indraya rasi palan tamil-மீன ராசிக் காரர்களுக்கு இன்று காதல் இனிக்கும்..! (இன்றைய 31-01-2023, ராசிபலன்)
indraya rasi palan tamil-இன்றைய (31-01-2023, செவ்வாய் கிழமை) ராசிபலன். (கோப்பு படம்)
Meenam Rasi Palan Today in Tamil- நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி மனிதர்களிடம் இல்லை. ஆனால் வேதத்தின் அடிப்படையாக விளங்கும் ஜோதிடம் நாளைய தினத்தின் பலனை கூறும் சாத்தியத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
அதன் மூலம் ஒரு நாள் முன்கூட்டியே திட்டமிட்டால் நமக்கு ஏற்படும் பல பிரச்னைகளை தவிர்க்க முடியும். நமது சுப பலனை இன்று அறிவதன் மூலம் நம்முள் கரை புரண்டு ஓடும் உற்சாகம் நமக்கு நம்பிக்கையை அதிகரிக்கும்.
ராசி பலன் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் நம்பிக்கை நாளாக தொடங்குவதற்கான ஒரு ஆன்மீக வழிமுறையாகும். நல்லதே நடக்கும் என்ற நேர்மறை சிந்தனை பல நல்ல விளைவுகளைக் கொண்டுவரும். அதன்படி இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இன்று (31.01.2023- செவ்வாய் கிழமை)நல்ல நேரம்
காலை – 6.30 – 7.30
மாலை – 4.30 – 5.30
ராசி பலன்
மேஷம்
இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் காரியத்தை சிரமப் பட்டு முடிக்க நேரிடும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் ஓரளவு குறையும்.
உங்கள் துணை உங்களை உதாசீனப் படுத்துவதன் காரணமாக உங்களுக்கு அவர் மீது எரிச்சல் ஏற்படும்.உங்கள் கோப உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துவீர்கள்.
indraya rasi palan tamil
ரிஷபம்
இன்றைய தினம் உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
உங்களுக்கும்; உங்கள் துணைக்கும் இடையேயான புரிந்துணர்வு குறைவாக இருப்பதால் அவரிடம் உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
மிதுனம்
இன்றைய தினம் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். நல்ல புரிந்துணர்வையும் அனுசரனையான அணுகுமுறையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
indraya rasi palan tamil
கடகம்
இன்றைய தினம் உறவினர்களால் மன சங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைப் பளு குறையும்.
உங்கள் மனது உணர்ச்சிக்குட்பட்ட நிலையில் இருக்கும். அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். அது உங்கள் உறவை வளர்க்க உதவும்.
சிம்மம்
இன்றைய தினம் குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புகள் உருவாகலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். கொடுத்த கடன் வசூலாகும்.
நீங்கள்இன்று மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். உங்கள் துணையிடத்தில் அந்த உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இதனால் அவருடன் உங்களுக்கு நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.
கன்னி
இன்றைய தினம் உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் இருந்தாலும் அதற்குக்கேற்ப லாபம் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
இன்று உங்கள் துணையுடன் ஒரு இணக்கமான உறவை பராமரிக்க முடியாது. குடும்ப பிரச்னை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
indraya rasi palan tamil
துலாம்
இன்றைய தினம் நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
உங்கள் துணையுடன் கவனமாகப் பழக வேண்டும். உங்கள் இருவருக்கும் இடையேயான பேச்சுக்களில் வாக்குவாதம் ஏற்படலாம்.
விருச்சிகம்
இன்றைய தினம் நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
இன்று மிகவும் கலகலப்பாக காணப்படுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
தனுசு
இன்றைய தினம் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைந்து காணப்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
இன்று மாலை உங்கள் துணையை சந்திப்பீர்கள். இது உங்கள் இருவருக்கும் ஒரு நல்ல சந்திப்பாக அமையும். மகிழ்ச்சி தரும் வார்த்தைகளைப் பேசி உங்கள் துணையை திருப்திபடுத்துவீர்கள். இனிமையான நாளாக அமையும்.
indraya rasi palan tamil
மகரம்
இன்றைய தினம் உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
உங்கள் துணையுடன் பேசும்பொழுது கோபத்தை காண்பிப்பீர்கள். நல்லுறவை பராமரிக்க அத்தகைய உணர்வுகளை தவிர்த்து எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளப் பழகுங்கள்.
கும்பம்
இன்றைய தினம் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கொடுத்த கடன் வசூலாகும்.
நீங்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்படுவீர்கள். அதனை உங்கள் துணையிடமும் வெளிப்படுத்துவீர்கள். அதனால் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படலாம். இதனால், மகிழ்ச்சியை இழக்கும் நிலை ஏற்படும். அதை தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
மீனம்
இன்றைய தினம் உங்களுக்கு இருந்த பணப்பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் தேக்க நிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் துணையுடன் தார்மீக நெறிமுறைகளை கையாள்வீர்கள். இதனால் அவரை நீங்கள் நன்றாக புரிந்துகொள்வீர்கள். இருவருக்குள்ளும் மகிழ்ச்சி நிலவும் நல்ல நாளாக இருக்கும். இனிமையான நாளாக அமையும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu