ஸ்ரீபூரிஜெகன்நாதர் கோயில் அதிசயங்களை பாருங்கள்..!
பூரிஜெகன்நாதர் கோயில் சமையலறையின் ஒரு பகுதி.
பிரதமர் மோடி ஸ்ரீபூரிஜெகன்நாதர் கோயில் பற்றி பேசிய பின்னர், அந்த கோயில் அறிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த கோயிலில் பல அதிசய நிகழ்வுகள் தினமும் நடக்கின்றன.
அதில் ஒன்றை காணலாம்
ஸ்ரீ பூரி ஜெகன்நாதர் கோயிலில் குடிகொண்டிருக்கும் விஷ்ணு பகவான், தினமும் காலையில் எழுந்து ராமேஸ்வரம் சென்று விட்டு, மதிய உணவுக்கு மீண்டும் இந்த பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு வந்து விடுவதாக ஒரு ஐதீகம் உண்டு.
அதனால் தினந்தோறும் இந்த கோயிலில் இறைவனுக்காக விருந்து மிகவும் தடபுடலாக செய்யப்படுகிறது. இந்த விருந்து சமைக்கும் முறையே சற்று வித்தியாசமானது. கோயிலின் சமையலறை உலகிலேயே மிகப்பெரியது. பாரம்பரியம் மிக்கது. 56 வகையான சைவ உணவுகள் வெங்காயம், பூண்டு இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன.
கங்கா மற்றும் யமுனை எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு தீர்த்தக் கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி மண் பானைகளில் மட்டுமே சமையல் செய்யப்படுகிறது.
சோறு வேகும் அதிசயம்
இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது. தினந்தோறும் சமைத்த பின் மண்பானைகள் உடைத்து விடுவார்கள். தினம் தினம் புதுபானை சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு அனைவருக்கும் சாப்பிடக் கிடைக்கும். கோயில் சமையலறைகளில் அனைத்து மகாபிரசாத சமையல்களும் பேரரசின் மகாராஷ்மி தேவியால் மேற்பார்வையிடப்படுகின்றன என்று பாரம்பரியம் கூறுகிறது.
ஸ்ரீமந்திர் தன்னை, மற்றும் தயாரிக்கப்பட்ட உணவில் ஏதேனும் தவறு இருந்தால், கோயில் சமையலறைக்கு அருகில் ஒரு நிழல் நாய் தோன்றுகிறது. இது அவளது அதிருப்தியின் அறிகுறியாகும். நிழல் நாய் காணப்பட்டால், உணவு உடனடியாக புதைக்கப்பட்டு ஒரு புதிய உணவு சமைக்கப்படுகிறது. இப்படி பல அதிசயங்கள் இந்த கோயிலில் உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu