/* */

Motivational Vivekananda Quotes In Tamil-உலக அளவுக்கு இதயத்தை விரிவாக்கு..! யார் சொன்னது?

'எனது சகோதர, சகோதரிகளே' என்ற பேச்சின் முன்மொழிதலில் உலகம் விவேகாநந்தரின் கட்டுக்குள் வந்தது.

HIGHLIGHTS

Motivational Vivekananda Quotes In Tamil-உலக அளவுக்கு இதயத்தை விரிவாக்கு..! யார் சொன்னது?
X

Motivational Vivekananda Quotes In Tamil

நமது நாட்டின் கலாசாரத்தையும், பெருமைகளையும், தத்துவங்களையும், உயரிய ஞானக் கோட்பாடுகளையும் உலக அரங்கில் கொண்டு சென்றவர் சுவாமி விவேகானந்தர்.

இந்து சமயக் கொள்கைகளில் அதீத ஈடுபாடு உடையவராகவும், ஆழ்ந்த சிந்தனைவாதியாகவும், பன்மொழிப் புலமையும், சேவை மனப்பான்மை கொண்டவராகவும் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர், தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகளால் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாகவும், தூய்மையான தலைவர்களாகவும் உருவாக்க எண்ணியவர்.


Motivational Vivekananda Quotes In Tamil

எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் ஊக்கமளிக்கும் மேற்கோள்களை வழங்கியுள்ளார். ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

அவரது மேற்கோள்களை படித்து அறிந்து அந்த கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வோம்.

எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்னையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று.

பலமே வாழ்வு; பலவீனமே மரணம்


Motivational Vivekananda Quotes In Tamil

அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.

உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா?

Motivational Vivekananda Quotes In Tamil

தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும்.

பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்

உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

மிகப்பெரிய உண்மை இது, வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.


Motivational Vivekananda Quotes In Tamil

உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

அறிவு வரும்போது மனிதன் முதிர்ச்சி அடைகிறான். அவனிடம் ஒழுக்கம் நிலவுகிறது

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

Motivational Vivekananda Quotes In Tamil

இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

எல்லா நாகரிகங்களுக்குள் அடிப்படை சுயநல தியாகமே.

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.


Motivational Vivekananda Quotes In Tamil

'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்

எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்று நம்புங்கள்!

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி


Motivational Vivekananda Quotes In Tamil

வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது, விவேகம் இருக்க வேண்டும்.

ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.

தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது.

இந்த உலகில் புகழுக்கும் இகழுக்கும் மதிப்புக் கிடையாது. ஊஞ்சலை ஆட்டுவது போல ஒரு மனிதனை, புகழின் புறமாகவும், இகழின் புறமாகவும், இங்கும் அங்கும் ஆட்டுகின்றார்கள்


Motivational Vivekananda Quotes In Tamil

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்கதே.

எதைச் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நம்மால் எதையும் செய்ய முடியும் என்று உறுதி கொள்ளுங்கள்.

உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்! செல்வம் வேண்டுமானால் அதற்காகப் பாடுபடுங்கள்! அது நிச்சயம் உங்களை வந்து சேரும்.

Motivational Vivekananda Quotes In Tamil

நல்லெதிர்பார்ப்பு மனப்பான்மையையும், எல்லாவற்றிலும் நல்லதையே பார்க்கும் பாங்கையும் நாம் வளர்க்க வேண்டும். நமது மனத்திலும் உடம்பிலும் உள்ள குறைபாடுகளை நினைத்து, நாம் உட்கார்ந்து அழு வதில் எந்த லாபமும் இல்லை. எதிர் மறையான சூழ்நிலைகளை அடக்குகின்ற வீர முயற்சியே நம் ஆன்மாவை மேலே கொண்டு செல்லும்.

உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்

எல்லோரிடமும் அன்பை கொடுத்து ஏமாந்துவிடாதே. யாரிடமும் அன்பை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிடாதே


Motivational Vivekananda Quotes In Tamil

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளை இடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவைப் போல் மென்மையானது. தோல்வியை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.

பொய் சொல்லி தப்பிக்காதே, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது. உண்மை சாக விடாது

நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

Updated On: 10 Oct 2023 1:47 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்