கல்யாணத்தில் பொருத்தம் முக்கியமுங்க..! வாழ்க்கை நல்லா இருக்கணுமில்ல..!!
திருமண வாழ்த்து
Jathagam Porutham In Tamil With Only Rasi and Star
திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். காரணம் வாழையடி வாழையாக அவர்களது வம்சம் தழைத்து வளரவேண்டும். திருமணம் செய்துகொள்ளும் ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு பொருத்தம் சரியாக அமையவேண்டும். அப்படி முறையான பொருத்தம் அமைந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைவதுடன் அவர்களின் வம்சமும் தழைத்து ஓங்கும்.
Jathagam Porutham In Tamil With Only Rasi and Star
திருமண பொருத்தம்
1. தினப்பொருத்தம்
மணமகன் மற்றும் மணமகளின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கும்
அவர்களுக்குள் தினமும் சண்டைகள் வராமல் அன்பு பகிர்ந்து மகிழ்ச்சியுடன் இருப்பார்களா என்பதை தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் அவசியமாகும்
மேலும் தினம் என்றால் நட்சத்திரம் என்ற பொருள் உண்டு. இந்த பொருத்தத்தை நட்சத்திர பொருத்தம் என்றும் கூறுவர்
2. கணப்பொருத்தம்
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா என்பதையும் மற்றும் அடிப்படை குணங்களில் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்துகொள்வதைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.
கணம் மூன்று வகைப்படும். தெய்வ கணம்,மனித கணம், மற்றும் ராட்சத கணம்.
மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களும் இந்த மூன்று கணத்தில் ஒரு கணத்திற்கு 9 நட்சத்திரங்கள் வீதம் அடங்கிவிடும்
Jathagam Porutham In Tamil With Only Rasi and Star
4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்
திருமணமாகும் பெண்கள் வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலியாக இருக்கவே பெரும்பாலானோர் விரும்புவார்கள்.
ஆகையால் தான் தீர்க்க சுமங்கலியாய் இருக்க இந்த பொருத்தம் பார்க்க படுகிறது
மேலும் பொருள் செல்வ சொல்வாக்கினை தருவது ஆகும்.
திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க ஸ்த்ரி தீர்க்க பொருத்தம் உதவுகிறது.
மேலும் பெண்ணின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தினை ஆணின் நட்சத்திரம் வைத்து எப்படி மாறுபடுகிறது என்பதை பொருத்து பார்க்கபடுகிறது.
3. மகேந்திரப்பொருத்தம்
திருமண வாழ்க்கையின் முக்கிய கட்டமான குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவதுவே மகேந்திர பொருத்தமாகும்
Jathagam Porutham In Tamil With Only Rasi and Star
புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய மகேந்திர பொருத்தம் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
குழந்தை பாக்கியம் ஆயுள் விருத்தி சௌபாக்கியம் போன்றவற்றை தருவதாகும்.
5. யோனி பொருத்தம்
யோனிப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் இருவரும் தாம்பத்திய உறவில் நீடித்த தன்மையும் மன நிறைவும் நிறைந்த சுகமும் இருக்கும்.
நமது ஜோதிட சாஸ்திரங்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு.
அதன் அடிப்படையில் இந்த பொருத்தமானது பார்க்கபடுகிறது.
Jathagam Porutham In Tamil With Only Rasi and Star
ஆண் பெண் நட்சத்திரங்களுக்கு இடையே பகை மிருகங்கள் இல்லாமல் இருந்தால் அது நல்ல பொருத்தமாகும்
6. ராசி பொருத்தம்
ஆண் பெண் குடும்பத்திற்குள் நல்ல உறவு நீடிப்பதற்கும். தம்பதிகள் இருவரும் புரிந்து வாழ்வதற்கும் ராசி பொருத்தம் பார்க்கபடுகிறது.
