கடலுக்குள் சிக்கிய பக்தரை மீட்ட முருகன்..!
திருச்செந்தூர் கோயில் (கோப்பு படம்)
திருச்செந்தூரில் பிரகாரத்தில் பக்தர் ஒருவர் கந்த சஷ்டி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொல்லி முடித்ததும் ""கந்த சஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்குவது தங்களுக்கு அதீத விருப்பமோ"" என மற்றொரு பக்தர் கேட்டார்.
அவர் லேசான புன்னகையுடன் சொன்னார் "ஐயா நான் தீவிரமான நாத்திகவாதியாக இருந்தவன். என்னை போல் எவரும் கடவுளையும், கடவுளை வணங்குபவரையும் மிகவும் கீழ்த் தரமாக பேசி இருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு பேசியவன்" நான்.
."30 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் திருச்செந்தூர் வந்திருந்தேன். அதிகாலையில் நான் மட்டும் குளிக்க கடலில் இறங்கினேன். அலையின் சுழற்சியில் உள்ளே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விட்டேன். என்னால் கடலில் இருந்து வேளியேற முடியாமல் போனது’’. கடலுக்குள் மூழ்க தொடங்கினேன்.
,"என்னையும் மறந்து முருகா, முருகா, முருகா என கத்தினேன். அப்போது யாரோ எனது தலைமுடியை இறுக்கமாக பிடித்தது போல உணர்ந்தேன். தலை முடியை பிடித்து என்னை மீட்பதை உணர முடிந்தது. அடுத்த நொடி கரையில் வந்து வீழ்ந்தேன்"
."எழுந்து நின்று என்னை மீட்டது யாரேன தேடிப்பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எவரும் தென்படவில்லை. அப்போது தான் கடவுள் முருகனே வந்து என்னை மீட்டுள்ளார் என உணர்ந்தேன். கண்களில் கண்ணீர் ததும்ப ததும்ப என்னால் முடிந்தளவுக்கு உரத்த குரலில் "முருகா முருகா முருகா "" என சொல்லிக்கொண்டே முருகப்பெருமான் சன்னதியில் விழுந்து வணங்கினேன்.
,அன்று முதல் நான் கடலில் விழுந்து பிழைத்த நாளையே "எனது பிறந்தநாளாக " "கொண்டு, ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் கந்தசஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்கி மகிழ்கிறேன் என்றார் அந்த பக்தர்.
அவர் சொல்ல... சொல்ல... அதை கேட்ட பக்தரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அனைவரும் முருகப்பெருமானை மனம் உருகி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu