ஆன்லைனில் ஜாதகம் பார்க்கணுமா..? அப்ப இதை பாருங்க..!

ஆன்லைனில் ஜாதகம் பார்க்கணுமா..? அப்ப இதை பாருங்க..!
X

hosuronline jathagam-ஆன்லைன் ஜாதகம் (கோப்பு படம்)

ஒரு காலத்தில் ஜோதிடரைத் தேடிச் சென்று ஜாதகம் பார்த்தோம். ஆனால் தற்போது வீட்டில் இருந்துகொண்டே நமது ஜாதகத்தை ஆன்லைனில் பார்த்துவிடலாம்.

Hosuronline Jathagam

ஒருவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரை நேரடியாக சந்தித்து ஜோதிடம் பார்ப்பதே வழக்கம். ஜோதிடர் அதைப் பார்த்து கணக்கிட்டு அதற்கேற்ப கணித்து சொல்வதுண்டு. ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் ஆன்லைன் ஜோதிட முறை பிரபலமாகி வருகிறது. இதனால் நேரடியாக சென்று ஜோதிடரை சந்திக்கும் சிரமம் இருக்காது. பயனர்களின் நேரம் சேமிக்கப்படுகிறது. இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைனில் தனிப்பட்ட முறையில் ஜோதிட ஆலோசனை பெறலாம்.

பிரச்சனைகள் இருப்பவர்கள் மட்டுமின்றி வருங்காலம் குறித்து தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் ஜோதிட ஆலோசனை பெற உதவும் வகையில் பல்வேறு வலைதளங்கள் உருவாகியுள்ளன. அதில் ஒன்றுதான் hosuronline jathagam.

அடிப்படை பிறப்பு ஜாதகம், 120 ஆண்டுகளுக்கான தசா புக்தி பலன்கள், ஜாதகரின் குணாதிசயம், லக்ன பலன்கள், லக்ன பாவாதிபதி பலா பலன்கள், 16 வகை வர்க்க குண்டலி - பாவ கட்டங்கள், தோஷங்கள், இன்றைய நாளில் வியாழன் (குரு) பலம், என்ன பெயர் வைக்கலாம், பிறந்த விண்மீன் பலன்கள், என அனைத்து தகவல்களும் உள்ளடங்கிய ஏறத்தாழ 30 பக்கங்கள் கொண்ட பிறப்பு ஜாதகம், கட்டணம் ஏதும் இல்லாமல், இந்த நிகழ்நிலை தளம் மூலம் கணிக்கலாம்.

Hosuronline Jathagam

Apakrash Grahas and Upa Grahas in Rasi Chart. அபக்ரஷ் கோள்கள் மற்றும் உப கோள்கள் இராசி கட்டத்தில் இருக்கும் இடம், அஷ்டவர்க்கம் / சர்வாஷ்டக வர்க கட்டம், ஐம்பறவை (பஞ்சபட்சி), எண் கணிதம், குறித்த தகவல்கள்.

தென்னிந்திய தமிழ் முறைப்படி, திருக்கணித ஐந்திறன் நாள் காட்டி (திருக்கணித பஞ்சாங்கம்) பயன்படுத்தி, தமிழில் பிறந்த ஜாதகம் கணிக்கப்படுகிறது.

ஜாதக அமைப்புகள் கணிக்க

5ம் பாவம்

ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் என்பது மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த 5-ம் பாவம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைத்தாலும், புத்தி கூர்மையை எடுத்துக்காட்டும் இடமாக இந்த 5-ஆம் இடமானது இருக்கிறது. வாழ்க்கையில் சோதனையான காலகட்டமாக இருந்தாலும், எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக யோசித்து ஒருவர் எதையும் செய்கிறார் என்றால், அவரின் ஜாதகத்தில் 5-ம் இடமானது சிறப்பாக இருக்கிறது என்று பொருள்.

Hosuronline Jathagam

திருமண வாழ்க்கை

வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான கட்டமாக ஒருவரின் வாழ்க்கையில் இருக்கிறது. கல்வியும், தொழிலும், உத்தியோகமும் எப்படி ஒருவருக்கு தேவையாக உள்ளதோ, முன்னேற்றத்திற்கு உதவியாக உள்ளதோ அதுபோல, திருமணம் என்பது வாழ்க்கையின் முழுமையை தருவதாக இருக்கிறது. கடின முயற்சியால் கல்வியறிவை பெற முடிகிறது. கடின முயற்சியால் தொழிலிலும், உத்தியோகத்திலும் உயர முடிகிறது. ஆனால் திருமண வாழ்க்கை என்பது ஒரு வரமாகவே உள்ளது.

Hosuronline Jathagam

எதிர்காலம் அறிய

மனிதர்களுக்கு தங்களது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தை நம்பாதவர்கள் கூட, எவரேனும் ஒருவர், கடந்தகாலம், நிகழ்காலத்தை சொல்லிவிட்டால், எதிர்காலத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும் கொஞ்சமாவது ஆவல் ஏற்படும். எவருக்கும் தங்களது இப்போதைய நிலவரம் சரியில்லை என்றாலும், எதிர்காலத்திலாவது ஏதேனும் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்காதா? என்று ஏங்கி இருப்பார்கள், பலர் அதற்காக போராடி வருவார்கள்.

Hosuronline Jathagam

சொந்த வீடு

சொந்த வீடு என்பது நம் அனைவருக்குமான கனவு. அந்த கனவு நிறைவேறும் காலம் எப்போது என்று தெரியாமல் இருந்தாலும் என்றாவது ஒருநாள் சொந்த வீடு வாங்கி குடியேறுவோம் என்கிற நம்பிக்கையுடன் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு காரணம், ஜோதிடர் சொன்ன அந்த வார்த்தை, ”நீங்க சொந்த வீடு வாங்குவீங்க” இந்த ஒரு வார்த்தைதான் பலரை உத்வேகத்துடன் உழைக்க வைக்கிறது. சொந்தமாக வீடு வாங்கும் நேரத்தை, சந்தர்ப்பத்தை மிக அருகில் கொண்டு வர ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்

இப்படி பல தேவைகளுக்கு நேரடியாக ஜோதிடரிடம் செல்லாமல் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்