கடக ராசிக்காரர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடுங்கள்..!

கடக ராசிக்காரர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடுங்கள்..!
X

kadagam rasi-கடக ராசி (கோப்பு படம்)

2024ம் ஆண்டுக்கான கடக ராசி நேயர்களுக்காக பொது பலன்கள் இந்த பதிவில் தரப்பட்டுள்ளன. இதை அறிந்து உங்கள் திட்டங்களை வகுத்துக்கொள்ளுங்கள்.

Kadagam Rasi

2024 ஆங்கில புத்தாண்டு பொது பலன்கள் - கடகம் ராசி

அனைவரிடத்திலும் அன்பான மனதுடன் பழகும் கடக ராசி நேயர்களே.. பிறந்துள்ள ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

Kadagam Rasi

கடக ராசி:

உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்பலாம். குடும்பத்தினருடன் புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தடையான சில விஷயங்களால் ஆதாயம் ஏற்படும். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். பயணம் சார்ந்த விஷயங்களில் அனுபவம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சகோதரர்கள் வழியில் விவேகத்துடன் செயல்படவும். வாகனங்களை விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பீர்கள்.

திறமைக்கேற்ப மதிப்பு மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

Kadagam Rasi

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதைக் குறைத்துக் கொள்ளவும். குரலின் தன்மையில் சில மாற்றங்கள் நேரிடலாம். முழங்கால் வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்படலாம். அதிகமாக காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். மாவு வகையான உணவுகள் மற்றும் குளிர்ச்சியான உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும்.

பெண்கள்:

ஆசைகளால் புதிய அனுபவமும், சில முடிவுகளை எடுப்பதற்கான சூழலும் உண்டாகும். தந்தை வழியில் சில மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படலாம். கடன் நிமிர்த்தமான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் ஏற்படலாம். உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் வழியில் சுப காரியங்களை முன்னின்று செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். உறவுகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

Kadagam Rasi

மாணவர்கள்:

கல்வியில் இருந்துவந்த தேக்கநிலை இல்லாமல் போகும். மேல்நிலை கல்வியில் உங்கள் முயற்சிக்கு ஏற்ப நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் விலகிச் செல்வதற்கான சூழ்நிலைகள் அமையும். பணி சார்ந்த முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். ஊதிய உயர்வு மற்றும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தவணைகளை முடிந்தளவு குறைத்துக் கொள்ளவும். வழக்குகள் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழல் ஏற்படும். தவறிய சில முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும்.

Kadagam Rasi

வியாபாரிகள்:

வியாபார ஸ்தலங்களை விருத்தி செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். விவசாய மற்றும் உணவு சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வெளியாட்களை பற்றிய புரிதல் மேம்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். மனை மற்றும் பத்திரம் சார்ந்த பிரிவுகளில் ஆலோசனை பெற்று கொடுக்கல், வாங்கலை மேற்கொள்ளவும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இணைய வர்த்தக முதலீடுகளைக் குறைத்துக் கொள்ளவும். கூட்டாளிகளின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனை கொடுக்கல், வாங்கல் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

Kadagam Rasi

கலைஞர்கள்:

கலை சார்ந்த துறைகளில் காலத்திற்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எழுத்து மற்றும் ஓவியம் சார்ந்த துறைகளில் இருக்கக்கூடியவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நாட்டியம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். தற்காப்புக் கலை சார்ந்த கலைஞர்களுக்கு மாறுபட்ட அனுபவமும், சூழலும் அமையும். மறைமுகமான சில போட்டிகளை வெற்றி கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகளின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தொகுதி மக்களிடத்தில் பாகுபாடின்றி செயல்படுவீர்கள். மனதளவில் இருந்துவந்த பேராசை படிப்படியாகக் குறையும். கட்சியில் எதிர்பார்த்த சில பொறுப்புகள் காலதாமதமாக கிடைக்கும். எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வதற்கான காலகட்டம் உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதளவில் மேம்படும். பேச்சுக்களில் கனிவும், உங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

Kadagam Rasi

வழிபாடு:

சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட வரவுகளில் இருந்துவந்த தடைகள் மற்றும் குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப பலன் கிடைக்கும். இவை அனைத்தும் கடகம் ராசிக்காரர்களுக்கான 2024 ஆம் ஆண்டின் பொதுவான ஜாதக பலன்களே ஆகும்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி