அது என்னங்க ஜாதக கட்டம்..? கட்டம் சொல்றதுதான் நடக்குமுங்கோ..! எப்பிடின்னு பாருங்க..!
jathagam kattam in tamil-ஜாதக கட்டம்.
ஜாதகம், ஒரு பொது விளக்கம்
jathagam kattam in tamil-ஒருவரின் ஜாதகம் என்பது அவரின் தனித்துவமான பிறப்பை விளக்கும் வரைபடமாகும். இதன் மூலம் அவரின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், ஏன் எதிர்காலத்தையும் பற்றி அறிந்து கொள்ளவும் முடியும். ஒரு குறிப்பிட்ட ஜாதகம் அவரின் உடல், மனம், உணர்ச்சி மற்றும் அவரது சிந்தனை ஆற்றல் போன்றவற்றை கணிக்கும் திறவுகோலாக இருக்கிறது.
ஒரு ஜாதகத்தின் அல்லது ராசிக்கட்டத்தின் அமைப்பு எப்படி இருக்கும்? தெரிஞ்சுக்கங்க..!
ராசி என்பது வான மண்டலத்தில் 360டிகிரி கொண்ட ஒரு நீள்வட்ட அமைப்பு ஆகும். அதாவது கோள்கள் சுற்றிவரும் பாதை. அந்த நீள்வட்டப்பாதையின் 360 டிகிரியை 12 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அதை 12 வட்டங்களாக பயன்படுத்துவதைவிட சதுரமாக அதாவது கட்டமாக அமைப்பது எளிதாக்க இருக்கும். அந்த 12 கட்டங்களே ஜாதகக் கட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதனையே நாம் ராசிக் கட்டம் என்று கூறுகிறோம்.
இந்த பன்னிரண்டு கட்டங்களும் விலங்கு மற்றும் பிற உருவ அமைப்பில் சித்தரிக்கப்படுகின்றன. இந்த பன்னிரண்டு கட்டங்களும் நிலையாக இருக்கும். இந்தக் கட்டங்களில் கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை சுற்றி வரும் வேகத்திற்கேற்ப, மாத கிரகங்கள், வருட கிரகங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த வீடுகள் ஒன்று முதல் பன்னிரண்டு வரையிலான எண்களில் குறிப்பிடப்படுகின்றன. முதலாம் வீடு லக்னம் என்று அழைக்கப்படுகின்றது.அதை கடிகாரச் சுற்று முறையில் (clockwise)இந்த எண்கள் ஏறுவரிசையில் குறிக்கப்படுகின்றன. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் கோள்கள் அல்லது கிரகங்கள் இருக்கும் தீர்க்காம்சத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவற்றிற்குரிய கட்டங்களில் நிரப்பப்படுகின்றன.
கிரகங்கள்
பிறப்பு ஜாதகம் மூலம் ஒருவர் பிறந்த நேரத்தில், ஜோதிடத்தில் கூறப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் நிலைகளை அறியலாம். ஜாதகம் என பிரபலமாக அறியப்படும் இது, ஒருவரின் பிறந்த இடம் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிரகங்களின் நிலைகளை குறிக்கின்றது. ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் கிரகங்களின் அமைப்பைக் குறிக்கின்றது. அந்த அமைப்பிற்கேற்ப நமது வாழ்க்கை நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஜாதகம் எப்படிப்பார்ப்பது ?
ஒருவரின் ஜாதகத்தினை சரியாக ஆராய்ந்து கணிப்பதன் மூலம் அவரைப் பற்றிய பெரும்பாலான விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து கணிப்பது என்பது விரிவான ஒரு ஆய்வுமுறை ஆகும். இங்கு நாம் ஓரு ஜாதகத்தை எவ்வாறு பார்ப்பது என்பதை பார்ப்போம் வாங்க.
ஜாதககட்டத்தில் "ல" அல்லது "லக்" என்று எழுதப்பட்டிருக்கும் வீடு தான் முதல் வீடு அல்லது லக்னம் என்று அழைக்கபடுகிறது. இங்கிருந்து தான் கடிகாரச் சுற்றில் ஏறு வரிசையில் வீடுகளை எண்ண வேண்டும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் அந்த ராசிக்குரிய ஒரு சின்னம் இருக்கும். இந்த சின்னம் மற்றும் வீடுகளின் பெயர்கள் நிலையான ஒன்றாகும்.
jathagam kattam in tamil-கடிகாரச் சுற்று முறையில் எண்ணி, தீர்காம்சத்திற்கேற்ப சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுள் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த வீட்டில் உள்ளன என்று அறிந்து அமைக்க வேண்டும்.
இறுதியாக ஒன்பது கிரகங்களும் எந்தெந்த வீட்டில் உள்ளன என்பதை அறிய வேண்டும்.
இவையே ஒரு ஜாதகத்தின் அடிப்படை விஷயங்கள் ஆகும். இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து ஜோதிட அறிவை பயன்படுத்தி நுணுக்கங்களை ஆராய்ந்து வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்குரிய பலன்களை கணித்து அளிக்க வேண்டும். இது அனுபவத்தின் வாயிலாக பெரிய நிபுணத்துவம் பெறமுடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu