லக்ஷ்மி கடாட்சம் நம் வீட்டில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் என தெரியுமா?
செல்வம் தான் லட்சுமி. லட்சுமி கண் திறந்தால் நமது வாழ்வில் சுபிட்சம் தான்.இதனை தான் லட்சுமி கடாட்சம் என்கிறோம். லட்சுமி கடாட்சத்தை யார் தான் வேண்டாம் என்பார்கள். ஆனால் லட்சுமி நமது வீ்ட்டிற்கு வந்தால் தானே லட்சுமி கடாட்சம் நமக்கு கிடைக்கும் அதற்கு என்ன செய்யலாம் என்பதை இனி பார்க்கலாம்.
வளர்பிறை சனிக்கிழமை அன்று காலை அல்லது மாலை 11 மா இலைகளை வீட்டு வாசற்படியில் கட்டி விடவும். வாரம் தோறும் சனி கிழமையில் இலைகளை மாற்றி வரவும். வெள்ளிக்கிழமை அன்று பஞ்சகவ்யம், கோமியம், அல்லது மஞ்சள் கலந்த நீர் இவற்றில் ஏதேனும் ஒன்றை வீட்டில் தெளித்து வரவும்.
சாம்பிராணியுடன், நன்னாரி, லவங்கப்பட்டை, சந்தனம் வெண்குங்கிலியம் மற்றும் வெள்ளைப்போளம் வகைக்கு 100 கிராம், வெண்கடுகு, நாய்கடுகு வகைக்கு 100 கிராம், 108 மூலிகைதூபப்பொடி 100 கிராம், கிருஷ்ணதுளசி இலை பொடி 100 கிராம், மருதாணி விதை 100கிராம் (இவை அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) கலந்து புகை போடவும்.
இதற்கு கால நிர்ணயம் கிடையாது, எத்தனை வாரம் முடிமோ அத்தனை வாரம் செய்யலாம். முதல் வாரத்தில் இருந்தே பலன் தெரியும். எளிய முறை நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.
நாளை சனிக்கிழமை ஐப்பசி மாதத்தின் வளர்பிறை முதல் சனிக்கிழமை என்பதால் இந்த லட்சுமி கடாட்ச பூஜையை நாளை முதலே தொடங்குவது உத்தமம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu