குரு மந்திரம் சொல்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்..? தெரிஞ்சுக்கங்க..!

Guru Brahma Guru Vishnu Tamil
X

Guru Brahma Guru Vishnu Tamil

Guru Brahma Guru Vishnu Tamil-தினமும் குரு மந்திரத்தை உச்சரித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பாருங்கள்.

Guru Brahma Guru Vishnu Tamil-மாதா.பிதா, குரு தெய்வம் என்பதில் தெய்வத்திற்கு முன்னதாக குரு இருந்தே குருவின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும்.

குரு பகவான் மந்திரம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா

தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

இந்த மந்திரம் நவகிரகங்களில் உள்ள குரு அல்லது வியாழன் கிரகத்தையும், சிவ பெருமானின் இன்னொரு உருவான "தட்சிணாமூர்த்தியையும்" மற்றும் நமக்கு கல்வி மற்றும் வேறு கலைகள் ஏதாவது கற்றுத் தரும் ஆசிரியர்களையும் குருவாக போற்றுகிறது. இதை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பாடலாம். என்றாலும் வியாழன் அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் 108 முறை கூறி வழிபட நீங்கள் புதிதாக கற்றுக்கொள்ளும் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். மேலும் "பிரம்மா, விஷ்ணு, சிவன்" என்ற மூன்று கடவுளர்களின் ஆசியும் கிடைக்கும்.

உலகில் பிறந்த அனைவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை தானாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக கல்வி மற்றும் கலைகள் அனைத்தையும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அல்லது குருக்களிடம் பணிவாக இருந்து கற்றுக்கொள்ளும் எவரும் தங்களின் வாழ்வில் சிறந்து விளங்குகிறார்கள். புதிதாக எதையாவது கற்றுக்கொள்பவர்கள் இந்த மந்திரத்தை கூறி வழிபடுவதால் நாம் நமது குருவிற்கு அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து நாம் அனைத்திலும் வெற்றியடைய "பிரம்மா, விஷ்ணு, சிவன்" என்கிற மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story