அல்லாஹ்வின் அருளைத்தேடுங்கள்..! எல்லாமே வெற்றியாகும்..!
Islamic Quotes in Tamil
Islamic Quotes in Tamil
இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் சலாம் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேர் எழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். இந்த சொல் முழுமையானவொன்று, சரணடைதல், பிழையில்லாதவொன்று, நேர்மை, பாதுகாப்பு, ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிப்பதாக உள்ளது.
இஸ்லாமிய வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைப்பற்றிய ஆய்விற்கு "இஸ்லாமிய உலகு" மற்றும் "இஸ்லாமிய சமுகம் அல்லது உம்மாஹ்" ஆகிய கருதுகோள்கள் பற்றிய புரிதல் பயனுள்ளதாகும். இஸ்லாமிய உலகு என்பது தனியே முஸ்லிம்களை மாத்திரம் குறிக்கவில்லை. மாறாக இதர சமயங்களை பின்பற்றுவோரும் அதில் உள்ளடங்கியிருந்தனர். எனினும் இஸ்லாமிய உம்மாஹ் என்பது முஸ்லிம்களை மட்டுமே குறிக்கின்றது. நமது வாசகர்களுக்காக இஸ்லாமிய மேற்கோள்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
- நிலை குலையாத பொறுமை யாளர்களை, இறைவன் நேசிக்கிறான்.
- யாராவது உன்னிடம் உள்ள, குறைகளை சொல்லி திட்டினால். நீ அவனுடைய குறைகளை சொல்லி, திட்டாதே.
- நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் சாத்தானின் தன்மையாகும்.
- யார் மக்களுக்கு, கருணை காட்டுவது இல்லையோ, அவருக்கு, இறைவனும் கருணை காட்டுவதில்லை.
- தர்மம் செய்வதில், தீவிரமாக இருங்கள், ஏனெனில் தர்மத்தை தாண்டிக்கண்டு, துன்பங்கள் உங்களை வந்து அணுகாது.
- யாசகம் கேட்பவரை, ஒருபோதும் வீரட்டாதீர்கள்.
- உங்கள் வீடுகளில், இறைவனுக்கு மிக விருப்பமானது. அனாதைகளை அரவணைக்கும் வீடு ஆகும்.
- மண்ணில்லுள்ள மனிதர்களை, நீங்கள் நேசித்தால், விண்ணிலுள்ள இறைவன், உங்களை நேசிப்பான்.
- தான தர்மங்கள் செய்வதினால், செல்வம் குறைவதில்லை.
- செயல்கள் அனைத்தும், எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன, மேலும் ஒரு மனிதன் எதனை எண்ணுகிறான், அதுவே அவனுக்கு உரியதாகும்.
- யார் ஒருவர், இறைவனுக்கு அஞ்சி நடக்கிறாரோ, அவருக்கு ஒவ்வொரு சங்கடத்தில் இருந்து, வெளியேறும் வழியை, அவன் உருவாக்குவான்.
- இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன், எனவே எவருடைய பரிந்துரையின்றி, அவனை நேராக நெருங்க முடியும், அவனிடம் உதவி கேட்கவும் முடியும்.
- மனிதன் தன்னுடைய நண்பனின் வழி எதுவோ, அதில் தான் இருப்பான். எனவே நட்பு கொள்ளும் முன், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதை கவனித்து, நட்பு கொள்ளுதல் வேண்டும்.
- தாயின் காலடியில், சொர்க்கம் இருக்கிறது.
- ஒருவரது உள்ளத்தில், அணுவளவு கர்வமும் அகந்தையும் இருக்குமானல், அவர் சுவனத்தில், நுழைய மாட்டார்.
- இறை நம்பிக்கை கொண்டவர்களே, பன்மடங்கு பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள், நீங்கள் வெற்றி பெறக்கூடும்.
- உங்களுக்கு விரும்புவதை, பிறருக்கும் விரும்பாதவரையில், நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆகமுடியாது.
- உங்களில் ஒருவன் தீய செயல்களை கண்டால், தனது கையால் அதனை தடுக்கட்டும். அதற்கு இயலவில்லை எனில் தனது நாவால் கலையட்டும். அதற்கும் இயலவில்லை எனில் தனது மனதால் அதை வெறுக்கட்டும். இதுவே இறை விசுவாசத்தின், கடைசி நிலை.
- உண்ணுங்கள், பருகுங்கள், அணியுங்கள், மேலும் தர்மம் செய்யுங்கள். அதில் பெருமை வீண்விரயம் கலந்துவிடாமல், இருக்கும்வரை.
திண்ணமாக இறைவன், உங்களுடைய தோற்றங்களையும் செல்வங்களையும் பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும், கவனிக்கிறான்.- உனது மனைவிக்கு, நீ ஒரு வாய் உணவு அன்போடு ஊட்டுவதற்கும், இறைவனிடத்தில் நன்மை உண்டு.
- நல்லெண்ணம் கொள்வது, இறைவழிபாட்டின் ஒரு அங்கமே ஆகும்.
- பெண்களிடம், நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
- இறைவனே ஒவ்வொரு பொருளையும் படைத்த பிறகு, அவை ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு, விதியை உருவாக்கினான்.
- ஒரு வினாடி, நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விட, சிறந்தது.
- செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துரத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால், அவளை மணப்பார். எனவே ஒருவரின் ஹிஜ்ரத் (துரத்தல்) எதை நோக்கமாகக் கொண்டதோ, அதுவாகவே அமையும் என்று இறைத்தூதர் முஹம்மது நபி அவர்கள், கூறினார்கள் என உமர் இப்னு கத்தாப் (ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். (புகாரி, வசனம்: 1)
- உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் தன மனைவியிடம் சிறந்தவரோ அவரே.
- அனாதைகளின் சொத்துக்களை அந்நியமாக உண்போர் தமது வயிற்றில் நெருப்பையே உண்கின்றனர்.
- கஃபா (அபய பூமி)
- (இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் "என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்" என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். அல்குர்ஆன் 2:125
- அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:97
- நினைவு கூறுங்கள்! "என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்). அல்குர்ஆன் 14:35
- உலகில் முதன் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பபட்ட ஆலயம் கஃபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.
- கஃபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்து பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
- தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். அல்குர்ஆன் 5:67
- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏரளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்ச்சிகள் நடந்தன.
- அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கைவில்லை. குடிசையில் தான். வசித்தார்கள். வாயிற் காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்க்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.
- போர்க் களங்களிலும் பங்கெடுத்து, கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. "உம்மை இறைவன் காப்பான்" என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது.
- இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிருபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.
- இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கான நிருபணம்.
- என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதரணமாக உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்து போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.
அன்றைய நிலையில் இவரைப்போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து, தாம் கூறுவது இறைவாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிருபித்தார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- islamic quotes in tamil
- Quran Quotes in Tamil
- islamic quotes in tamil language
- quran quotes in tamil
- allah tamil quotes
- quran quotes tamil
- dua quotes in tamil
- nabi quotes in tamil
- islamic quotes about life with images in tamil
- islamic love quotes in tamil
- dharmam quotes in tamil
- prayer quotes in tamil
- helping quotes in tamil
- quran words in tamil
- quran verses in tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu