பிறந்த தேதியில் இருந்து ஜாதக கட்டம் எவ்வாறு அமைக்கப்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!

jathagam kattam from date of birth-ஜாதக கட்டம்.
jathagam kattam from date of birth-ஜாதக கட்டம் என்பது ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் கிரக நிலைகளைக் காட்டும் பிறப்பு விளக்கப்படமாகும். ஜாதகம் கட்டம் என்பது தமிழ் ஜாதகத்தின் அடிப்படையில் எதிர்காலம், ஒருவரது பண்பு, அவே என்ன தொழில் செய்வார், படிப்பு, அவருக்கு அமையும் மனைவி போன்ற பல வாழ்க்கை நிகவுகளை ஆராய உதவுகிறது.
தமிழில் பிறந்த தேதியிலிருந்து ஜாதகம் கட்டம் உருவாக்குவது எப்படி?
தமிழ் ஜோதிடம் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் போன்றவைகளின் அடிப்படையில் கட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. லக்கினம் மற்றும் ராசிகளை அடிப்படையாக கொண்டு 12 கட்டங்களை ஜோதிடர்கள் உருவாக்குகிறார்கள். 'லக்' என்று கட்டத்தில் இருந்து கடிகார சுற்று முறைப்படி கட்டங்களை வரிசைப்படுத்தி கிரக நிலைகளை ஆய்வு செய்து ஜாதகம் எழுதுகின்றனர். ஜாதகத்தின் கிரக நிலைகளை கவனமாக பகுப்பாய்வு செய்து எழுதப்படுவது ஜாதக பலன்கள் என அழைக்கப்படுகிறது.
பிறந்த தேதியிலிருந்து தமிழில் ஜாதகம் கட்டம், இது கிரகங்களின் சரியான நிலை மற்றும் எந்தெந்த காலகட்டத்தில் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள், நல்லது, கெட்டது போன்றவைகள் சரியாக கணிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu