கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா: காலபைரவருக்கு பக்தர்கள் அர்ச்சனை

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா: காலபைரவருக்கு பக்தர்கள் அர்ச்சனை
X

சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர ஆலயத்தில் கால பைரவருக்கு அர்ச்சனை செய்து பக்தர்தகள் வழிபட்டனர்

சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர ஆலயத்தில் கால பைரவருக்கு அர்ச்சனை செய்து பக்தர்தகள் வழிபட்டனர்

மதுரை மாவட்டத்தில் பல்வேரு கோயில்களில், தேய்பிறை அஷ்டமி விழா: காலபைரவருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர ஆலயத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து குறைவான பக்தர்கள் வருகை தந்து, காலபைரவருக்கு, தீபம் ஏற்றி வழிபட்டனர்கோகுலாஷ்டமி, தேய்பிறை அஷ்டமியையொட்டி, இக் கோயிலில் கால பைரவருக்கு, அபிசேகமின்றி, அர்ச்சனைகள் மட்டும் நடந்தது. சிலர் பூசணிக்காய், தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி, கால பைரவருக்கு அர்ச்சனை செய்தனர்.இதேபோல், மதுரை, மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!