷம்
4) சனி தோஷம்
5) களத்திர தோஷம்
6) புத்திர தோஷம்
7) புனர்பூ தோஷம் ஆகியவை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
எளிதாக சொல்ல வேண்டுமென்றால் மணவாழ்வில் மகிழ்ச்சியை தரக்கூடிய 1,2,7,8ஆம் பாவகத்த்தில் அசுப கிரகங்கள் இருந்தால் தோஷங்கள் உண்டாகின்றன
செவ்வாய் தோஷம் – 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்க செவ்வாய் தோஷம் உண்டு.
சர்ப்ப தோஷம் – 1,2,5,7,8,12 ஆம் இடத்தில் ராகு கேது இருக்க சர்ப்ப தோஷம் உண்டு.
கால சர்ப்ப தோஷம் – ராகு மற்றும் கேது இருக்க அதற்குள்ளே மற்ற கிரகங்கள் இருப்பின் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
சனி தோஷம் – 1,2,5,7,8,12 ஆம் இடத்தில் சனி இருக்க சனி தோஷம் ஏற்படுகிறது.
களத்திர தோஷம் – 1,2,7,8 ஆகிய இடங்களில் அசுப கிரகங்கள் இருக்க களத்திர தோஷம் உண்டாகிறது.
புத்திர தோஷம் – 5ஆம் அதிபதி கெட்டிருப்பது, 5ஆம் பாவகம் வலிமை இழந்திருப்பது அல்லது ராகு கேது போன்ற அசுப கிரகங்கள் 5ஆம் வீட்டில் அமர்ந்து இருப்பது புத்திர தோஷத்தை உண்டாகிறது.
புனர்பூ தோஷம் – புனர்பூ தோஷம் சனி மற்றும் சந்திரன் தொடர்பால் ஏற்படுகிறது. சனி மற்றும் சந்திரன் எவ்வகையிலாவது தொடர்பு பெற்றிருந்தாலும் புனர்பூ தோஷம் உண்டாகிறது.
இவ்வாறு தோஷம் உள்ள ஜாதகங்களை அதேபோல தோஷம் உள்ள ஜாதகத்துடன் பொருத்தம் செய்ய வேண்டும்.
பாவக ரீதியான ஆய்வு (சிறந்த ஜாதகம் பொருத்தம் )
ஜாதகம் பொருத்தத்தில் மிக முக்கியமாக பாவக ஆய்வு பார்க்கப்படவேண்டும். ஒருவருக்கு லக்ன பொருத்தம் மற்றும் மற்ற அனைத்து பாவக ஆய்வுகளையும் ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து பாவகங்களின் ஆய்வும் முக்கியம் உதாரணமாக 5ம் பாவகம் வம்ச விருத்தி, 2,11ம் இடம் வருமானம் லாப ஸ்தானம் ஆகும்.
இதில் 5ம் பாவகம் ஆண் பெண் இருவருக்கும் வலுவிழந்து இருப்பின் பொருத்தம் செய்ய கூடாது. அதே போல 2, 11ம் பாவகம் பொருளாதார நிலை மற்றும் வருமானம் பற்றிய ஸ்தானம், இந்த பாவகங்கள் ஒருவருக்கு இந்த ஸ்தானம் வலுவிழந்து மற்றவருக்கு வலுவாக இருப்பின் பொருத்தம் செய்யலாம். இருவருக்கும் வலுவிழந்து இருப்பின் பொருத்தம் செய்ய கூடாது. இதே போல மற்ற பாவகங்களையும் ஆய்வு மேற்கொண்டு பொருத்தம் செய்ய வேண்டும்.
திசா சந்தி
இருவருக்கும் ஒரே திசா நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஒரே திசா நடக்கும்போது பொருத்தம் செய்யக் கூடாது. விதிவிலக்காக சில நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால், நடைமுறையில் ஒரே திசா நடக்கும் கணவன் மனைவியின் குடும்ப வாழ்க்கை பிரச்சினைக்குள்ளாகிறது.
இருவருக்கும் ராகு திசா மற்றும் கேது திசா நடக்கிறது எனில் பொருத்தம் செய்யக்கூடாது. மேலும் ஒருவருக்கு சனி திசா மற்றவருக்கு சூரிய திசா நடக்கிறது என்றாலும் பொருத்தம் செய்யக் கூடாது.
நட்சத்திர திருமண பொருத்தம்
இது தசவித பொருத்தங்களை உள்ளடக்கியது. 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் உள்ளது என்று பார்க்க வேண்டும். மேலும் இதில் ரஜ்ஜு பொருத்தம் மற்றும் யோனி பொருத்தம் மிக முக்கிய பொருத்தமாக கணக்கிடப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu