jathagam kattam-கட்டம்தாங்க வாழ்க்கையை தீர்மானிக்கிறது..! ஆமாங்க..ஜாதக கட்டம்தான்..!

jathagam kattam-கட்டம்தாங்க வாழ்க்கையை தீர்மானிக்கிறது..! ஆமாங்க..ஜாதக கட்டம்தான்..!
X

jathagam kattam-ஜாதக கட்டம் (கோப்பு படம்)

jathagam kattam-ஒருவரின் ஜாதகம் என்பது அவரின் தனித்துவமான கர்ம வரைபடம் என்று கூறலாம். இதன் மூலம் அவரின் கடந்த காலம், நிகழ்காலம் பற்றி அறியலாம். எதிர்காலத்தை ஆராய்ந்து முன்கூட்டியே அறியலாம்.

ஒரு ஜாதகத்தின் ராசிக்கட்ட அமைப்பு எப்படி இருக்கும்?

jathagam kattam-ராசி என்பது வான் மண்டலத்தில் 360 டிகிரி கொண்ட ஒரு நீள்வட்ட வடிவ அமைப்பு ஆகும். இந்த 360 டிகிரி 12 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. வட்ட வடிவில் அமைப்பதை விட கட்டமாக அமைப்பதால் எளிதில் புரியும் என்பதால் 12 கட்டங்களை அமைத்து ஜாதகக் கட்டம் அமைக்கப்படுகின்றது. இதனையே நாம் ராசிக் கட்டம் என்று கூறுகிறோம்.

இந்த பன்னிரண்டு கட்டங்களும் விலங்குகள் மற்றும் பிற உருவ அமைப்புகளில் சித்தரிக்கப்படுகின்றன. இந்த பன்னிரண்டு கட்டங்களும் நிலையாக இருக்கும். இந்தக் கட்டங்களில் கிரகங்கள் மட்டும் சுற்றி வருகின்றன. அவை சுற்றி வரும் வேகத்திற்கேற்ப, மாத கிரகங்கள், வருட கிரகங்கள் என்று கூறப்படுகின்றன.

இந்த 12 கட்டங்களை வீடுகள் என்கிறோம். அதற்கு ஒன்று முதல் பன்னிரண்டு எண்களில் வரிசை எண்கள் கொடுக்கப்படுகின்றன.

முதலாம் வீடு லக்னம் என்று அழைக்கப்படுகின்றது. கடிகாரச் சுற்று முறையில், இந்த எண்கள் ஏறுவரிசையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் கோள்கள் அல்லது கிரகங்கள் இருக்கும் தீர்க்காம்சத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவற்றிற்குரிய கட்டங்களில் நிரப்பப்படு கின்றன.

jathagam kattam


பிறப்பு ஜாதகம் மூலம் ஒருவர் பிறந்த நேரத்தில், ஜோதிடத்தில் கூறப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் நிலைகளை அறிய இயலும். ஜாதகம் என பிரபலமாக அறியப்படும் இந்த வரைமுறை ஒரு நபரின் பிறந்த இடம் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிரகங்களின் நிலைகளை குறிக்கின்றது. உங்கள் ஜாதகம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் கிரகங்களின் அமைப்பைக் குறிப்பதாகும். அந்த அமைப்பிற்கேற்ப நமது வாழ்க்கை நிகழ்வுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கின்றது.

ஒரு ஜாதகத்தை எப்படி படித்துப் பார்ப்பது ?

ஒருவரின் ஜாதகத்தினை சரியாக ஆராய்ந்து கணிப்பதன் மூலம் அந்த நபரைப் பற்றிய பெரும்பாலான விஷயங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து கணிப்பது என்பது விரிவான செயல் முறை ஆகும். இங்கு நாம் ஓரு ஜாதகத்தை எவ்வாறு வரிசைக் கிரமப்படுத்தி படிப்பது அல்லது பார்ப்பது என்பதை இங்கு காணலாம்.

உங்கள் ஜாதகத்தில் "ல" அல்லது "லக்" என்று எழுதப்பட்டிருக்கும் வீடு தான் முதல் வீடு அல்லது லக்னம் என்று அழைக்கபடுகிறது. இங்கிருந்து தான் கடிகாரச் சுற்றில் ஏறு வரிசையில் வீடுகளை எண்ண வேண்டும்.

மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு சின்னம் இருக்கும். இந்த சின்னம் மற்றும் வீடுகளின் பெயர்கள் மாறாத , நிலையான ஒன்றாகும்.

கடிகாரச் சுற்று முறையில் எண்ணி, தீர்க்காம்சத்திற்கேற்ப சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுள் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த வீட்டில் உள்ளன என்று அறிந்து அமைக்க வேண்டும்.

jathagam kattam

இறுதியாக ஒன்பது கிரகங்களும் எந்தெந்த வீட்டில் உள்ளன என்பதை அறிய வேண்டும்.

இவை ஒரு ஜாதகத்தின் அடிப்படை விஷயங்கள் ஆகும். இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து உங்கள் ஜோதிட அறிவை பயன்படுத்தி நுணுக்கங்களை ஆராய்ந்து வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்குரிய பலன்களை கணித்து ஜாதகருக்கு வழங்க வேண்டும்.

Tags

Next Story