பெண் பிறந்த ராசியை வைத்தும் ஆண் பிறந்த ராசியை வைத்தும் இந்த பொருத்தம் பார்க்க படுகிறது
7. ராசி அதிபதி பொருத்தம்
வாழையடி வாழையாய் வம்சமும் வளர வேண்டும் என்று பெரியோர்கள் வாழ்த்துவார்கள் அப்படி வம்சம் விருத்தி அடைய ராசி அதிபதி பொருத்தம் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ராசிக்குமான கிரக நிலையை வைத்து அதன் நட்பு கிரகம், சம கிரகம், பகை கிரகங்களை ஆராய்ந்து இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது
Jathagam Porutham In Tamil With Only Rasi and Star
8. வசிய பொருத்தம்
வசிய பொருத்தமானது திருமண தம்பதிகளின் வாழ்க்கையில் இருவரும் வாழ்க்கை முழுக்க இணக்கமாகவும் அன்போடும் இருப்பார்களா என்பதற்கும்
இருவர்களுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இல்லாமல் நிம்மதியோடு வாழ்வதற்கும் இந்த பொருத்தம் அவசியமாகும்
இந்த பொருத்தமானது ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற வசிய ராசிக்கு மட்டுமே பொருந்தும்
9. ரஜ்ஜுப் பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம் பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. மணமக்களுக்கு ரஜ்ஜு தட்டுகிறது என்றால் அது அவர்களுக்கு ஆபத்தானதாகும். அதனால் ரஜ்ஜு பொருத்தம் மிகவும் அவசியமானதாகும்.
சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, உதர ரஜ்ஜு, ஊரு ரஜ்ஜு, பாத ரஜ்ஜு என ஐந்து ரஜ்ஜுக்கள் உள்ளன
ஆண் மற்றும் பெண் ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் செய்தால் இருவரும் நலமோடு வாழ்வார்கள்
10. வேதைப்பொருத்தம்
வேதைப்பொருத்தமானது திருமண தம்பதிகள் வேதனையில்லாத வாழ்க்கை அமையுமா என்பதை பார்க்கும் பொருத்தமாகும். வேதை பொருத்தம் இல்லையெனில் சிறிது காலம் கூட மகிழ்ச்சியுடன் வாழமாட்டார்கள் என்று கூறுவர்.
இரு நட்சத்திரங்களுக்கு இடையே வேதை இருந்தால் அதற்கு பொருத்தமில்லை என்று பொருள்.
வேதை என்றால் ஒன்றுக்கொன்று தாக்குதலை ஏற்படுத்தும் என்று பொருள். வேதைக்கு வேதனை தரும் என்ற மற்றொரு பொருளும் உண்டு
Jathagam Porutham In Tamil With Only Rasi and Star
நட்சத்திர பொருத்தம்
முதலில் நட்சத்திரம் பொருந்தினாலே மற்றவை பொருந்தி விடும். முதலில் பெண் நட்சத்திரம் எதுவென்று அறிந்தபின், அந்த நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரம் என அறியவேண்டும். அவ்விதம் பார்க்கையில் பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் இரட்டைப் படையாக வந்தால், அதாவது பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம், 2 ஆவது, 4 ஆவது, 6 ஆவது. 8 ஆவது நட்சத்திரமானால், (2, 4, 6, 8) பொருத்தம் உண்டு.
9 ஆம் எண் வந்தால் மற்றப் பொருத்தங்களைப் பார்த்தே சொல்ல வேண்டும். பெண் நட்சத்திரம் முதல் 2, 11, 20, 4, 13, 22, 6, 15, 24, 8, 17, 26 ஆகிய விரிவு எண்களும் பொருந்தும், 22 ஆம் எண் யோசித்துச் செய்ய வேண்டும்.
Jathagam Porutham In Tamil With Only Rasi and Star
எடுத்துக்காட்டாக, அசுபதிக்குத் திருவோணம், பரணிக்கு அவிட்டம், கார்த்திகைக்குச் சதயம் என்று எண்ணிப்பார்த்தால் 22 ஆவது நட்சத்திரமாக வரும். இதைத் தவிர்ப்பது நல்லது.
பெண் நட்சத்திரத்திற்கு 1, 3, 5, 7 ஆகிய நட்சத்திரங்கள் சேராது. அதன் விரிவு 1, 10, 19, 3, 12, 21, 5, 14, 23, 7, 16, 25 நட்சத்திரங்கள் சேராது. ஆனால், 7 மற்றும் 25 ஆம் எண் மகேந்திரப் பொருத்தத்தைக் காட்டுவதால் சில இடங்களில் சேரும்.
