எம்.ஆர்.ராதாவை மடக்கிய கிருபானந்த வாரியார்

எம்.ஆர்.ராதாவை மடக்கிய கிருபானந்த வாரியார்
X
நடிகவேள் எம்.ஆர்.ராதாவை மடக்கிய கிருபானந்தவாரியார் பற்றிய சுவாராஸ்யமான\ சம்பவத்தை பார்க்கலாம்.

பொதுவாக எம்.ஆர்.ராதா பேசும் நாத்திக வசனங்கள் பிறரால் எதிர்கொள்ள முடியாத நெருக்கடியை தரும். அப்படிப்பட்ட ஒருவரை திருமுருக கிருபானந்தவாரியார் மடக்கியதோடு, தான் சொன்னது சரி என எம்.ஆர்.ராதாவை ஒப்புக்கொள்ள வைத்த ஒரு நிகழ்வும் நடந்துள்ளது. அதுபற்றி பார்க்கலாம்.

கிருபானந்தவாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். ராதா நாத்திக கொள்கை உடையவர். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான பாணியான கிண்டலுடன், “ஏஞ்சாமி.....முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமாபடுப்பாரு.? என்றார். கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்ம சங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மண மக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார். “நேத்து தூங்கினீங்களா?” என்றார். திருமண வீட்டார் இருவரும், “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.!

வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார். ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கே தூக்கம் வரவில்லை. உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?” என்றார் வாரியார் சுவாமிகள். இதைக் கேட்ட நடிகர் ராதா "அதுவும் வாஸ்தவம் தான்.." என்று ஒப்புக்கொண்டார்...!

கிருபானந்தவாரியாரின் சமயோஜித சிந்தனை திறனை பார்த்த அனைவரும் வியந்து போனதோடு, எம்.ஆர்.ராதாவை மடக்கிய அவரது விவாத திறனையும் போற்றி பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!