ஜாதக கட்ட விளக்கம் எப்படி என்று பாருங்கள்..! நீங்களே கணிக்கலாம்..!

ஜாதக கட்ட விளக்கம் எப்படி என்று பாருங்கள்..! நீங்களே கணிக்கலாம்..!
X

jathagam kattam vilakkam in tamil-ஜாதக ராசிக்கட்டம்.

Tamil Jathagam Kattam Full Details -ஒருவருக்கு ஜாதக கட்டம் எப்படி அமைக்கப்படுகிறது? அதனால் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் குறித்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

ஜாதகக்கட்ட விளக்கம்

Tamil Jathagam Kattam Full Details-ஜாதக கட்டங்கள் கோள்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றுவதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. அதை சதுர கட்டங்களாக வடிவமைத்து ஒவ்வொரு கட்டங்களிலும் ஆட்சி செய்யும் கிரகங்களின் அடிப்படையில் ஜாதகம் கணிக்கப்படுகிறது. கடிகாரச் சுற்று அடிப்படையில் கட்டங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன.

லக்கினம் திரிகோணம் கேந்திரம் என்றால் என்ன?

ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஜோதிடர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு வீடு என்பார்கள். லக்கினம் ஜாதக கட்டத்தில் "ல" என்று குறிப்பிட்டுருப்பார். அது எங்கு உள்ளதோ அதுவே முதலாம் வீடு மேஷ ராசி அதிலிருந்தே 2,3,…12ம் வீடு வரை மற்ற கிரகங்களில் அமைப்புகளை கணக்கிடனும்.

திரிகோணம்

திரிகோணம் என்பது லக்கினத்திலிருந்து 1, 5, 9 ஆகிய வீடுகள் ஆகும்.

கேந்திரம்

கேந்திரம் என்பது லக்கினத்திலிருந்து 1 , 4 , 7, 10 ஆகிய வீடுகள் ஆகும்.

மறைவு ஸ்தானம்

இதில் மறைவு ஸ்தானம் என்பது 3, 6, 8, 12 ஆகும். பொதுவாக இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் பலம் குறைந்து காணப்படும். இருப்பினும் இதில் சில கிரகங்களுக்கு விதி விலக்கு உண்டு.

எடுத்துக்காட்டாக சுக்ரன் 12ம் வீட்டில் இருந்தால் மறைவாகாது. மாறாக நல்ல பலன்களையே தருவார். அதுபோல சூரியன் 3, 6 ம் வீட்டில் அமைவதாகும்.

இதில் முதலாம் வீடு, திருகோண அமைப்பு மற்றும் கேந்திர அமைப்பையும் பெறுகிறது. ஆதலால் முதல் வீட்டில் எந்த கிரகம் நின்றாலும் அது மிகுந்த பலத்துடன் இருக்கும். இதுவே கேந்திர திரிகோண அமைப்பாகும்.

2 மற்றும் 11 ஆம் வீடுகளில் இருந்தால் நல்ல பலனையே தரும். இதில் 11ம் வீட்டில் சுபர் பாவ கிரகங்கள் எவை இருந்தாலும் நன்மையை மட்டுமே செய்யும்.

3 ம் வீடுகளில் கிரகங்கள் அமைவது சுமாரான பலன்களை மட்டுமே தரும்.

6 ,8 ,12 ம் வீடுகளில் கிரகங்கள் அமர்வது அவ்வளவு சிறப்பித்து சொல்ல முடியாது. சுப கிரகங்கள் இந்த வீடுகளில் இருந்தாலும் அதனால் ஜாதகருக்கு நல்ல பலன்களை வழங்க முடியாது. இருப்பினும் மேற்கூறியவாறு இதில் விதி விலக்கும் உண்டு. சுக்ரனுக்கு மட்டும் 12ம் வீடு மறைவு வீடாகாது. அதுபோல சூரியன் 3 மற்றும் 6 ம் வீடுகளில் அமர்வது நல்லதாகவே பார்க்கப்படுகிறது. மேலும் 6, 8, 12 ம் இடத்தில் குரு பார்வை இருப்பின் பலன்கள் மாறுபடும்.

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால் அல்லது மறைவு வீடுகளில் இருந்தால் பகை கிரங்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தால் அந்த கிரகம் சரியாக இல்லை என்று பொருள்.

ஒவ்வொரு லக்கினத்தையும் நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள் என்று வரையறுத்து வைத்துள்ளனர்.

திருமண பொருத்தம் பார்க்கும் முறை

நெருப்பு ராசிகள்

மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசிகள் ஆகும்.

நிலம் ராசிகள்

ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவை நிலம் ராசிகள் ஆகும்.

காற்று ராசிகள்

மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை காற்று ராசிகள் ஆகும்.

நீர் ராசிகள்

கடகம் விருச்சிகம், மீனம் ஆகியவை நீர் ராசிகள் ஆகும்.

லக்கினங்களை சரம், ஸ்திரம், உபயம் என்று வகைப் படுத்தலாம்.

சர ராசிகள்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியன சர ராசிகள் ஆகும்.

ஸ்திர ராசிகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியன ஸ்திர ராசிகள் ஆகும்.

உபய ராசிகள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன உபய ராசிகள் ஆகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி