மகேந்திர பொருத்தம் இருந்தால்தான் குழந்தை பாக்கியம்..! தெரியுமாங்க..?

Mahendra Porutham Tamil Meaning
X

Mahendra Porutham Tamil Meaning

Mahendra Porutham Tamil Meaning-திருமண பொருத்தம் பார்ப்பதில் சந்ததி விருத்திக்காக முக்கிய பொருத்தமாக கருதப்படுவது மகேந்திர பொருத்தமாகும்.

Mahendra Porutham Tamil Meaning

திருமணத்தில் பல்வேறு பொருத்தங்கள் பார்த்தாலும் மகேந்திர பொருத்தம் இருந்தால் மட்டுமே அந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இருக்கும். அதனால் 10 பொருத்தத்தில் 8 இருந்தால் போதும் என்ற இந்த பொருத்தங்களில் மகேந்திர பொருத்தம் சந்ததி வளர மிக முக்கியமாக கருதப்படுகிறது.

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திரப் பொருத்தம் என்பது குழந்தை பாக்கியத்தை வலியுறுத்தும் பொருத்தமாகும். இந்த பொருத்தம் சந்ததி விருத்தியை உறுதி செய்வது ஆகும். மகேந்திர பொருத்தம் இல்லாத ஜாதகத்திற்கு நாடி பொருத்தம் அல்லது விருட்சப் பொருத்தம் பார்த்து பொருத்திக் கொள்ளலாம். அதுவும் இல்லையென்றால் ஜாதக கட்டத்தில் ஐந்தாம் பாவத்தையும் புத்திரகாரக கிரகமான குருபகவான் சிறப்பாக இருந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை.

மகேந்திர பொருத்தம்

மகேந்திர பொருத்தம் எப்படி பார்ப்பது?

பெண் ஜாதகத்தில், பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை வரிசையாக எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 எண்கள் வருமாயின் உத்தமம். மற்ற நட்சத்திரங்கள் என்றால் பொருத்தம் இல்லை. மகேந்திர பொருத்தம் இல்லையெனில் விருட்ச பொருத்தம் பார்த்து பொருந்தினால் போதும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story