happy diwali wish in tamil-வந்தாச்சு.. வந்தாச்சு.. தீபாவளி..பசுமை பட்டாசு பற்றவைப்போம்..! ஓசை மாசை குறைப்போம்..!

happy diwali wish in tamil-வந்தாச்சு.. வந்தாச்சு.. தீபாவளி..பசுமை பட்டாசு பற்றவைப்போம்..! ஓசை மாசை குறைப்போம்..!
X

happy diwali wish in tamil-தீபாவளி வாழ்த்துக்கள்.(கோப்பு படம்)

happy diwali wish in tamil-தீபாவளி என்றாலே பட்டாசுதான். குழந்தைகள், இளைஞர்கள் என எல்லோருக்கும்..புது துணி இருக்கோ இல்லையோ பட்டாசு இல்லாவிட்டால் தீபாவளியே இல்லை என்பார்கள்.

தீபாவளி அல்லது தீபஒளித் திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம்,ஜைனம் மற்றும் பௌத்தம் மதத்தில் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த பண்டிகை இந்தியா மட்டுமில்லாமல் இலங்கை,சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் அடையாளமாக இந்த பண்டிகை தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டிப்படி அக்டோபர் 17ம் நாளிலிருந்து நவம்பர் 15ம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.


இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். பண்டிகைகள் சமூக ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகவே கொண்டாடப்படுகின்றன. பண்பாட்டு கலாசாரங்கள் பராமரிக்கப்படுவதுடன், சகோதரத்துவம், சமத்துவம் மலர இவைகள் துணைபுரிகின்றன.

  • தீபாவளி நல்வாழ்த்துகள்..! மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க, வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, கொண்டாடுவோம் இந்த தீபாவளியை..!
  • கண்ணைப் பறிக்கும் ஒளியின்றி, காதைப் பிளக்கும் ஒலியின்றி, காற்றின் தூய்மையைக் கெடுக்காமல், கொண்டாடுவோம் தீபாவளி..! தீபாவளி நல்வாழ்த்துகள்..!
  • தீபங்கள் ஏற்றி.. பட்டாசு வெடித்து, பபுத்தாடை அணிந்து மனதினில் மகிழ்ச்சி பொங்க..இனிய தீபாவளி வாழ்த்துகள்..!
  • ஆண்டுதோறும் வரும் தீபஒளித்திருநாளில் துன்பம் தூரப் போகட்டும்.. நம்மைச் சூழும் சூழ்ச்சிகள் எல்லாம் சூறாவளியாய் சுக்கு நூறாகட்டும்.. தீமைகள் தீண்டாமல் தீயில் வேகட்டும்..நலமே நன்மைகள் பல பெருகட்டும்..இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.
  • இறைவன் நமக்கு எல்லா வளங்களும், ஆரோக்கியமும் அள்ளி வழங்கட்டும்..! சந்தோசம் என்றும் நமதாகட்டும்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!

happy diwali wish in tamil

  • உள்ளத்தில் குடியிருக்கும் இருள் அகலட்டும்.. உள்ளங்கையில் ஏந்திய தீப ஒளி இருளை அகற்றட்டும்..! இல்லாதோருக்கு நம்மிடம் இருப்பதை மனமுவந்து கொடுப்போம்..தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் கூறுவோம்..!
  • பசுமையான நினைவுகளுடனும், பசுமைப் பட்டாசுகளுடனும் இந்த நாளைக் கொண்டாடுவோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
  • குடும்பத்தில் மகிழ்ச்சி என்னும் ஒளி மலர்ந்து உள்ளத்தின் இருள் அகலட்டும்..! உறவுகளுக்குள் நிலைத்த அன்பு உருவாகட்டும்..அதற்கு இந்த தீபாவளி ஒருநன்னாளாக அமையட்டும்..! தீபாவளி நல் வாழ்த்துகள்..!
  • வாழ்க்கையின் துன்பங்கள் எல்லாம் கரைந்துபோக, ஒளிமயமான எதிர்காலம் தீபாவளி விடியலில் பிறக்க, வீடெல்லாம் தீப ஒளிச் சுடர் வெளிச்சமாக்க..இந்த தீபாவளி திருநாள் மகிழ்ச்சியாக அமைய, இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

happy diwali wish in tamil

  • சின்னஞ் சிறுவர்கள் இன்று ஒருநாள் போலீசாக மாறி துப்பாக்கியால் சுடும் நாள்..பொட்டு வெடிகொண்டு பொட்..பொட்டென்று சிறுவர்கள் வெடித்து மகிழும் இந்த தீபத் திருவிழாவில் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
  • இந்த தீபாவளி நமது வாழ்வில் மகிழ்ச்சியை மட்டுமே வழங்க இறைவனை வேண்டுவோம்..! கருணை உள்ளம் கொண்டு மனிதம் வாழ இல்லாதோருக்கு உதவி செய்வோம்..அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்..!
  • எமது மனதில் இருக்கும் சிறுமைகளை தூக்கி எறிவோம்..பரந்த உள்ளம் கொண்டு..உலகை நேசிப்போம்..! சுகாதார வாழ்க்கை வாழ பசுமை பட்டாசுகள் வெடிப்போம்..ஒலி மாசு குறைய குறைந்த சத்தம் வரும் பட்டாசுகளை வெடிப்போம்..மனைகள்தோறும் மங்களம் பொங்கட்டும்.. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்..!

happy diwali wish in tamil

  • பிரிவினைகள் இங்கு பட்டாசுகளாக பொசுங்க வேண்டும்..சமத்துவம் என்னும் இனிப்புகள் பரிமாறவேண்டும். ஜாதிகள் எம்மில் தொலைந்திடவேண்டும்..மனிதம் என்றும் வாழ்ந்திடவேண்டும்..உள்ளத்தின் இருகளன்று வெளிச்சம் பரவிடவேண்டும்..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
  • ஆயிரக்கணக்கான விளக்குகள் வாழ்க்கையை வெளிச்சமாக்க தேவையில்லை..! ஒரு சிறிய உதவி மற்றொருவருக்கு பேரின்பம் தரும் உதவியாக இருக்கும்..பிறர் துன்பம் போக்க எண்ணும் அந்த வெளிச்சமே முடிவில்லாத மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு எல்லாம் கொண்டுவரும்..! மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
  • குழந்தை சிரிப்பில் மட்டுமே இருப்பது மகிழ்ச்சியல்ல...பிறர் சிரிப்பில் காணும் இன்பமே நிலையானது..! கருணை, இரக்கம், அன்பு நிறைந்த உள்ளமே இருளகன்ற ஒளி உள்ளம்..! அந்த ஒளியோடு தீபத் திருநாளை கொண்டாட இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

happy diwali wish in tamil

  • பிறருக்கு தீங்கு எண்ணாத உள்ளம் தாராய்..மனிதம் வளர்க்கும் மனதை தாராய்..இருளை அகற்றும் ஒளியைத் தாராய்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
  • தீபத் திருநாளில் நமது தீய எண்ணங்கள் தீயாய் எரிந்து போகட்டும்..! நல்லெண்ணங்கள் நன்மையாக விளையட்டும்..மகிழ்ச்சி நம் வீடுகளில் ஓங்கட்டும்..இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்..!
  • பலகாரங்கள் பகிர்வோம்..உறவுகளை வளர்ப்போம்..மதங்களை கடந்த சகோதரத்துவம் செழிக்க அன்பு செலுத்தி வாழ்வோம்..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
  • நட்புடன் உறவினை வளர்ப்போம்..எண்ணெய் குளியலை காலையில் முடிப்போம்..சொந்தங்கள் சூழ தீபம் ஏற்றுவோம்..புத்தாடை அணிந்து பலகாரம் பகிர்வோம்..மகிழ்ச்சியை நமதாக்குவோம்..இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்..!

happy diwali wish in tamil

  • குழந்தைகள் குதூகலிக்க கலசங்கள் பற்ற வைப்போம்..மத்தாப்பு பொறிகளை சீறவைப்போம்..தீமைகள் கருகிட..ஓங்கியுரைப்போம்..வையகம் வாழ்த்திட தீபம் ஏற்றுவோம்..தீபத்திருநாள் கொண்டாடுவோம்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
  • உறவாடும் உள்ளங்கள் மகிழவே..குடும்பங்கள் கொண்டாடும் உறவுகள் எழுகவே..குழந்தைகள் குதூகலம் பொங்கவே..பட பட..பட்...பட்..பட்டாசு வெடிக்கவே இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்..!
  • எம்முடன் வாழும் பறவைகள், விலங்குகள் போற்றனும் தம்பி..! அவைகள் அச்சம் இன்றி நம்முடன் வாழ்வதை உறுதியும் செய்யணும் பாப்பா..! அதிக சத்தம் வேண்டாம்..அவைகள் அஞ்சுமே..! கருணை கொண்டால் உலகில் அன்பு மிஞ்சுமே..! அதிக சத்தம் கொண்ட பட்டாசு வேண்டாம்..புத்தாடை அணிவோம்..இனிப்புகள் உண்போம்..இரவினில் ஓசையில்லா கலசங்கள் கொளுத்துவோம்..மத்தாப்பு சுற்றுவோம்..இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்..!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!