சுருங்கச் சொன்னால் பெண் நட்சத்திரமும், ஆண் நட்சத்திரமும் இரட்டைப் படையானால் (2.4.6. 8) சேரும் ஒற்றைப் படையானால் (1.3. 5) சேராது. இந்த முதல் படியில் 9 ஆம் எண் (9, 18, 27) ஆகிய நட்சத்திரங்களைச் சிறப்புப் பார்வை கொண்டு பார்க்க வேண்டும். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 9 இல் வந்தால் சேரும் என்று அவசரப்பட்டுவிடக் கூடாது. கேட்டைக்கு உத்திரட்டாதி 9 ஆம் எண். ஆனால் பெரும்பாலான கேட்டை-உத்திரட்டாதி தம்பதிகள் சுகமாய் இருப்பதில்லை.
Jathagam Porutham In Tamil With Only Rasi and Star
ராசிப் பொருத்தம்
பெண் ராசி மேஷமாக இருந்தால், அதற்கு ஆண் ராசி சிம்மம் மற்றும் விருச்சிகம் பொருத்தமாக இருக்கும். ரிஷப ராசி பெண்ணுக்கு கடகம் மற்றும் துலாம் ராசியில் மாப்பிள்ளை பார்த்தால் வசிய பொருத்தம் அமையும். பெண்ணுக்கு மிதுன ராசி என்றால் கன்னி ராசி ஆணுடனும், பெண்ணுக்கு கடக ராசி என்றால், விருச்சிகம் மற்றும் தனுசு ராசி ஆணுடனும் திருமணம் செய்தால் அந்த திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பெண் ராசி சிம்மம் என்றால், ஆண் ராசி மகரம் இருப்பது சிறந்தது. பெண்ணுக்கு கன்னி ராசி என்றால், ரிஷபம் மற்றும் மீனம் ராசி உள்ள ஆணுடன் திருமணம் செய்வது வசிய பொருத்தத்திற்கு நல்லது.
துலாம் ராசி பெண்ணுக்கு, மகர ராசி ஆணுடன் திருமணம் செய்ய வேண்டும். விருச்சிக ராசி பெண்ணுக்கு கடகம் மற்றும் கன்னி ராசி ஆணுடன் திருமணம் செய்ய வேண்டும். பெண்ணுக்கு தனுசு ராசி இருந்தால் மீன ராசி ஆணுடனும், பெண்ணுக்கு மகர ராசி இருந்தால் கும்ப ராசி ஆணுடனும் திருமணம் செய்வது சிறந்தது. பெண் ராசி கும்பம் என்றால் அந்தப்பெண்ணுக்கு மீன ராசி ஆணுடனும், பெண் ராசி மீனம் என்றால் அந்தப்பெண்ணுக்கு மகர ராசி ஆணுடனும் திருமணம் செய்தால் வசியப்பொருத்தம் நன்றாக அமையப்பெற்று அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
Jathagam Porutham In Tamil With Only Rasi and Star
இதில் பெண் ராசி ஆண்ராசிக்கு பொருத்தமானராசியாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. பெண் ராசி ஆண் ராசிக்குபொருத்தமாக இல்லை என்றால் வசியப் பொருத்தம் இல்லை என்று பொருள்.
ஒருவேளை, வசியப் பொருத்தம் இல்லை என்றாலும், ஆண், பெண் இருவருக்கும் லக்கினத்தில் இருந்து வரும் ஏழாம் பாவம் சிறப்பாக இருந்தால் திருமணம் செய்யலாம். பெரும்பாலும் இந்த வசியப் பொருத்தம்யாருக்கும் சரியாக அமையாது. இது நடைமுறை உண்மை.
வாழ்க்கையில்சலிப்பு தோன்றாமல் இருப்பதற்குத்தான் வசியப் பொருத்தமே பார்க்கப்படுகிறது. இந்த வசியப் பொருத்தம்நல்லபடி அமையவேண்டுமென்றாலும், வசியப் பொருத்தமே இல்லாத தம்பதியரும் தரிசிக்க வேண்டிய அற்புதமான தலம் கும்பகோணத்தை அடுத்த உப்பிலியப்பன் கோயிலாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu