வாழ்வே வழிபாடு தான் எப்படி என்கிறீர்களா... படிங்க..!

வாழ்வே வழிபாடு தான்  எப்படி என்கிறீர்களா... படிங்க..!
X

வழிபாடு என்பது எது?(கோப்பு படம்)

இது எப்படி சரியாக இருக்கும் என்கிறீர்களா? படிங்க... புரியும்...

ஏதோ சிறிது நேரம் வழிபடுகிறேன் அதன் பயனாக மீதி வாழும் நேரத்தை வளமாக்கு ? என்ற பொய் கடந்து, வாழ்வே வழிபாடு தான் என்று மெய்யுணர்ந்து வாழ்ந்து பார் ..

அது எப்படி வாழ்வே வழிபாடு ஆக்க முடியும்? என் வேலையை எல்லாம் யார் செய்வார்? என் வருமானம், கடமை, பொறுப்பு, இதையெல்லாம் செய்யாதே சும்மா வழிபாடு என்று இருந்தால் நான் பரதேசி போல தானே திரிய முடியும்? போன்ற உங்களின் கேள்விகள் எனக்கும் கேட்கின்றது..

இப்படியும் கொஞ்சம் வாழ்ந்து பாருங்களேன் !!

எப்படி? ( இருகங்கப்பா என்ன அவசரம் ) காலையில் எழும் போது இரவெல்லாம்..பிணம் போல உறங்கி, எங்கே இருக்கிறேன்? எதை இரவு உண்டேன்? இன்று என்ன பணி இருக்கு? என்ற சுயத்தை இழந்து என்னை மறந்து தூங்கி என்னை .. இரவில் உண்டதை எல்லாம் செரிமானம் செய்வித்து, எந்த உறுப்புக்கு என்ன ஆற்றல் வேண்டுமோ? அதற்கான சக்தியை கொடுத்து எந்த உடல் அணுக்கள் எல்லாம் நேற்று நம் செயலால் பாதிக்கப்பட்டதோ அதையெல்லாம் உன் தூக்கத்தில் சரியாக்கிக்கொடுத்து, உண்ட கழிவுகளை சரியாக பிரித்து, வெளியேற்ற தயாராக வைத்து, உன்னில் விழிப்பு என்று உன்னை தூண்டி, கண்விழிக்க, புலன்கள் எல்லாம் விழிக்க செய்து நாம் யார் ? பெயர் ? ஆண், பெண் ? எங்கே விழித்து இருக்கிறோம் என்று செத்த உடலுக்கு உயிரை கொடுத்து, உன் நினைவையை எல்லாம் மீண்டு வரச்செய்து .. உடலில் ஓர் புதிய உற்சாகம் பிறக்க உன்னை புதுப்பித்துக் கொடுத்து எழச் செய்த இறையாற்றலை எண்ணி எழலாமே..!

இரவில் என்னை தூங்கவைத்து எனக்கான இப்பிரபஞ்சத்தையே இயக்கி அதன் ஆற்றலை எனக்கு பரிமாற செய்து என் உறக்கத்திலும் என்னுள் விழித்திருந்த கடவுளே நன்றி. என்ற நன்றி உணர்வோடு இறையை நினைத்து எழுவதே வாழ்வின் ஒவ்வொரு நாளும் செய்யும் முதல் வழிபாடு தானே ....

இப்படி ஓர் நாளை துவக்கும் போதே ..

நமக்காக நம்மை பேணி காத்து வளர்க்கும் இறையோடு உறக்கத்திலும் இருந்தோமே!! என்பது தரும் ஓர் உத்வேகம் ஓர் நாளை தைரியமாக எதிர்கொள்ள வைக்கும் தானே ..

அதற்கு அப்புறம் எதை செய்தாலும் .. செய்ய வேண்டும் என்பது உங்கள் எண்ணம் !! அதற்கு எந்த நாடி நரம்பு உறுப்பு இயங்க வேண்டும் என்று கூட தெரியாத நாம் !! அதையெல்லாம் நம் எண்ணம் அறிந்து இயக்கி ஒத்துழைக்க செய்யும் இறையின் ஆற்றலை நம்முள்ளும் வெளியும் அனுபவித்து செய்யலாம் தானே ..!!!

உதாரணமாக பேச வேண்டும் என்ற எண்ணம் எழ என்ன பேச? அதற்கு எப்படி நாக்கும் வாயும் இயங்கி, சுவாசித்த காற்று எப்படி வெளிப்பட்டால் நீ பேசுவது உனக்கும் பிறருக்கும் புரியும் என்று எண்ணியபடி பேசவைப்பவனை நினைத்து பேசலாம் தானே

ஏதோ நினைக்கின்றோம் என்றாலும் எத்தனையோ நினைவுகள் நம்முள்ளே பொதிந்து இருக்கு. எந்த நினைவு எப்போது. எப்படி நினைவுக்கு வந்து, அந்த நினைவு நம்மை எந்த உணர்வில் இருத்த அதற்கு முழு உடலே ஒத்துழைக்க நினைக்க வெளியே எந்த தடையும் இல்லா சூழலை உருவாக்கி கொடுக்கா விட்டால் நம்மால் எதையாவது நினைக்க தான் முடியுமா?

அப்போது நினைக்க வைத்தவனை நினைத்து எதையும் நினைக்கலாம் தானே .. இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் நிகழ்த்துபவனை நினைத்து, முன்னிறுத்தி, அவன் நாமத்தை அகத்தே சொல்லி எதையும் செய்ய .. இறை வரும் போகும் என்ற பொய் கடந்து .. உன்னோடும் உனக்காகவும் எப்போதும் உன்னிலும் எதிலும் கலந்து எப்போதும் இருக்கும் நிதர்சனத்தை உணரலாம் தானே ..

நம் செயல் வேலை என்று எதை எடுத்து கொண்டாலும் நமக்கு அடிப்படை தேவை? அதை ஆதரிக்க துணைநிற்க ஒருவர் வேண்டும் என்பதே.... அதுவாக எப்போதும் இறைவனே இருக்கிறான் என்ற துணிவு உங்களுக்கு ஓர் புது உத்வேகம் தரும் தானே....

நான் பூஜை செய்கிறேன் வழிபடுகிறேன் என்று எதையாவது கொஞ்ச நேரம் செய்து விட்டு .. மற்ற நேரம் நிதர்சனமாக உட்கலந்து இருக்கும் இறைவனை மறந்து திரிவதும் முறையோ? புறத்தே இறைவனை அனுபவிக்கும் வரையில் வாழ்வில் ஓர் அங்கம் வழிபாடு....அதே அகத்தே இறைவனை அனுபவிக்க தொடங்கி விட்டால் வாழ்வே வழிபாடு தானே..?

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!