பிரிந்து வாழும் தம்பதி சேர கூடாரவல்லி ஆண்டாளை தரிசியுங்கள்!
ஆண்டாள் நாச்சியார்
கூடாரவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் நாள். இந்த நாளில் குறிப்பாக வைஷ்ணவர்கள், சிறப்பாக நெய் வடியும் பாலில் செய்த 'சர்க்கரைப் பொங்கல்' எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர். ஆண்டாள் பிறந்த ஸ்ரீ வில்லிபுத்தூர், ரங்கமன்னார் எனும் அரங்கனின் ஸ்ரீ ரங்கம், ஸ்ரீ பெரும்புதூர் போன்ற ஊரில் பிறந்தவர்கள் வைணவர்கள் அல்லாத சிலரும் கூட இதைச் மரபு வழியாக வருகிறார்கள் காரணம், கோதைநாச்சியார் பாடிய இந்த 27-வது திருப்பாவைப் பாசுரம்தான்.
ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடலை பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.
மார்கழி விரதம் நிறைவு பெற்று, நாங்கள் அணிய கை வளையல்கள், தோள் நகை, காதுத் தோடுகள், செவிப்பூக்கள், கால் சிலம்புகள், புத்தாடை ஆகியவற்றை எங்களுக்கு அருள்வாய் . மார்கழி நோன்பினை நிறைவு செய்யும் வகையில், பாலில் வெந்த சோற்றில், அது மூடும் அளவிற்கு நெய்யிட்டு, கூட்டமாக உன்னுடன் அமர்ந்து, கைகளில் நெய் வழிய, பால்சோறு உண்போம். அத்தகைய மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்கி, எங்களைக் காப்பாயாக என ஆண்டாள் அந்த பாடலில் பாடியிருப்பார்.
ஆண்டாள் என்ற மானுடப் பெண், மாதவனை மணாளனாகப் பெற்ற மகத்தான நாள் இந்த கூடாரவல்லி என்பதால், இந்த நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல மாங்கல்யம் அமையும் பிரிந்த தம்பதியர் கூடுவார்கள் என்பது ஐதீகம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu