Kadaga rasi palan 2023-கடக ராசிக்கான செப்டம்பர் மாத பலன்..! எதில சிறப்பு..?
Kadaga rasi palan 2023-கடக ராசி (கோப்பு படம்)
Kadaga rasi palan 2023
கடகம் செப்டம்பர் 2023 பொதுப்பலன்கள்
கடக ராசியினரே, கடந்த காலத்தில் இருந்த உடல்நலக் குறைவில் இருந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். இந்த மாதத்தில் உடன் பிறந்தவர்களுடனான தவறான புரிதல்கள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். தொழில் மற்றும் சொத்துகளில் ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். இந்த மாதத்தில் உங்களின் புதிய முயற்சிகளில் புத்துணர்ச்சி உண்டாகும். உங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நீங்கள் பதற்றமடையக்கூடும்.
Kadaga rasi palan 2023
காதல் மற்றும் குடும்ப உறவு :
கடக்க ராசியினர் இந்த மாதம் இழந்த அன்பை மீண்டும் பெறுவீர்கள். மற்றும் உறவு விஷயங்களில் உங்கள் ஆற்றல் திரும்பும். இந்த காலகட்டத்தில் காதல் உறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரலாம் அதை நீங்கள் நம்பிக்கையுடன் கையாளுவீர்கள். இந்த காலகட்டம் உங்கள் ஆத்ம துணையை தேடுவதற்கு ஏற்ற காலமாக இருக்கலாம்.
நிதிநிலை :
உங்களின் நிதிநிலை இந்த மாதம் சுமாராக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு குடும்பம், உடல்நலம் மற்றும் ஆவணங்களுக்கான செலவுகள் ஏற்படலாம். நீங்கள் வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் மூலம் ஆதாயங்களைப் பெறலாம். உடன்பிறந்தவர்கள் மூலம் பண வரவு இருக்கலாம். மேலும் உங்களுக்கு உத்தியோகம் மூலம் பண வரவில் அதிர்ஷ்டம் பங்கு வகிக்கும்.
Kadaga rasi palan 2023
உத்தியோகம் :
இந்த மாதம் நீங்கள் உத்தியோகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் தகவல் தொடர்புகளில் நம்பிக்கையின் வெளிப்பாடு இருப்பதுடன் சாதுரியமாக செயல்பட்டு நல்லபெயர் பெறுவீர்கள். பணியிடத்தில் பெண் சக ஊழியர்களால் பணியை நிறைவேற்றுவதில் ஆதரவு கிட்டும். மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாக மாறலாம். இந்த மாதம் நிதி வரவு மிதமாக இருக்கும்.
தொழில் :
உங்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரத்தில் நியாயமான லாபம் கிடைக்கும். வியாபார தலத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை நீங்கள மேம்படுத்தலாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். கடன்கள் நியாயமான அளவில் குறைக்கப்படலாம். பங்குதாரர்களால் வியாபாரத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம்.
Kadaga rasi palan 2023
தொழில் வல்லுனர்கள் :
பங்குதாரர்களுடனான உறவு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதில் நியாயமான நல்ல காலகட்டத்தைக் காண்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் பண வரவு நன்றாக இருக்கும். மாதத்தின் பிற்பாதியில் தொழிலில் எதிரிகளை சிறந்த கவனத்துடனும் அதிகாரத்துடனும் கையாள்வீர்கள். இருப்பினும், இந்த மாதத்தில் பணியிடத்தில் சர்ச்சைகள் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆரோக்யம் :
இந்த காலகட்டத்தில் உங்களின் ஆரோக்யத்தில் முன்னேற்றம் இருக்கும். மன அழுத்தத்தை கவனமாகக் கையாள வேண்டும். சிறிய காயங்கள் மற்றும் விபத்துக்கள் அவ்வப்போது ஏற்படலாம். இந்த மாதத்தில் உடன்பிறந்தவர்களின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்படலாம்.
மாணவர்கள் :
கடக ராசி மாணவர்களின் கல்வி அம்சங்கள் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் ஆற்றல் மிக்கவராகவும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ளவராகவும் இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அல்லது வழிகாட்டிகளில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மாணவர்கள் போட்டித் தேர்வுகளிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள். வெளி நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுப தேதிகள் : 4, 5, 6, 7, 16, 17, 18, 19, 23, 24, 25 மற்றும் 26.
அசுப தேதிகள் : 8, 9, 10, 11, 12, 27 மற்றும் 28.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu