மதுரை அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் ஆலய மகா கும்பாபிஷேகம்
மதுரை அருகே குட்லாடம் பட்டி அண்ணாமலையார் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சிஒன்றியம், குட்லாடம்பட்டி கொட்டமடைகண்மாய்கரை பகுதியில் இயற்கை எழில்கொஞ்சும் தென்னந்தோப்பு, வயல் வெளிகளுக்கு நடுவே 36 அடி உயரமுள்ள லிங்கவடிவிலான ஸ்ரீஅண்ணாமலையார் தியானமண்டப 12வதுவருட திருக்கோவில் தமிழ்திருக்குட நன்னீராட்டுவிழா நடந்தது.
இந்த விழாவையொட்டி,3 நாட்கள் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவை அகில பாரதிய சன்னியாசிகள் சங்க துணைத் தலைவர் ராமானந்தர் தொடங்கிவைத்தார். கோவை சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தினர் வேள்ளி வழிபாடு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தினார்.
இதில், நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியானந்தா சரஸ்வதி, குட்லாடம்பட்டி சாசுவானந்தா சுவாமி, ரமண பிரசானந்தாகிரி, பாலரகுனாதானந்தபுரி, திருமங்கலம் துளசிமணி சுகுமார்சுவாமி, குன்னத்தூர் மணியம்மை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, முதல்நாள் காலை 7மணிக்கு பிள்ளையார் வேள்வி காப்பு கட்டப்பட்டு பிற்பகல் 2மணிக்கு இரட்டைவிநாயகர்கோவிலிருந்து முளைப்பாரிகை, தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. மாலை 4மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடந்தது. ஐம்பூதவழிபாடு, நிலத்தேவர், புற்றுமண், முளைப்பாரிகை வழிபாடுகள் நடந்தது. மாலை 6மணிக்கு 108மூலிகை திரவியாகுபதி பேரொலி வழிபாடு நடந்தது.
இரண்டாம்நாள் காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, 8மணிக்கு திருக்குறிப்பு திருமஞ்சனம், 10மணிக்கு இரண்டாம் காலவேள்வி, மாலை 6மணிக்கு மூன்றாம் காலவேள்வியும் ராமச்சந்திரா நாட்டியாலயா பரதநாட்டிய நிகழ்ச்சிநடந்தது. மூன்றாம் நாள் காலை 6 மணிக்கு இறைதிருமேனிபீடத்தில் வைத்து எண்வகைமருந்து சாத்துதல் நடந்தது. திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, 7 மணிக்கு நான்காம் காலவேள்வி நடந்தது. 9மணிக்கு இராமேஸ்வரம், அழகர்கோவில், பாபநாசம்,காசி,அரிதுவார்,ரிசிகேஸ்,கொடுமுடி உள்ளிட்ட புன்னியஸ் தலங்களிலிருந்து புனிததீர்தத்தம் எடுத்துவரப்பட்டு திருக்குடங்களில் ஊற்றி காலை 9.40மணிக்கு கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 5 கருடன்கள் வந்து வட்டமிட்டதால், பக்திபரவசம் ஏற்பட்டு அண்ணா மலையாருக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பப்பட்டது. வேணிபவானிசுந்தர்குழுவினர் கைலாய வாத்தியங்கள் வாசித்தனர்.
பின் கோவிலில், எழுந்தருளியுள்ள லிங்கேஸ்வரர், நந்தீஸ்வரர், அனுமன், நவகிரகங்கள், அஸ்டலிங்கங்கள், நாகேஸ்வரி, சிலைகளுக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது. பின் அன்னதான மண்டபத்தில் விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் உதவியுடன் 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
35சாதுக்கள், 21 சன்னியாசிகளுக்கு வஸ்திரதானம் செய்யப்பட்டது. கும்பாபிஷே வழிபாடு பற்றி தலைமைஆசிரியை வள்ளியம்மை நேரடிவர்ணனை உரையாற்றினார். இதன் ஏற்பாடுகளை, அண்ணாமலையார் ட்டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் எம்.ஆர்.கோபிநாத், டாக்டர் ராஜேஸ்வரி, மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu